திரிலோக்கியநாதர் கோயில்
திரிலோக்கியநாதர் கோயில்
திருப்பருத்திக்குன்றம்
காஞ்சிபுரம் மாவட்டம்
குராமரம்
.............................. .......
வரலாற்று ஆர்வலர்
திரு.அன்பு வந்தியத்தேவன் அவர்களின் பதிவு:
தமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள் 7
குராமரம் குறிசொல்லும்
காஞ்சி மாவட்டம் திருப்பருத்திக்குன்றத்தில் இருக்கும் ஜீனாலயத்தில் "குரா" மரம் ஒன்றுள்ளது. சங்க இலக்கியங்களில் "குரவம்" என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் அடியில் இருக்கும் மேடையில் வடக்குப்புறச் சுவரில் ஒரு வெண்பா வடிவில் பாட்டுக் கல்வெட்டுள்ளது. இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு. அஃது
"ஸ்வஸ்திஸ்ரீ தன்னளவிற் குன்றா துயரா
து தண்காஞ்சி முன்னுளது மும்முனிவர்
மூழ்கியது மன்னவன் தன் செங்கோல்
நலங்காட்டுந் தென்பருத்திக் குன்றமர்ந்
த கொங்கார் தருமக் குரா ".
இதற்கு இருநூட்களில் இரு வேறுவிதமான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொ - 4 ல் "
திருப்பருத்திக்குன்றத்துக் கோவிலில் வாழ்ந்த மூன்று முனிவர்களுக்கு 'குரா' எனும் மரம் குன்றாமல் குறையாமல் இருந்து நிழல் தந்தது போன்று மன்னனின் செங்கோல் ஆட்சி சிறப்புடன் நடைபெற வழிகாட்டியது இம்மரம் என்று கூறுகிறது.
"தமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள் " என்ற நூலில்
இக்கோவிலில் 'குராமரம்' ஒன்றுள்ளது. அம்மரம் மூன்று முனிவர்கள் மூழ்கிய இடத்தில் உள்ளது. அம்மரம் தழைத்துக் காட்டினால் அரசுக்கு நன்மையும், வாடிக்காட்டினால் அரசுக்குத் தீமையும் ஏற்படும், அம்மரம் எப்போதும் ஒரே நிலையில் இருக்கும் என்று கூறகிறது.
எது எப்படியோ குராமரம் நன்றாக இருந்தால் காஞ்சியை ஆளும் அரசும் நன்றாக இருக்கும் என்பது மட்டும் தெளிவாக அறியமுடிகிறது.
தகவல் :
S.I.I. Vol -7, No: 399,
சாசன செய்யுள் மஞ்சரி, தமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொ - 4.
ReplyForward |
Comments
Post a Comment