சோழனின் உள்ளாட்சியில் நல்லாட்சி...
அவருடைய கருத்துக்களை புகைப்படத்துடன் பகிர்ந்துகொள்கிறேன். சோழர்கள் வீரம் செரிந்தவர்கள் மட்டுமல்ல,தங்களின் உள்ளாட்சி சபைக்கு தீர்ப்புக்காக வரும் எந்தகுற்ற வழக்குகளையும் அலசி-ஆராய்ந்து நடுநிலை பிறழாமல் தீர்ப்பு வழங்கக்கூடியவர்கள் என்பதை இந்த வரலாற்றுப்பதிவு விளக்கும்..வரலாற்று ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத பதிவு இது:
சோழனின் உள்ளாட்சியில் நல்லாட் சி...
கங்கபுரம் எனும் ஊரிலுள்ள #வெள்ளாளன் #தருப்பேறுடையான்_தாழிகோனன் என்பவருக்கு, சங்கரத்தடியான், பெரியான் என இரு மகன்கள் இருந்தனர்.இவர்கள் இருவருக்கும் ஒருமுறை சண்டை வர, இருவரும் தாக்கிக்கொண்டனர், இதில் அண்ணன் இறந்துவிடுகிறார்.
தன்இளைய மகனின் கொடுஞ்செயலால் ஆத்திரமடைந்த தருப்பேருடையார் அங்கிருந்த இராஜேந்திரசோழ சித்திரமேழி சபையிடம்(Local administration) தனது இளையமகன் மீது புகார் அளிக்கிறார். குற்றத்தின் தன்மையை சபை அலசிபார்க்கிறது. செய்தது கொலைக்குற்றம்தான், எனினும் இதில் புகார் அளித்த தந்தைக்கு குற்றமிழைத்த இளைய மகன் தவிர வேறு வாரிசும் கிடையாது, மேலும் அவர்களது குடும்பத்திற்கு நிலபுலன்கள் என சொத்துக்களும் கிடையாது, வயதான தம்பதியினரும் கூட, இம்மகனை விட்டால் அவர்களை பார்த்துகொள்வாரும் இல்லை.
எனவே இந்நிறைகுறைகுறைகளை அலசி ஆராய்ந்த சபை, அரை நந்தாவிளக்கு தாமரைபாக்கம் கோவிலுக்கு ஏற்றும்படி அரிய(?) தண்டனையை தீர்ப்பளிக்கின்றனர்.
இக்கல்வெட்டு இரண்டாம் ராஜேந்திரன் காலத்தையது. இத்தண்டனைக்கு சாட்சியாய் அவ்வூரிலுள்ள பதினொரு வெள்ளாளர்கள் சாட்சி கையொப்பமிடுகின்றனர்.
இடம்: #தாமரைப்பாக்கம், #திருவண்ணாமலை_மாவட்டம்.
Comments
Post a Comment