போர்க்களத்தில் பேய்

 போர்க்களத்தில் பேய்




பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன் இன்றைய கண்டியூருக்கு அருகே தனது அரண்னையில் தங்கியிருந்தபோது, பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் பெரும்படையுடன் வந்து முற்றுகையிட,நந்திவர்மனின் தளபதி உதயசந்திரன் திருத்தணி அருகேயிருந்தும்,மாறன் பரமேஸ்வரன் எனும் முத்தரையரும் ஒன்றிணைந்து நிம்பவனம்,சூதவனம்,மண்ணைக்குறிச்சி,சூரவந்தூர் முதலிய இடங்களுக்கு விரட்டி சென்று பாண்டியனை தோற்கடித்தனர்.

அப்போது சுவரன்மாறன் எனும் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் இளைஞராய் இருந்து தன் தந்தையுடன் போருக்கு சென்றிருக்க வேண்டும்.இந்த வெற்றியினை தனது மெய்கீர்த்தியில் பொறித்து வைக்கிறார்.முதன்முதலாய் மெய்கீர்த்தியை அறிமுகப்படுத்தியவர் இவரே. இம்மன்னனனது கொடியாக கயலுடன் கூடிய வேல் கொடி இருந்துள்ளதை அவரது மெய்கீர்த்தி கூறுகிறது.

இம்மன்னன் மணலூரில் ஒரு பெரும்போர் நடத்தி வெற்றி பெருகிறார்.இதில் இம்மன்னனை எதிர்த்து போர்புரிந்தவர்கள் மரணமடைந்து அந்த பூமியே இரத்தத்தால் சிவந்து கிடந்ததாகவும், இறந்துகிடந்த பிணங்களிலின் மேலே கழுகுகள் அமர்ந்து குடலை பிய்த்து திண்பதாகவும்,பிணங்களுக்கு மத்தியில் பேய்கள் நிறைய உலாவருவதாகவும், இக்காரியத்தை செய்தது பெரும்பிடுகு முத்தரையனின் வாள் என்கிறது செந்தலையில் உள்ள கல்வெட்டு 

கல்வெட்டில் "பேய்" குறித்து வரும் முதல் தகவல் இது.இதனை கோட்டாற்று இளம்பெருமானார் எனும் புலவர்

 "ஒழுகு குருதியுடனொப்ப வோடிக்
கழுகு கொழுங்குடர்கவ்வ- விழிகட் பேய்"

என அழகுதமிழில் பாட அந்த பாடல் அழகிய கல்வெட்டெழுத்தாய் முத்தரைய சிற்பிகளால் வெட்டப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி