சோழர்

 சோழர் இன்னார் சாதி என குறிப்பிடும் ஒரே கல்வெட்டு இது மட்டுமே




காடவன் கோப்பெருஞ்சிங்கனால் மூன்றாம் இராஜராஜன் கைது செய்யப்பட்ட போது அவனை அண்ணமங்கலம் குகையில் சிறைப்பிடித்தான், அதே இடத்தில் ஒரு சிற்பத்தையும் வடித்தான்

அது சிங்கம் ஒன்று யானையை வீழ்த்தி கடிப்பதை போன்ற சிற்பம், அந்த யானையின் கண் புருவத்தில் ஒரு கல்வெட்டையும் வடித்தான் -

"சொக்க பல்லவன் வாய் செல்லும் வன்னிய மணாளன்"

இந்த கல்வெட்டு விளக்கம் என்னவென்றால், மூன்றாம் குலோத்துங்கரின் மகளை கட்டியவர் காடவர், மூன்றாம் குலோத்துங்கரின் மகன் தான் இரண்டாம் இராஜராஜன். எனவே இராஜராஜனன மணாளன்(மச்சான்) என்று குறிப்பிட்டுள்ளார் காடவர்

மேலும் பல்லவர் தங்களை சிங்கத்தோடு பல இடங்களில் ஒப்பிடுவதுண்டு, தன் பெயரையே கோப்பெருஞ்"சிங்கன்" என்றே கூறிக்கொண்டனர். இந்த சிற்பத்தில் சிங்கத்தை காடவராகவும், யானையை சோழராகவும் வடித்துள்ளார், பேரரசனன யானையோடு ஒப்பீடு செய்வதுண்டு

எனவே சொக்க பல்லவனான காடவன் தன்னிடம் தோற்றதால் தன்னை சிங்கமாக குறிப்பிட்டு தன் வாய்க்குள் செல்லும் யானை வன்னிய மணாளனான மூன்றாம் இராஜராஜன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி