அர்த்த சாஸ்த்ரத்தின் அரசனின் அறை
அர்த்த சாஸ்த்ரத்தின் அரசனின் அறையைக் குறிப்பிடும் கௌடல்யர், முதற்கட்டில் வில்லேந்திய பெண்களும், இரண்டாம் கட்டில் திருநங்கைகளும், மூன்றாம் கட்டில் ஏனைய அந்தப்புர காவலர்களும் காவலுக்கிருக்க வேண்டும் என்கிறார்.
இந்த அறைக்குத்தான் அரசி இரவில் வேண்டுமே தவிர அரசியின் அறைக்கு அரசன் செல்லலாகாது. அரசியும் ஒரு வயதான பெண்மணியினால் முழுவதும் பரிசோதித்த பிறகே உள்ளே நுழையலாம். காரணமாக அவர் குறிப்பிடுவன
1. பத்ர ஸேனன் என்னும் அரசன் தன் தேவியின் அறைக்குச்செல்லும்போது அவளுடைய தமையன் மறைந்திருந்து கொன்றான்.
2. காரூசனின் மகன் தனது தாயின் அறையில் மறைந்திருந்து தந்தையைக் கொன்றான்.
3. காசியரசனை பொரியோடு தேனைச் சேர்க்கிறேன் என்று கூறி விஷத்தைக் கலந்து கொன்றாள்.
4. வைரந்த்யனை அவன் மனைவி காற்கொலுசில் விஷம் தடவி மாய்த்தாள்.
5. ஸௌவீரனை அவன் மனைவி தனது இடையணியால் மாய்த்தாள்.
6. ஜாலூதனை அவன் மனைவி கண்ணாடியால் கொன்றாள்.
7. விடூரதனை அவன் மனைவி தனது பின்னலில் கத்தியை மறைத்து கொண்டு சென்று கொன்றாள்.
ஆகவே மனைவியையும் முழுவதும் பரிசோதித்த பிறகே அனுமதிக்க வேண்டுமென்கிறார்.
Comments
Post a Comment