ரோமானிய தலைவர் லூசியஸ்
தலைமைத் துவத்துக்கு உதாரணமாக ரோமானிய தலைவர் லூசியஸ் சின்சினாடஸைச் சொல்வார்கள். நகருக்கு வெளியே உள்ள இடத்தில் சிறிய வீட்டில் வாழ்ந்து விவசாயம் செய்து கொண்டிருந்தார் லூசியஸ். கிமு 458 ல் அகி பழங்குடியினர் ரோமானிய படைகளை கடுமையாக தாக்கினர். முதலில் ஆதிக்கம் செலுத்திய ரோமானிய படை பின் அகி படையின் சூழ்ச்சியால் சுற்றி வளைக்கப்பட்டனர். நாடு வீழ்ந்து விடுமோ என்று பயந்து அனைவரும் விவசாயியான லூசியஸிடம் தங்கள் இடைக்கால தலைவராக இருக்க வேண்டினர். அவரும் ஒரு சிறிய படைக்கு தலைமை தாங்கி அகி படையை புத்தி கூர்மையால் போரில் வென்று அடுத்த 15 ஆவது நாளில் திரும்பவும் தன் பழைய வாழ்க்கைக்குச் சென்றார்.
அதன் பின் கிமு 439 ல் பிளேபியன் படையால் ரோமானிய அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது திரும்பவும் மக்கள் தலைமை தாங்க அழைக்க அவரும் ஒப்புக் கொண்டு போரில் வென்றார். இந்த முறை அவரை நிரந்தர தலைவராக இருக்குமாறு மக்கள் பல முறை வேண்டிய போதும் பதவி தேவை இல்லை என்று மறுத்து மீண்டும் விவசாய பணிக்கே சென்றார்.
அமெரிக்க தலைவர் வாஷிங்க்டன் கூட இவரது வாழ்க்கைமுறையால் கவரப்பட்டு அவரைப் போலவே தலைமைப் பதவியில் இருந்து விலகி விவசாயம் செய்தாராம். தேச பக்தி, தலைமை பண்புகளுக்கு இவரை வழிகாட்டியாக சொல்கிறார்கள். அமெரிக்காவில் இவரது நினைவாக " சின்சினாட்டி " என்று நகரத்துக்கு பெயர் வைத்தனர்.
ReplyForward |
Comments
Post a Comment