சிந்துசமவெளி முத்திரை
சிந்துசமவெளி முத்திரை
சிந்துசமவெளியில் கிடைத்த முத்திரை ஒன்றில், தெய்வ சிற்பங்களை சுற்றி காணப்படும் திருவாசியை ஒத்த ஓர் அமைப்பில் ஓர் உருவம் நிற்பதை போன்றும்,அதன் அருகே வணங்கிய நிலையில் வேண்டுவதை போல ஒரு சிற்பம் காணப்படுகிறது, இதன் கீழே ஏழு உருவங்கள் கீழே காணப்படுகிறது (இதனை சப்தகன்னியர் அல்லது சப்தமாதராக கருதுவர்)
இச்சிற்பங்களை நமது தென்னக மாநிலங்களின் தாய்தெய்வ வழிபாடுகளான கொற்றவை மற்றும் சப்தகன்னிகளின் வழிபாட்டோடு தொடர்புபடுத்தலாம்.
சப்தகன்னிகளை “அன்னம்மா, சந்தேஸ்வரம்மா, மாயேஸ்வரம்மா, மரம்மா, உடலம்மா, கொக்கலம்மா, சுகஜம்மா" என கர்நாடகத்திலும்,
"போலேரம்மா, அங்கம்மா, முத்தியாலம்மா, தில்லி, பொலசி, பங்காரம்மா, மாதம்மா" என ஆந்திரத்திலும் வழிபாட்டிலுள்ளது தமிழகத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு பெயரில் சப்தகன்னிகைகள் வழிபாட்டில் உள்ளது.
இதிலிருந்து கிளைத்த வழிபாடாகவே சப்தமாதர் வழிபாடு இருப்பதாய் தோன்றுகிறது. சப்தமாதருக்கு அனைத்து பகுதிகளிலும் ஒரே புராண பெயராகவே விளங்குகிறது. இந்தியா முழுவதும் இதே பெயர்தான் என்பது நோக்கத்தக்கது.
இன்றைய மேல்தட்டு அடித்தட்டு மக்களை போலவே.வழிபாட்டு தெய்வங்களும் உள்ளதாகவே தோன்றுகிறது
Comments
Post a Comment