கொடை கொடுத்த கூத்தியர்
கொடை கொடுத்த கூத்தியர்
கோயில்களில் கூத்தியராக இருந்த பலரும் தாம் ஈட்டிய செல்வம் கொண்டு பிற கோயில்களுக்கும் கொடை அளித்த செய்தி கல்வெட்டுக்கள் வாயிலாகத் தெளிவாகிறது. நான்குநேரியில் மூன்றுயுகம் கண்டாள் என்று வழங்கப்படும் கோயிலை 13ஆம் நூற்றாண்டில் திருவானைக்காவல் கோயிலின் சாந்திக்கூத்தியான உலகமுழுதுடையாள் ஜகதிப்படை முதலானவற்றோடு வடவாயில் செல்வியாக எடுப்பித்த செய்தி பதிவாகியுள்ளது.
இதனைப் போலவே மதுரைக் கோயிலின் தலைக்கோலியான ராஜ புஜங்க த்ராஸித (ஆஹா கரணத்தின் பெயரில் தலைக்கோலி) திருநெல்வேலியில் நெல்லையப்பருக்கு வழங்கிய கொடை கல்வெட்டில் பதிவாகியுள்ளது. இவ்விதமே தூரத்திலுள்ள கோயில்களிலும் பிற கோயில்களின் கூத்தியர் கொடுத்த கொடைகள் பதிவாகியுள்ளன. பதிமூன்றாம் நூற்றாண்டில் இவ்விதம் காணப்பெறும் இத்தகைய கூத்துமகளிரின் கல்வெட்டுகள் 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அருகுகின்றன. மாலிக்காஃபூர் படையெடுப்பு இதற்கு காரணமாகலாம்.
Comments
Post a Comment