பந்தயத்தில் தோற்றால் கோயில் விளக்கு
பந்தயத்தில் தோற்றால் கோயில் விளக்கு
சுந்தர சோழனின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று வாலிகண்டாபுரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு ஒரு ச்வாரஸ்யமான தகவலைத் தருகிறது. மறவன் தூங்கானையானு பிராந்தக வளநாடுடையான் என்பவனும் அவனுடைய மைத்துனன் வாணரயன் அரவிஞ்சன் இராசாதித்தன் என்பானும் கோழிபொருத்தினர். அதாவது சேவல்சண்டைக்கு விட்டனர். அதில் இராசாதித்தன் தோற்றதால் பிராந்தக வளநாடுடையான் நலமாக இருக்க கோயிலில் திருவாலீச்வரருக்கு ஒரு விளக்கேற்ற ஏழு செம்பொன் அளித்தான். இந்தத் தகவல் கல்வெட்டில் பதிவாயுள்ளது.
பந்தயம் வைப்போர்கள் இப்படி கோயிலுக்கு ஆன்மீக ரீதியிலோ அல்லது பொதுமக்களுக்கு பயன்படும்படியோ பந்தயம் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
Comments
Post a Comment