ஹொட்டூர் கல்வெட்டு ராஜேந்த்ரசோழனை நூர்மடி சோழன்
கன்னட அரசர்களும் ஆந்த்ர வேந்தர்களும் ஒரே பெயரைச் சூடும்போது இம்மடி, மும்மிடி என்று தம்மை வேறுபடுத்திக் காட்டினர். இருமடங்கு, மும்மடங்கு என்று பொருள். இரண்டாவது மூன்றாவது என்று பொருள்படும்படி சூடியதால் இன்று வரலாற்றுக்குப் பேருதவியாக இருக்கிறது. இம்மடி புலகேசி என்று இரண்டாம் புலகேசி திகழ்ந்தான். இவ்விதம் பல்வேறு அரசர்களும் சூடியிருந்தனர். முன்னவரைக் காட்டிலும் இருமடங்கு மும்மடங்கு புகழுடையர் என்னும் பொருள். தமிழகத்தில் இந்த வழக்கம் இல்லாததால் சற்று கடினமாக உள்ளது. ஆதகூர் கல்வெட்டில் ராஜாதித்யன் மூவடி ராஜாதித்யன் எனப் பெறுகிறான். ஆக மூன்று ஆதித்யர்கள் இருக்கலாமோவென்ற ஐயத்துக்கு இடமளித்தாலும் ராஜராஜன் மும்முடிச் சோழன் எனப்பெறுவதால் தமிழக பயன்பாடு வேறோ என்றும் தோன்றுகிறது. அக்களநிம்மடி, ரேவகநிம்மடி முதலிய பெயர்களும் இரண்டாம் அக்கள, ரேவக என்றே பொருள். நூர்மடி என்பது நூறு மடங்கு புகழுடையவன் என்ற மையும்.
ஹொட்டூர் கல்வெட்டு ராஜேந்த்ரசோழனை நூர்மடி சோழன் என்று குறிப்பிடுவதும் நோக்கற்பாலது.
Comments
Post a Comment