மகிபாலன்

      பீகார், வங்காள மாநில கங்கையாற்றின் தென்கரையில் தக்கணலாடம், உத் தரலாடம் என்ற பகுதிகள் இருந்தன. லாடம் என்றால் தேர் என பொருள். அப்பகு தியின் பேரரசன் "மகிபாலன்", இவனை வெற்றி கொண்டதன் நினைவாய், நாஞ் சில் நாடு பகுதியில் "மகிபாலகுல கால பேரளம்" என்ற ஒரு பெரிய உப்பளத்தை இன்றைய, கன்னியாகுமரி மாவட்ட வடக்குதாமரைக்குளம் பகுதியில் ராஜேந் திரன் ஏற்படுத்தினார். அதேபோல் "மகிபாலகுல கால (மகிபாலன் குலத்திற்கு எமன்) பேரூர்" எனும் சில சோழர்கால ஊர்களும் உண்டு. வங்காளதேசத்தின் அப்பகுதியில் தன்மபாலன், இரணசூரன் எனும் இரு மன்னர்கள், மகிபாலனுக்கு கீழடங்கிய சிற்றரசர்களாய் இருந்தனர். அவர்களை வென்று, பெரும் பராக்கிர மனான மகிபாலனையும் அடக்கி, அங்கிருந்த கங்கை நீரையும், கீழே படத்தி லுள்ள சரஸ்வதி சிலையையும் நம் சோழப்படை "அரையன் ராஜராஜன்" எனும் ராஜேந்திரசோழனின் நம்பிக்கைக்குரிய தளபதியின் தலைமையில் கொண்டு வந்தது. இந்த சிலை இன்று நம் கங்கைகொண்ட சோழபுர கோவிலில் உள்ளது.




Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு