த்ரவிடர்களும் அதாவது தமிழர்களும்
ஹர்ஷசரிதம் என்பது ஹர்ஷவர்த்தனரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு பாணபட்டர் என்பவரால் இயற்றப்பெற்ற வடமொழி உரைநடை காப்பியம். இந்தக் காப்பியத்தில் ப்ரபாகர வர்த்தனரின் உடல்நலக்குறைவைக் கேட்ட ஹர்ஷவர்த்தனர் திரும்பிவரும்போது ஓரிடத்தில் இருக்கும் மக்களை வர்ணிக்கும் போது முண்டமாலைகளைக் காட்டி பைரவரை வேண்டும் த்ரவிடர்களும் அதாவது தமிழர்களும், இருகைகளை நீட்டி சண்டிகையை வேண்டும் ஆந்த்ரர்களும் இருக்கும் பகுதியை அடைந்தார் என்று குறிப்பிடுகிறது. ஏழாம் நூற்றாண்டில் தமிழர்கள் சிலர் வடநாட்டில் பைரவ உபாஸனையில் ஈடுபட்டிருந்தமைக்கு இது எடுத்துக்காட்டாகிறது.
Comments
Post a Comment