தமிழகப் பண்டைய க் கோட்டைகள்

 தமிழகப் பண்டைய க் கோட்டைகள் 



பல தமிழக மன்னர்களின் ,குறுநில, மன்னர்களின் ,ஜமீன்தார்கள் அரண்மனைகள் சில இடங்களில்காணக்கிடைக்கிறது .ஆனால்; கோட்டைகள்  எதுவும் அதிகம் தமிழ் நாட்டில் முழுமையாகக் காணக்கிடைப்பதில்லை . செஞ்சி ,வேலூர் திருமயம் ,சென்னை போன்று சிலக்கோட்டைகள் மட்டுமே தமிழ்நாட்டில் இப்போதும் ஓரளவு நல்ல நிலையில் உள்ளன
--
இறுதி சோழர்கள் சோழர்கள் காலத்தில் பாண்டியர்களால் கங்கைகொண்ட சோழ புரம் கோட்டை தஞ்சாவூர் ,உறையூர் போன்ற  இடங்களில் இருந்த கோட்டைகள் இடித்துத்தரைமட்டம்ஆக்கப்பட்டது அதற்க்கு முன்பே சோழர்களால் பாண்டியர்களின் கோட்டைகள் பல தரைமட்டம் ஆக்கப்பட்டது .

சங்ககாலத்தில் இருந்து இருந்துவந்த கோட்டைகள்
தமிழ் மன்னர்களுள் நடைபெற்ற  இடைவிடாத போர்களின் காரணமாக சிறுக சிறுக அழிந்தன .
சேரர்களின் கோட்டைகளும் சோழர்களாலும் பாண்டியர்களால் பலமுறை அழிக்கப்பட்டன .பல குறுநில மன்னர்களின் பண்டயக்கோட்டைகள் அவர்களுக்குள் நிகழ்ந்த தொடர்போர்களால் அழிந்தன .

இத்தகைய சூழலில் நாயகர்களுக்குப்பிறகு  18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில்
முதல் கர்நாடக நவாப்  ,சாதத் உல்லாக்கான் ஆட்சியின் போது தமிழகக்கோட்டைகள் 84 என்று வரையறுக்கப்பட்டிருந்தது
அந்த 84  கோட்டைகளில் இப்போது தெரியவரும் கோட்டைகளின் பெயர்களைப்பார்க்குமுன் ,,இப்போது ஆதாரம் கிடைத்தவற்றில் பழமையான பொற்பனைக்கோட்டை யின் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ,அந்த கோட்டை சம்பந்தப்பட்ட 2 013 இல் அறியப்பட்ட
நடுகல் பொறிப்பைக்காணலாம் .

1.கோவென்கட்டிற் நெதிர –
2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்
3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்

 என்று வாசிக்கப்பட்டுள்ள பொற்பனைக்கோட்டையில் கிடைத்த நடுகல் முக்கோண வடிவத்தில் உள்ளது.
இதில் 5 வரிகள் இடம்பெறுகின்றன. கோ வென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” இறந்துபட்ட மைக்காக இந்த நடுகல்
நட்டுவிக்கப்பட்டதை குறிப்பதாக 2013 ல் வெளிவந்துள்ள ஆவணம் இதழில் கண்டுபிடிப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த   கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன் என்பவர்
பொற்பனைக்கோட்டை யின் காவலராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது .

மேலும் பொற்பனைக்கோட்டைக்கு அருகில்  இரும்பு உருக்காலைகள் - செந்நாக்குழி என்ற பெயரில் இன்னமும் வழங்கிவருகிறது
செந்நாக்குழி என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்புகள் சிவந்த அல்லது செம்மை என்ற நெருப்பின்நிற பண்பைக்குறிக்கும் சொல்லான “செந்” என்ற ஒற்றுடன் “நா” என்கிற நெருப்பு சுவாலையை குறிக்கும் பெயர்ச்சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து “செந்+நா+குழி = “செந்நாக்குழி” என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது

இது சங்க காலத்தை சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாக இயங்கியதையும் , தமிழர்களின் பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில காரணப்பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருப்பதை நாம் காண முடிகிறது.
கிடைக்கப்பட்ட தகவல்களும் , தரவுகளும் , பெயர்களும் சங்ககாலம் தொட்டே இவ்விடத்தில் இரும்பு உருக்கு ஆலை இயங்கியதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. தமிழகத்தில் செம்புராங்கற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் உருக்கு உலையாக இது உள்ளது.

இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள்  உள்ள  ஆச்சநல்லூர் , ஆழ்வார் திருநகரி, கொடுமணல், உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக உருக்கு அமைப்புகள் பெரும்பாலும் மண் மற்றும் செங்கல் கட்டுமான அமைப்புகளாகவே உள்ளன.
தனியான கட்டுமான அமைப்பிலோ அல்லது மட்பாண்ட கலன்களிலேயே இருந்துள்ளன.

 திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரை உள்ள கோயிற்காடுகள் மற்றும் இரும்புக்கழிவுகளுடன் கூடிய மேடான சில பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்த நிலையிலும் , இரும்புக்கழிவுகளை பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்ட கலன்கள் பல இடங்களிலும் , இரும்பு வார்ப்புக்கு பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்கு குழாய்கள் உருக்குடன் உறைந்த நிலையிலும் , தனியாகவும், பகுதியளவு சிதைந்த நிலையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது

புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட கே.ஆர் வெங்கட்ராம அய்யர் அவர்களால் தொகுக்கப்பட்டு 1938 ல் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் புத்தகத்தில் “13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் திருவரங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருக்குத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதுமட்டுமின்றி 1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல வழித்தடங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
இதற்கு முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ல் பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டிற்கு ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இதே அறிக்கையின் மூலம் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இரும்பு உருக்கும் ஆலைகள் இயங்கிவந்ததற்கான தரவுகளை அறியலாம்.ஆனால் அந்தக்கோட்டையுடன் சேர்ந்து அந்த உருக்காலையும் ,ஆயுத கருவிகள் செய்யும் தொழில் கூடமும் அழிக்கப்பட்டிருக்கலாம் .

இப்போது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் முதல் கர்நாடக நவாப்  ,
சாதத் உல்லாக்கான் ஆட்சியின் போது விளங்கிய 84 தமிழகக்கோட்டைகள் அமைவிடங்களையும் அது பற்றிய விவரிப்பையும் பார்க்கலாம் 

இவைகள் அத்தனையும் 18 ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு 
நம்மை  ஆளவந்த ஆங்கிலேயராலேயே அழிக்கப்பட்டது .
கோட்டைகளின் பட்டியல்

தளவாய் கட் ,கிடங்கல் ,பெருமுக்கல் ,வழுதாவூர் ,விருதாச்சலம் ,பாளையங்கோட்டை ,இரஞ்சன்குடி ,முஸ்தா பக்ட்அல்லது சங்கராபுரம்   கெம்பகட் ,போனார் ,வேப்பூர் துர்கம் ,இரவுத்தநல்லுர் ,சிதம்பரம் ,
திருவண்ணாமலை ,எலவசசூர் கோட்டை ,கர்நாடக கட் ,பென்னாத்தூர் ,திம்மய்யா துர்கம் ,
மல்லிகாஜுன் கட் ,ஆரணி , சேற்றுப்பட்டு ,செங்கல்பட்டு ,கருங்குழி , பூவிருந்தவல்லி ,மயிலாப்பூர் ( சாந்தோம் ),திருப்பாச்சூர் ,தாமரைப்பக்கம் , திமிரி ,ஆர்க்காடு வேலூர் க்கோட்டை ,வேலூர்த் துருகம் ,
வந்தவாசி ,கைலாசகட் ,படைவீடு , வண்ணான் துருகம் ,சங்கலித்துருகம் ,வாஜேந்திரகட் ,ஆம்பூர்கட் ,
சந்திரகிரி ,உதயகிரி ,இராணிப்பூர் ,சத்யவேடு செக்கு ,தேவகட் ,கலுபக்கட் ,கிருஷ்ணகிரி  மற்றும் செஞ்சியில் இருக்கும் 3 கோட்டைகள்போன்றவை .

இந்தப்பட்டியல் பன்மொழிப்புலவர் கா அப்பாத்துரையார் எழுதிய தென்னாட்டுப்போர்க்களங்கள் என்ற புத்தகத்தின் 483 ஆம் பக்கத்தில் இடம்பெற்ற செய்தி .

இது கர்னாடக நவாபுகள் கோட்டையை மட்டுமே கூறுகிறது .
இதில் இன்னமும் இருக்கும்  ஜமீன்தார்கள் அரண்மனைகள் சேர்க்கப்படவில்லை .
இன்னமும் அப்போது நிலவிய 72 நாயக்கர்களின் பாளையங்களைப்பற்றி அடுத்தப்பகுதியில் பார்க்கலாம் .

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு