கங்கை கொண்ட சோழபுரத்து கன்யாபடாரியார்

 கங்கை கொண்ட சோழபுரத்து கன்யாபடாரியார்




கன்யாகுமரிக்கு முதலாம் ராஜேந்த்ரன் காலத்தில் குமரியான கங்கைகொண்ட சோழபுரம் என்றே பெயர் நிலவியது. அன்னைக்கு கன்யாபட்டாரிகா என்ற பெயரே கல்வெட்டில் பயின்றுவந்துள்ளது. தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் வீற்றிருந்த ராஜேந்த்ர சோழன் குமரியான கங்கைகொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியிருக்கும் கன்யாபடாரிக்கு தன் தேவியான கிழானடிகள் பிறந்த ஹஸ்த நக்ஷத்ரத்தில் சிறப்பு பூஜைகளுக்காக ராஜராஜேச்வரம் மற்றும் ராஜராஜப்பெருஞ்சாலைக்கு விடப்பட்ட சில வரிகளை மாற்றிக் கொடுத்த செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது. 

12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வேறொரு கல்வெட்டு கோயிலில் நிகழ்ந்த மஹாநவமியைக் குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி