ஆண்களுக்கு நடுவகிடு

 ஆண்களுக்கு நடுவகிடு





ஆண்கள் நடுவகிடு எடுப்பதென்பது புதியதல்ல. நைஷதீய சரிதத்தில் நளனை வர்ணிக்கும் ஸ்ரீஹர்ஷர்

विभज्य मेरुर्न यदर्थिसात्कृतो न सिन्धुरुत्सर्गजलव्ययैर्मरुः ।
अमानि तत्तेन निजायशोयुगं द्विफालबद्धाश्चिकुराः शिरः स्थितम् ॥ १.१६ ॥
விப⁴ஜ்ய மேருர்ன யத³ர்தி²ஸாத்க்ருʼதோ ந ஸிந்து⁴ருத்ஸர்க³ஜலவ்யயைர்மரு: | 
அமானி தத்தேன நிஜாயஶோயுக³ம்ʼ த்³விபா²லப³த்³தா⁴ஶ்சிகுரா: ஶிர: ஸ்தி²தம் ||  1.16 |

என்று கூறுகிறார். அதாவது கேசத்தை இரண்டாகப் பிரித்து உள்ளனர். அதைப் பார்ப்பதற்கு அவன் மனத்தின் இரு பழியைக் கருமையாகத் தரித்ததைப் போலிருக்கிறதாம். அந்த இரு பழிகள் - மேரு மலையைப் பிரித்துக் கொடுக்க யாசிப்பவர்கள் இல்லை. நீர்வார்த்துக் கொடுத்தே கடலைப் பாலைவனமாக மாற்றமுடியவில்லை. இந்த இரண்டு பழியையும் குறிப்பிடுவதற்காகவே இருபகுதியாகப் பிரிந்த கேசங்களைத் தரித்தானாம் நளன்.

காப்பிய கற்பனை இருக்கட்டும். ஆண்களும் நடுவகிடு எடுத்ததற்கு இது ஆதாரமல்லவா. நளன் எடுத்தானோ இல்லையோ. இந்தக் காப்பியம் எழுதப்பெற்ற பத்தாம் நூற்றாண்டில் இருந்திருந்தால்தானே கவிஞருக்கும் கற்பனை ஓடியிருக்கும்...

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி