காரவேலனின் கல்வெட்டில்
காரவேலனின் கல்வெட்டில் காரவேலன் வென்ற நாடுகளின் பட்டியலில் தென்னகம் முடிந்த பிறகு மகதத்தை வென்று பிறகு பண்டராஜனை வென்றதாகக் குறிப்பிடுகிறது. இதனை பாண்டிய மன்னனாக அடையாளம் கண்டனர் அறிஞர்கள். ஆகவே காரவேலன் பாண்டியர்களை வென்றதாகக் கொண்டனர். ஆனால் முறைப்படி வரும் நாடுகளின் பட்டியலில் மகதத்திற்கு பிறகு பாண்டிய நாடு வருவானேன்? இது புண்ட்ர நாடாகவே இருக்கவேண்டும். புண்ட்ர வர்த்தனம் என்ற நாடு மகதத்திற்கும் வங்கத்திற்கும் இடைப்பட்டதாகத் திகழ்ந்தது. இந்த நாடே புண்டராஜ என்று ப்ராக்ருதத்தில் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். மசிப்படியில் பகரத்தின் கீழாக உகரக்குறி லேசாகத் தெரிகிறது. நல்ல மசிப்படியோ அல்லது படமோ கிடைத்தால் பார்க்கலாம். ஒரு குறியின் மாற்றத்தால் வரலாறே மாறும் நிலையிருக்கிறது.
Comments
Post a Comment