Posts

Showing posts from October, 2022

தக்கோலம்

Image
 தக்கோலம் என வழங்கும் திருவூறல், வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும், அரக்கோணத்திலிருந்து தெற்கே 12 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள அழகிய திருவூர் தக்கோலம். தக்கன் ஓலமிட்டு வழிபாடு செய்ததால், தக்கன்+ஓலம்= தக்கோலம் என இத்தலத்திற்குப் பெயர் வந்ததாகப் புராணக்கதை வழங்குகிறது.  கொற்றலை (குசத்தலை) என்று அழைக்கப்பெரும் க்ஷீர நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் பண்டைப் பெருமக்கள் பலவற்றைக் கொண்டதாகும்.  அவனி நாரணன் எனும் மூன்றாம் நந்திவர்மன் (A.H. 835-860) ஆட்சியின் போது இங்கிருந்து வாணிகத்தின் மலேயா சென்ற வணிகர்கள், சியாம் நாட்டில் தகோப என்னும் மாவட்டத்தில் புதிய தக்கோலம் என்ற ஊரை உருவாக்கினார். இந்த தக்கோலத்தையே கங்கை கொண்ட சோழனான இராசேந்திரன் கடார வெற்றியின் போது கலைத் தக்கோர் புகழ்தலைத் தக்கோலம் என்று அவனது மெய்க்கீர்த்தி கூறுவதிலிருந்து தக்கோலத்தின் பண்டைப் பெருமை தெரிகிறது. தக்கோலம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. வாதாபி கொண்டான் இரண்டாம் புலிகேசி போர் புரிந்த ஊர். முதல் இராதிராசன் காலத்தில் (A.H. 1...

உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கல்வெட்டு

Image
  உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கல்வெட்டு காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில், உத்திரமேரூர் கீழ் ரோட்டில் செய்யாற்றின் கிழக்கு பக்கத்தில் சின்ன நாராசம் பேட்டை தெருவில்ஈசான்ய மூலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா ஸமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்  கட்டப்பட்ட  பழமையான கோவில். இக்கோவில் எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர் தண்டிவர்மனால் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பின் கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது. "ஈசான்யாம் லிங்கேஷு சிரேஷ்டம்' என்னும் வாக்கியம், இங்குள்ள கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. ஏகம்பரநாதர் கோவிலில் கடன் வாங்கி, கோவில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்த தகவல், இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ராஜராஜனின் கல்வெட்டு இக்கோயிலை  "எம்மூர் ஸ்ரீ கைலாயமுடைய மஹாதேவர் கோயில்"  என்று அழைக்கிறது. இக்கோயிலில் மூன்று சந்திகளிலும் வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டு காகவும் திருவமுது காகவும்...

எழுந்தருளின

Image
 " எழுந்தருளின " இறந்துபோன ஒரு ஞானி, தபஸி, சிவதீட்சிதை பெற்ற ஒரு அரசன். இவர்களது பூத உடலை எவ்வாறு பள்ளிப்படுத்தவேண்டும்.? எங்கே கிடத்தவேண்டும்.? எவ்வாறு நீராட்ட வேண்டும்.? என்னென்ன சம்பிரதாயங்கள் செய்யவேண்டும்.? எவ்வாறு அடக்கம் செய்யவேண்டும்.? எவ்வாறு சமாதி லிங்கம் எடுக்கவேண்டும்.? பல்வேறு சைவ நூல்களில் கூறப்பட்ட விபரங்கள் மேற்கோளுடன் ஒருவர் சுலோகங்களாக சுவடிகளில் எழுதியுள்ளார். இந்த ஓலைச்சுவடிகள் சரசுவதிமகால் நூலகச் சேகரிப்பில் உள்ளன. இந்த விபரங்களை " சமாதி லிங்க பிரதிட்டை,  என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளனர். இந்நூலில்.. இறப்பது முதல் நல்லடக்கம் செய்வது வரை அனைத்து சம்பிரதாயங்களும் கூறப்பட்டுள்ளன. இறந்த ஒருவரின் பூத உடலை குளிப்பாட்டும் முறை குறித்து சுலோகம் 31 இவ்வாறு கூறும். பூத உடலை ஒரு பீடத்தில் கிடத்தப்படுவதை "எழுந்தருளின " என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. 32. நீராட்டல் --------------------------- "சிவமயமா ஞானி முன்னோர் சிறையெனவே விடுத்த திருமேனி தனைப்பீடத் தெழுந்தருளப் பண்ணிப் பவமகலு மெண்ணெய்மா நெல்லிமஞ்சட் காப்புப் பஞ்சகவ்வியம் பஞ்சா மிருதநெய்...

பரவனாறு

Image
  உலகத்தின் ஒரே பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian ) தமிழ்நாட்டில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் இருந்து அழிக்கப்பட்ட அந்த ஜீவநதியின் இருண்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா? ஆம் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில்தான் இந்த ஆறு பாய்ந்தது.  பல கிமீ பரவி விரிந்து ஓடியதால் இது பரவனாறு எனவழங்கப்பட்டது வருடம் முழுதும் பெருக்கெடுத்து பெருவெள்ளமாக ஓடி கடலில் கலந்தது சேமக்கோட்டை காட்டில் உற்பத்தியாகி பழைய நெய்வேலி கிராமம் தற்போதைய என்எல்சி சுரங்கம் கத்தாழை கரிவெட்டி இளவரசம்பட்டு கரைமேடு எல்லைக்குடி வழியாக பெருமாள் ஏரியில் அடைந்து பின் 26 கிமீ பயணித்து பூண்டியாங்குப்பம் வழியாக கடலூர் துறைமுகம் அருகில் கடலில் கலக்கிறது  பரவனாறு உண்மையில் பூமியின் ஆழத்திலிருந்து உற்பத்தி ஆகிறது என்பதே இதன் சிறப்பு  இந்த ஆற்றுக்கான நீர ஆதாரம் ஆர்ட்டீசியன் பொங்குநீர் ஊற்றுகளே இரண்டாம் பராந்தக சோழன் பரவனாற்றை சீரமைத்து இதன் கரைகளில் நிறைய ஏரிகளை அமைத்ததுடன் அதன் உச்சமாக 16 கிமீ நீளமுள்ள பெருமாள் ஏரியை வெட்டினான்  வெள்ளையர் காலத்தில் இந்த ஏரியின் குறுக்கே மக்கள் பயணிக்க பாலங்கள் அமைத...

சிந்துசமவெளி முத்திரை

Image
  சிந்துசமவெளி முத்திரை சிந்துசமவெளியில் கிடைத்த முத்திரை ஒன்றில், தெய்வ சிற்பங்களை சுற்றி காணப்படும் திருவாசியை ஒத்த ஓர் அமைப்பில் ஓர் உருவம் நிற்பதை போன்றும்,அதன் அருகே வணங்கிய நிலையில் வேண்டுவதை போல ஒரு சிற்பம் காணப்படுகிறது, இதன் கீழே ஏழு உருவங்கள் கீழே காணப்படுகிறது (இதனை சப்தகன்னியர் அல்லது சப்தமாதராக கருதுவர்) இச்சிற்பங்களை நமது தென்னக மாநிலங்களின் தாய்தெய்வ வழிபாடுகளான கொற்றவை மற்றும் சப்தகன்னிகளின் வழிபாட்டோடு தொடர்புபடுத்தலாம். சப்தகன்னிகளை “அன்னம்மா, சந்தேஸ்வரம்மா, மாயேஸ்வரம்மா, மரம்மா, உடலம்மா, கொக்கலம்மா, சுகஜம்மா" என கர்நாடகத்திலும், "போலேரம்மா, அங்கம்மா, முத்தியாலம்மா, தில்லி, பொலசி, பங்காரம்மா, மாதம்மா" என ஆந்திரத்திலும் வழிபாட்டிலுள்ளது தமிழகத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு பெயரில் சப்தகன்னிகைகள் வழிபாட்டில் உள்ளது. இதிலிருந்து கிளைத்த வழிபாடாகவே சப்தமாதர் வழிபாடு இருப்பதாய் தோன்றுகிறது. சப்தமாதருக்கு அனைத்து பகுதிகளிலும் ஒரே புராண பெயராகவே விளங்குகிறது. இந்தியா முழுவதும் இதே பெயர்தான்  என்பது நோக்கத்தக்கது. இன்றைய மேல்தட்டு அடித்தட்டு மக்களை போலவே....

திருப்பாதிரிப்புலியூர்

Image
  தமிழகத்தில் முதல் சக வருட குறிப்பு கிடைப்பது ஜைன நூலான லோகவிபாகம் என்னும் நூலில். இன்றைய திருப்பாதிரிப்புலியூர் பாடலிபுரம் என்று வழங்கப்பட்டது. அந்த நூல் ஸிம்ஹவர்ம பல்ல வனின் 22 ஆம் ஆட்சியாண்டையும் சகவர்ஷம் 380-ஐயும் அதாவது பொது 458-ஐயும் தருகிறது. ஆகவே ஸிம்ஹவர்மன் 436-இலிருந்து கோலோச்சினான் என்பது தெரிய வருகிறது. திருப்பாதிரிப் புலியூர் அப்போது ஜைனர்களின் இடமாகத் திகழ்ந்தது. குணபரரான முதலாம் மஹேந்த்ரவர்மர் பாடலிபுத்திரத்து பாழிகளை அழித்து சிவாலயம் எடுப்பித்ததாக பெரியபுராணம் கூறும் பாடலிபுத்தி ரம் திருப்பாதிரிப்புலியூரேயாம்.

ஸ்ரீரங்கத்திலும் ஒரு ஸரஸ்வதி பாண்டாகாரம்

Image
  ஸ்ரீரங்கத்து நூலகம் ஸ்ரீரங்கத்திலும் ஒரு ஸரஸ்வதி பாண்டாகாரம் - நூலகம் இருந்ததைக் கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது. அங்கே ஹயக்ரீவரையும், ஸரஸ்வதியையும், வேதவ்யாஸரையும் எழுந்தருள்வித்திருந்தார்கள். போசள மன்னன் வீரராமநாதனின் கல்வட்டொன்று ஸ்வஸ்திஸ்ரீ பாலபள்ளி நீலகண்ட நாயக்கர் செய்வித்த இந்த ஸரஸ்வதி பண்டாரத்துக்கு சேஷமான இத்திருமண மண்டபத்து இவர் எழுந்தருள்வித்து திருப்பிரதிஷ்டை பண்ணி திருவாராதனம் கொண்டருளுகிற ஹயக்ரீவ நாயனாருக்கும் ஸரஸ்வதி தேவிக்கும் வேதவ்யாஸ பகவானுக்கும் அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட விஞ்ஜனங்களுக்கும் உடலாக நூறாயிரம் காசு ஸ்ரீபண்டாரத்தில் சேர்க்கப்பட்டது. இவ்விதம் ஸ்ரீரங்கத்து நூலகம் வெளிச்சத்துக்கு வருகிறது.

சிவபாதசேகரன்

Image
  சிவ பெருமானின் திருவடிகளை எப்பொழுதும்  தாங்கியவன்...  இறைவனின் திருவடியை முடியில் கொண்டவன்..         எனும் பொருள் கொள்ளும் வகையில் "சிவபாதசேகரன்" என்ற சிறப்பு பெயரை இராஜ ராஜ சோழன் விரும்பி சூடிக் கொண்டனன் என்பதை தமிழக கல்வெட்டு சான்றுகள் நிமித்தம் அறிகிறோம்.  அந்த சிவபாதசேகரனின் தண்ணென் தாமரை மலரடிகளை சதா சுற்றி வரும் வண்டுகளாக தம்மை உவமித்து கொண்ட இருவர் பற்றிய செய்தி குறிப்பினை கர்நாடகத்தில் காணக்கிடைக்கும் கல்வெட்டுகள் மூலமாக தெரிந்து கொள்வோமா? மைசூர் மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்தில் பலமூரி என்னுமிடத்தில் அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது அக்கோயிலின் மேற்கு புறத்தில் ஹளகன்னடமொழியில்  34 வரிகள் அமைந்துள்ள சிதைந்த நிலையிலுள்ள கல்வெட்டு இராஜராஜனின் 28 வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது சக வருஷம் 934ல் அதாவது பொ.யு.1012-13 காலத்தியது.  இக்கல்வெட்டின் வரியில்  ஸ்ரீ கோவி ராஜகேஸரிவர்மரான ஸ்ரீ ராஜராஜ ...கிரிவர ஸ்ரீ பாத பக்ண ஜம்பரமரா பஞ்சவமஹாராயதத்த...   என்ற இவ்வாசகத்தின் பொருள்   கோவிராஜகேஸரி வர்மரான இராஜ ராஜ சோழனின்...