உணவுக்குப் பயன்படும் உப்போ பல ரகம்
உணவுக்குப் பயன்படும் உப்போ பல ரகம்!அதன் வண்ணங்களோ பலவிதம்!
உப்பு நான்கு இடங்களில் இருந்து நமக்குக் கிடைக்கின்றது.
௧ .கடலிலிருந்து கிடைக்கும் உப்பு.
௨ .தரை உப்புகள்==
வட இந்தியாவில் பல பகுதிகளிலும் உலகின் வேறுபல இடங்களிலும் தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியெடுத்துச் சேகரிக்கிறார்கள்.
௩ .கிணற்று உப்புகள்==
சில இடங்களில் உப்புநீர்க் கிணறுகள் தோண்டி உப்பு தயாரிக்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற இடங்களில் இத்தகைய உப்பு நீர்க் கிணறு முறையில் உப்பு தயாரிக்கப் படுகிறது.
௪ .ஏரி உப்புகள்==
சில உப்பு நீர் ஏரிகளில் இருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள சம்பர் ஏரியும் பாலஸ்தீனத்தில் உள்ள சாக்கடல் ஏரியும் உப்பு நீர் ஏரிகளாகும். சாக்கடல் ஏரியிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 116 கோடி டன் உப்பு எடுக்கலாம் என கணக்கிட்டுள்ளனர்.
.உங்களுக்குத் தெர்யுமா?
உண்ணும் உப்பில் ௩௭ [37]வகைகள் இருக்கின்றனவாம்!
பலவித வண்ணங்களில் உப்பு இருக்கிறது!இயற்கை உப்பு பற்றிதான் இந்த செய்தி.
.அவற்றில் சிலவற்றை அறிவோம்.
௧ .ஹவாயன் சிவப்பு கடல் உப்பு=Alaea / Red Hawaiian Sea Salt
ஹவாய் தீவுகளில் எரிமலைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும்.சிவப்பு எரிமலைக்குழம்பில் உள்ள இரும்பு ஆக்சைடு இதற்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது.
௨ .சைப்ரஸ் கருங்கடல் கருப்பு உப்பு.Cyprus Black Sea Salt / Black Diamond Salt ,Hawaiian Black Lava Salt
கருப்பு நிறத்தில் சைப்ரஸ்,ஹவாய் போன்ற இடங்களில் உப்பு விளைகிறது.இதற்குக் காரணம் எரிமலைக்குழம்பு.
௩ .ஹிமாலயன் உப்பு என்னும் இளஞ்சிவப்பு இந்துப்பு. Himalayan Salt / Pink Salt
உப்பானது பாறை போலவும், படிகங்களாகவும் பூமியின் மேற்பரப்பிலும், அதற்கடியிலும் இருந்து வந்துள்ளது. பூமியின் ஆழத்தில் இருக்கும் இந்த இந்துப்பை எடுக்க, சுரங்கம் தோண்டி கரிச்சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பது போல் எடுத்து மேலே கொண்டு வருவார்கள். இந்தியாவில் இமாசலபிரதேசத்தில் மன்டி என்ற இடத்தில் இந்துப்பு கிடைக்கிறது.ஹிமாலயா உப்பு அல்லது இந்திய உப்பு என்று அழைக்கப்பட்டு பின் பெயர் மருவியோ அல்லது மாற்றப் பட்டோ, அது இந்துப்பு ஆனது. தமிழ்நாட்டில் சில இடங்களில் கிடைத்தாலும் இந்துப்பு பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.
௪ .காலா நமக் என்னும் ஹிமாலயன் கருப்பு உப்பு.Kala Namak / Black Mineral Salt / Bay Salt / Sulemani Namak / Sulfur Salt.
இதுவும் ஹிமாலயப்பகுதிகள்,பங்களாதேஷ்,நே பாளம்,பூட்டான் போன்ற இடங்களில் கிடைக்கிறது.
இவ்வளவு வகைகளில் எந்த உப்பு மிகவும் தூய்மையானது?
நமது ஆயுர்வேதம் விரும்பி ஏற்றுக்கொண்ட உப்பு எது தெரியுமா?
ஹிமாலயன் உப்பு என்னும் இந்துப்புதான் அது.
இந்துப்பு தயாராகும் முறை:===
வெட்டி எடுத்து வந்த உப்பு பாறை கற்களை சிறு பொடி கற்களாக உடைத்து இளநீர் பழங்காடி, பின் சுத்த நீர் ஒவ்வொன்றிலும் சில மணி நேரம் ஊற வைத்து பின் காய வைத்து நன்கு உலர்ந்ததும் இதை ௧௧௦ [110 ]டிகிரி வெப்பத்தில் வறுக்கும் போது இந்த உப்பு கற்கள் வெடிக்கிறது.
அப்படி வெடித்ததை நயமாக அரைத்து சல்லடையில் சலித்து மாவு போல ஆக்குவதற்கு ஒருவாரம் ஆகிவிடுகிறது. அதுவும் 100 கிலோ கற்்கள் போட்டால் 40 கிலோதான் மிஞ்சுகிறது.
எதற்காக இவ்வளவு பிராசசிங் - உப்பில் அதிகம் சோடியம் உள்ளது. அது உடலுக்கும்,சிறுநீரகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இந்த முறைகளில் சோடியத்தின் அளவை பத்து சதவீதத்திற்கும் கீழே கொண்டு வந்து விடுகிறது.
"தினமணி" ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்...
மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
௧ . இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
௨ . ஆண்மையை வளர்ப்பது.
௩ . மனதிற்கு நல்லது.
௪ . வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.
இலேசானது.
௫ . சிறிதளவு உஷ்ணமுள்ளது.
௬ . கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது. ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.
அதுமட்டும் அல்லாது ஹிமாலயன் உப்பு என்னும் இந்துப்பில் விளக்கு சிமினிகள் தயாரிக்கிறார்கள்.இது காற்றைத் தூய்மைப் படுத்துகிறது.மனதை அமைதிப் படுத்துகிறது.ஒவ்வாமையை நீக்குகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.
புகைப்படங்கள்===
௧ .ஹவாயன் சிவப்பு கடல் உப்பு=Alaea / Red Hawaiian Sea salt.
௨ .சைப்ரஸ் கருங்கடல் கருப்பு உப்பு.Cyprus Black Sea Salt.. This one is similar to the Hawaiian version but hails from the island of Cyprus in the Mediterranean Sea. These large pyramid-shaped
௩ .Hawaiian Black Lava Salt
௪ ..ஹவாயன் சிவப்பு கடல் உப்பும்,கருப்பு உப்பும்.
௫ .காலா நமக் என்னும் ஹிமாலயன் கருப்பு உப்பு.Kala Namak / Black Mineral Salt / Bay Salt / Sulemani Namak / Sulfur Salt.
௬ .,௭., ௮.,.,.ஹிமாலயன் உப்பு என்னும் இளஞ்சிவப்பு இந்துப்பு. Himalayan Salt / Pink Salt.
௯ ., ௧௦ ., ௧௧., ௧௨. ௧௩ ...ஹிமாலயன் உப்பு என்னும் இந்துப்பில் விளக்கு சிமினிகள்
௧௪ .,௧௫ .,௧௬ .,௧௭ ...Himalayan salt mains and Himalayan salt slabs
ReplyForward |
Comments
Post a Comment