செப்பேட்டில் வேதாந்தம்
செப்பேட்டில் வேதாந்தம்
இந்திய வரலாற்றில் செப்பேட்டில் வேதாந்தம் என்னும் சொல் இடம் பெறும் முதல் செப்பேடு நின்ற சீர் நெடுமாறனான பாண்டியன் மாறவர்மன் அரிகேஸரியின் இளையான்புத்தூர் செப்பேடாகும். பெரு மருதூரில் அதாவது திருவிடைமருதூரில் பிறந்த நாராயண பட்ட ஸோமயாஜி என்பாருக்கு பொது 676-இல் கொடுக்கப்பட்ட கொடையைச் செப்பேடு குறிப்பிடுகிறது. நான்மறையும் முத்தீயும் அம்புரி யும் ஆறங்கங்களும் மேன் முறையில் வழுவாத பதினெட்டு தருமங்களும் ஸர்வசாஸ்த்ர முதலா கியதற் யோக புராணங்களும் வேதாந்தமும் ஸித்தாந்தமும் விநியோகமும் வல்லவராகி பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர். இவ்விதம் வேதாந்தம் என்னும் சொல் இடம்பெற்ற முதல் செப்பேடு தமிழகத்தைச் சேர்ந்ததாக அமைவது குறிப்பிடத்தக்கது. நின்றசீர் நெடுமாறனான மாறவர்மன் அரிகேஸரிக்கு முற்பட்ட சுந்தரபாண்டியன் இயற்றிய தாகக் கூறப்படும் அத்வைத வேதாந்த காரி கைகள் சாங்கர பாஷ்யத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிட
த்தக்கது.
த்தக்கது.
Comments
Post a Comment