" விழாக்கள் "
" விழாக்கள் "
விழாக்களும் வழிபாடும் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரங்கள்.
வருடத்தின் பெரும்பாலான நாட்களில் விழாக்கள் எடுத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்.
உண்டு உடுத்தி களிப்புற்று ஒரு சுகபோக வாழ்வை அனுபவித்து வாழ்ந்துள்ளார்கள்.
அநேக விழாக்கள் சிறப்புற்று நடந்ததை ஏராளமானக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தரவுகளாக பதிவு செய்கின்றன.
ஒரே ஒரு கல்வெட்டில் உள்ள செய்திகளே பெரும் பிரம்மாண்டம்.
திருவாரூர்.
இரண்டாம் குலோத்துங்கனின் 7 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1140. ஒரு நீண்ட கல்வெட்டு...
இக் கோவிலில் மட்டும் நடந்த ஒட்டுமொத்த விழாக்களை பதிவு செய்கிறது..
அமாவாசை திருநாள் -12
சங்கராந்தி திருநாள் - 8
விசு அயனத்திருநாள்
- 4
தைப்பூசத்திருநாள் -1
கிராணத்திருநாள் - 2
சித்திரைத் திருநாள் - 1
ஆடிப்பூரம் - 1
ஆவணி அவிட்டம்
மார்கழித்திருவாதிரை.
அருளுந்திருநாள்.
ஐப்பசி சதையத்திருநாள்.
பங்குனி உத்திரம்.
ஆடித்திருவாதிரை..
இன்னும் சில விழா நாட்களுடன்..
மொத்தம் 119 நாட்கள்.
விழாக்கோலம் பூண்டன. மற்றும் ஆளுடைநம்பி, பரவைநாச்சியார், திருநாவுக்கரசர் படிமங்களுக்கு..
சிறப்பு விழா நாட்கள்..
இந்நாட்களில்..
என்ன மாதிரியான உணவு வகைகள் சமைக்கப்பட்டு அமுது படையல் நடைபெற்றது..
இதோ பட்டியல்..
பருப்பமுது ,பாலமுது ,
மிளகமது ,பொறிக்கறி அமுது, அப்பம் அமுது, நெய்யமுது, பூரி அவல் அமுது, அடைக்காயமுது, இலையமுது, திருவமுது, கறியமுது, தயிரமுது... மற்றும் பல உணவு வகைகள்.
சமையலில் பயன்பட்ட பொருட்களின் பட்டியல்..
அரிசி , பருப்பு ,கடுகு, வெந்தயம், மிளகு, எண்ணை, தயிர், நெய், சர்க்கரை, உப்பு, பால், சிரைதேங்காய் ,
மாங்காய்வற்றல் , கருவாழைப்பழம், பூரிசெரல், கரும்பு, மஞ்சள்.பொனகம், பலாப்பழம். மேலும் சில பொருட்கள்...
வழிபாடு முறை..
அர்ச்சனை செய்பவர் ,விறகு கொண்டுவருபவர், திருமடைப்பள்ளி சமையலர், அகில் சந்தணம் தைலம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டுவருபவர், தெய்வத்திருமேனிகளுக்கு உடைகள் வழங்குபவர், அதை சலவை செய்பவர், கோயிற் கணக்கர், பெருக்குவார்.
இதுபோன்ற பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிவந்தம்..
மேலும் பல சுவையான செய்திகளை கொண்ட சிறப்பானக் கல்வெட்டு..
பின்குறிப்பு..
பூரிஅவலமுது, பூரிச்செரல் என்ற உணவு வகை என்னவென்று தெரியவில்லை.
இன்று நாம் சாப்பிடும் பூரியா..? என்ற கேள்வியைத் தவிர்க்கலாம்.
அன்புடன்.
மாரிராஜன்.
Refrence ..
S.i.i.vol 7
No 425.
அவலுடன் சேர்ந்து வருவதனால் , "பொரி" யாக இருக்க வாய்ப்பிருக்கிறது
ReplyDelete