சிதம்பரம், பரமேஸ்வரநல்லூர்
சிதம்பரம் தில்லையாக இருந்த போதே, பல நூற்றாண்டுகள் முன்பே நடராஜர் கோவிலை சுற்றி எட்டு திக்கிலும் எட்டு சாஸ்தாகள் இருந்து இந்த தனியூரை காவல் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அதில் முதன்மையாக விளங்கியவர் ஆகாச ஐயனார். ஆகாச ஐயனார் பிரம்மராயர் என்றே அழைக்கப் படுகிறார். அறிஞர் "சோமேல" எழுதிய " கோயில்" என்னும் புத்தகத்தில் இந்த இடத்தில் தான் மாணிக்கவாசகர் தில்லையில் இருந்த காலத்தில் தங்கி தவத்தில் ஈடுபட்டதாகவும் கூறியுள் ளார்.மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனால் அமைச்சராக்கப்பட்டு "தென்னவன் பிரம்மரா யன் " என்ற பட்டம் வழங்கப்பட்டவர். ஆதலால் மாணிக்கவாசகரின் பட்டப் பெயராலேயே ஆகாச ஐய னார் பிரம்மராயர் என்றே அழைக்கப் பட்டு வருகிறார். சிதம்பரம், பரமேஸ்வரநல்லூர் என்னு மிடத்தில் உள்ளது.சிதம்பரம், சீர்காழி bypass ல் சிறிது தூரம் சென்று இடதுபுறம் திரும்ப வேண் டும்.
Comments
Post a Comment