வீரநாராயண ஏரி
ஸ்ரீ பராந்தகப் பேரேரி
வீரநாராயண ஏரி எனப்படும் வீராண ஏரியின் காணொளியில் அதன் மற்றுமொரு பெயர் பராந்தகப் பேரேரி எனக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு குழு நண்பர் ஒருவர் ஆதாரம் கேட்டிருந்தார். இப்பதி வில் அதற்கு கல்வெட்டாதாரத்தை இணைத்துள்ளேன். கடல் போன்ற வீரநாராயண ஏரிக்கு அருகி லேயே உள்ள கோவில் அகத்தீஸ்வரர் கோவில். கல்வெட்டுகளில் திருச்சோற்றுணை ஈஸ்வர முடையார் என்றழைக்கப்பட்டுள்ளார் அக்கோவிலின் இறைவன். அந்த சிறப்பு வாய்ந்த பழமை யானக் கோவி லின் நிறையக் கல்வெட்டுகளில் இவ்வேரி பராந்தகப் பேரேரி என்றே குறிப்பிடப் படுகிறது. அதுமட்டு மின்றி அதிக மழையால் ஏரி உடைப்பெடுத்து ஊர் மூழ்கும் ஆபத்து ஏற்பட்ட போது அதை சரி செய்தி டவும் இறைவனின் ஆராதனைக்கும் இக்கோவிலுக்கு நிலதானம் அளிக் கப்பட்ட சிறப்பானத் தகவ லும் இதே கோவிலில் பதிவாகியுள்ளது.
Comments
Post a Comment