கல்யாண அழிவு
கல்யாண அழிவு கல்வெட்டில் அழிவு, அழிந்தது முதலிய சொற்கள் செலவையே குறிக்கும். உத்தம சோழனின் சென்னை அருங்காட்சியகச் செப்பேடு பலவகைச் செலவுகளைக்(Miscillaneous) கண்டழிவு என்று குறிப்பிடுகிறது. அதில் உபரியாக எழுதியிருக்கும் விசம் அழிந்தது என்பதற்கு எவரும் பொருள் கூறவில்லை. விசம் என்பது வருவாய் விகிதத்தைக் குறிக்கும். திருவிழா விசம் என்பது போல கல்வெட்டில் பயின்று வரும். விசம் அழிந்தது என்பதற்கு வருவாய் விகிதம் செலவழிந்தது என்று பொருள். நிற்க திருமெய்யத்திலுள்ள பிற்கால பாண்டியர் கல்வெட்டு ஒன்று ஒரு ஆண் திருமணத்திற்கான செலவிற்காக நிலத்தை விற்று பெண் வீட்டாருக்கு சீதனம் வழங்கியதைக் குறிப்பிடும் முகமாக கல்யாண அழிவுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறது.