உலக தண்ணீர் தினம் மார்ச் 22

 உலக தண்ணீர் தினம்  மார்ச் - 22 




பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை என்பது மிகவும் சிறப்பான ஒன்று..

ஏராளமான நீர் நிலைகளை அமைத்து நீர் ஆதாரத்தை சேமித்தார்கள்..

ஏரிகளை அமைத்து நீரைத் தேக்கி,  அதை வாய்க்கால் மூலம் நிலங்களுக்கு பாய்ச்சி,
முப்போகம் விளைச்சல் எடுத்து ஒரு வளமான வாழ்வை வரமாகப் பெற்றிருந்தார்கள்..

எத்தனையோ ஏரிகள்.
வாய்க்கால்கள்..
குளங்கள்.. கால்வாய்..
ஓடை.. என்று எண்ணிலடங்கா நீர்நிலைகள் கல்வெட்டில் காணப்படுகிறது..

மிகச்சிறிய சிற்றூருக்கு குறைந்தது ஒரு வாய்க்கால் அவசியம் இருந்தது. அவ்வாய்க்காலுக்கு நீர் தரும் ஏரி இருந்தது. வாய்க்காலிருந்து நிலங்களுக்கு நீர் செல்ல கால்வாய் இருந்தது..

ஒரு செப்பேடு ஒன்றில் காணப்படும் வாய்க்கால்களின் எண்ணிக்கையைப் பார்ப்போம்..
 

முதலாம் இராஜேந்திரச் சோழனின் கரந்தைச் செப்பேடு.. 
காலம் கி.பி.1020..

இராஜேந்தின் தனது தாயின் பெயரால் திரிபுவனமாதேலி சதுர்வேதி மங்கலம் என்னும் ஒரு அந்தணர் குடியிருப்பை உருவாக்கினார்.

இன்றைய கும்பகோணம், பாபநாசம் என்னும் ஊரை மையமாக வைத்து 51 கிராமங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களை ஒன்றிணைத்து இக்குடியிருப்பு உருவாக்கப்பட்டது..

இக்குடியிருப்புக்கான நான்கு எல்லைகள் வரையறைச் செய்யப்பட்டு செப்பேடுகளில் ஆவணமாகப் பதிவானது...

இந்த செப்பேடுகளில் குறிக்கப்படும் நான்கு எல்லைகப் பற்றிய விபரங்களில் ஆவ்வூர்களைப்பற்றிய முழுமையான கட்டமைப்பை நம்மால் பார்க்க முடியும்..

எல்லைகளாக அளக்கும்   போது எதையெல்லாம் அடையாளமாக குறிப்பிட்டனர் என்றால்..
கோவில், குளம், ஏரி, வாய்க்கால் ,
 நில உடமையாளர்களின் பெயர்கள்.. ஊர் பொது இடம்,  சுடுகாடு,  இவை போன்ற இடங்கள் அடையாளமாகக் கூறப்பட்டன..

நிலத்தின் எல்லையை குறிக்கும் இடத்தில் மரக்கன்றுகளை நட்டனர். ( இன்று நாம் ஒரு இடம் வாங்கினால் நான்கு மூலைகளிலும் குத்துக்கல் இடுவது போல்) ...

அவ்வாறாக அடையாளமாக இருந்த வாய்க்கால்கள் விபரம்...

பிடிசூழ்தல் என்னும்  
நில அளவையே ஒரு வாய்க்காலில் இருந்துதான் துவங்குகிறது..

" இவ்வூர் நிலத்துக்கு வடகீழ் முலை இந்நாட்டு வெண்ணிக் கூற்றத்து வடசாத்தமங்கலத்து மேலெல்லை பூவனூர் வாய்க்கால் என்றழைக்கப்படும் வாய்க்காலின் தென்கரை கூடின இடமே துடங்கினர் '

பூவனூர் வாய்க்காலின் தென்கரையில் இருந்து பிடிசூழ் எல்லையை துவங்கினர்..

இங்கு ஆரம்பித்து மொத்த ஊர்களின் எல்லைகளையும் வரையறை செய்வார்கள்.. 

இது ஒரு மிக நீ.....ண்ட ஆவணம்..

பிடிசூழ்தல் எல்லையில் அடையாளமாக வைத்த வாய்க்காலின் பெயர்கள்...

1.பூவனூர் வாய்க்கால்.

2. அருமொழிதேவ வாய்க்கால்.

3. புல்வேளூர் வாய்க்கால்.

 4. ஜயங்கொண்ட சோழ பெருவாய்க்கால்.

5. கட்டி வாய்க்கால்.

6. செப்பு வழி வாய்க்கால்.

7. வடசிறு வாய்க்கால்.

8. உட்சிறு வாய்க்கால்

9. அரிகுல வாரண வாய்க்கால்.

10. சங்கரத்தான் வாய்க்கால்.

11. கரிகாலச்சோழ வாய்க்காலான மும்முடிச்சோழ பேராறு.

12. சோழக்கோன் வாய்க்கால்.

13.கோழி பொற்குளம்.

14. வெண்ணிப்பிலார் வாய்க்கால்.

15.கணவதி வாய்க்கால்.

16.பள்ளக்குடி வாய்க்கால்.

17.ஸ்ரீகண்டவாய்க்கால்.

18.பலபட்டான் பத்து வாய்க்கால்.

19.ஆம்பாக்குளம்.

20.சிங்களாந்தகன் வாய்க்கால்.

21.திருவாயன் வாய்க்கால்.

22.மயிமாலை வாய்க்கால்.

23ஸ்ரீபராந்தகன் வாய்க்கால்.

24.பறிலைத்தான் வாய்க்கால்.

25.இருமுடிச் சோழ பெருவாய்க்கால்.

26.காடுகாள் குளம்.

27. மதுராந்தகவதி வாய்க்கால்.

28. திருவெண்காடன் வாய்க்கால்.

28. காமபதாகை வாய்க்கால்.

30 மேட்டு வாய்க்கால்.

31. சிவபாதசேகரன் வாய்க்கால்.

32.உப்புக்குளம்.

33.நெற்குன்றத்து வாய்க்கால்.

34.திருவரங்கன் குளம்.

35. மேட்டு வாய்க்கால்.

36. இராசராசீவரத்து வாய்க்கால்.

37. .திருச்சிற்றம்பல வாய்க்கால்.

38. .தாமோதிரன் வாய்க்கால்.

39.மாசாத்தன் வாய்க்கால்..

51 கிராமங்களில்..
சுமார் 30 கி.மீ.சுற்றளவில்..
 39 நீர் ஆதாரங்கள் இருந்துள்ளது..

அனைத்து நீர் ஆதாரங்களுக்கும் மூலமாக காவிரியே இருந்துள்ளது. அது கரிகாலசோழ பேராறு என்று அழைக்கப்பட்டது.

காவிரித் தாயின் பேரின் ஒரு கோவிலும் இருந்தது. கோவிலுக்குச் சொந்தமாக நிலமும் இருந்தது.

" காவிரி நங்கை என்னும் பிடாரியார் நிலம் "

51 கிராமங்களில் மட்டும் 39 வாய்க்கால்கள் இருந்தது..

ஒட்டுமொத்த தமிழகத்திலும் எத்தனை வாய்க்கால்கள் இருந்திருக்கும்..?

யோசித்துப் பார்த்தால்...

" நீர் இல்லா ஊர் பாழ் "
என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நம்மவர்கள்..

அன்புடன்..
மா.மாரிராஜன்..

( Refrence.
சோழர் செப்பேடுகள்.
 முனைவர்..
க.சங்கரநாரயணன். )

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி