Posts

Showing posts from May, 2021

சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் நூல் வெளியீட்டு விழா

Image
  அனைவருக்கும் வணக்கம்! நாளை, இந்திய / இலங்கை நேரம் மாலை 6 மணிக்கு... தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் இணையவழி நூல் வெளியீட்டு விழா நூலாசிரியர்: சிவராமகிருஷ்ணன் ----------------------**------ --------------- திசைக் கூடல் - 211 ----------------------**------ --------------- மே 23 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021 ----------------------**------ --------------- சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் இணையவழி நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நிரல்: வாழ்த்துரை: பேரா.கண்ணன் நாராயணன், மலேசியா   நூல் வெளியீடு: முனைவர்.க.சுபாஷிணி, ஜெர்மனி  திறனாய்வு 1: திரு.சபாரத்தினம், கோவை  திறனாய்வு 2: முனைவர்.தேமொழி, வட அமெரிக்கா  ஏற்புரை: முனைவர். ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் (நூலாசிரியர்) ----------------------**------ -------------- தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:  திரு. மு. விவேக், விருதுநகர்  செயற்பாட்டாளர், தமிழ் மரபு அறக்கட்டளை. ----------------------**------ --------------- ஜூம் வழி இணைய: https://us02web.zo...

இரண்டாம் புலகேசியின் இனிய உபதேசம்

Image
      சாளுக்ய மன்னன் இரண்டாம் புலகேசி இணையற்ற வீரன். ஹர்ஷ வர்த்தன னையும் வென்கண்டவன். தமிழகத்திலும் மஹேந்த்ர பல்லவனை வென்று காஞ்சியைத் தாண்டி காவேரி வரைப் போந்தவன். அவன் தானமளித்த பின்னர் வழங்கிய செப்பேட்டின் இறுதியில் அவன் கூறுவதைப் பாருங்கள்.. யதோஸ்மத் ³ வம் ʼ ஶ்யைரன்யைர்வ்வாகா ³ மி-ந்ரு ʼ பதி போ ⁴ க ³ பதிபி ⁴ ர் நலவேணுகத ³ லீஸாரம் ʼ ஸம்ஸாரமுபலப் ⁴ ய உத ³ தி ⁴ ஜலவீசிசஞ்சலாம் ʼ ஶ்ச விஷயான்னவனித ⁴ ரஶிக ² ரகடகதடலஸிதஸலிலரயக ³ த்வரஞ்ச ஜீவிதமவக ³ ம்ய மஹாபூ ⁴ த பரமாணுஸ்தா ² ஸு ச மஹத்ப ² லம் ʼ   ஶரச்சந்த் ³ ரகிரணத ⁴ வலம் ʼ யஶோ நிரூப்யாஸ்மத் ³ தா ³ யோனுமந்தவ்ய: பரிபாலயிதவ்யஶ்ச |      நான் கொடுத்த இந்த தானத்தை என் வம்சத்தில் வந்தவரோ பிறரோ மன்னர்கள் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் இந்த உலகமோ புல் , மூங்கில் , வாழை இவற்றைப் போன்று வலிமையற்றது. உலகத்துப் பொருட்களோ கடலின் அலைகளைப் போல நிலையற்றவை. வாழ்க்கையோ மலையின் முகட்டுச்சியின் கூர்மையில் சிறிது நேரமே நிற்கும் மழைத்துளியைப் போன்றது. ஆனால் மஹாபூதங்களிலும் பரமாணுவிலும் கூட பெரும் வலிமையை அளிப்பது சர...

வெண்பாவூர் கல்வெட்டு

Image
  சுவேத நதியின் வட கரையில் அமைந்த ஊர் வடகரை எனவும் , தென்கரையில் அமைந்த ஊர் வெண்பாவூர் எனவும் அழைக்கப்படுகிறது. வெண்பாவூர் பெருமாள் கோயிலை வரதராஜபெருமாள் கோயில் என இப்போது அழைக்கிறார்கள். ஆனால் கல்வெட்டு மலைமண்டல பெருமாள் கோயில் என கூறுகிறது. இந்த கோயிலின் முன்புறம் 5 வரிகளில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதன் வாசகம் 1. ஸ்வஸ்திஸ்ரீ சித்தி 2. ரமேழி மலை மண்டல 3. த் தேசி விண்ணகர் 4. தாயிலு நல்ல பெ 5. ருமாள். இது 3 ஆம் இராசராசன் காலத்தில் தாயினும் நல்ல பெருமாள் என்ற வாணகோவரையன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும்.   இல. தியாகராஜன் ஐயா இது பற்றிய விளக்கத்தில் சோழர் காலத்தில் விவசாய பெருங்குடிகள் ஒன்றிணைந்து சித்திரமேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இவர்கள் பொருள் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டனர். விவசாய வாணிக குழுக்கள் வெம்பார் நகரத்தில் தங்கி வணிகம் செய்தனர் என குறிப்பிடுகிறார். இக்கல்வெட்டின் மேற்பகுதியில்   குத்து விளக்கு , கும்பம் , ஏர்கலப்பை , நகை செய்ய உரசும் கல் அல்லது உடுக்கை , குத்து விளக்கு , வில் போன்ற குறியீடுகள் உள்ளன. 

தமிழகக் கல்வெட்டில் தற்கொலைகள்

Image
    கல்வெட்டில் அரிய தகவல்கள் . .....   இன்று நாம் பழைமையான திருக்கோயில்களை அழித்து விட்டு புதிதாக கட்டும்போது   முகநூலில் பதிவு போட்டுட்டுவிட்டு நமது வேலை பார்க்க சென்று விடுகிறோம்     ஆனால் அக்காலத்தில் மக்கள் வழிபாடு இன்றி கிடக்கும் கோவிலின் தோற்றத்தை பார்த்து மணம் பொருக்கமால்     கோபுரத்தில் ஏறி மீண்டும் கோவிலில் வழிபாடு நடைபெற தனது உயிரை தியாகம் செய்து உள்ளார்கள்     திருச்சி மாவட்டம் அன்பிலில் திருவான் கொடையார் கோவிலுக்கு நிலம் ஒன்று ஊருக்குப் பொதுவாக இருந்தது . ஊர்ப் பொது நிதியிலிருந்த ு வரி செலுத்தினர் . ஆனால் காலப்போக்கில் இந் நிலத்தை ஊர் மகாசபையினர் தம் பெயரில் எடுத்துக் கொண்டனர் . இதனைப் பழுதயாண்டார் என்பவர் எதிர்த்தார் . தன் உயிரைக் கோவில் கோபுர மேறிக்கீழே விழுந்து நீத்தார் .   இதன் பின் ஊர் மகாசபையாரும் ஊர் முதலியும் , ஊர் மக்களும் ஒன்றுகூடி ஆய்வு செய்து கோவில் அதிகாரியின் கணக்குப்படி நிலத்தை மகாசபையாரிடமிருந்து எழுதி வாங்கி மீட்டு ஊர்ப் பொதுவில் சேர்த்தனர் . ( புலவர் ஆ . சிவசுப்பிரமணியன் 2007 ...

வேளான் பள்ளி

Image
           தாதன்கோட்டையிலிருந்து அடுத்ததாக வந்தடைந்த இடம் ஓர் குக்கிராமம். திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் நல்லமனார்கோட்டை என்னும் ஊரிலிருந்து வலதுப்புறமாக இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெரும்புள்ளி என்னும் ஓர் சிறிய கிராமம்.   அங்குள்ள கன்னிமார் கோவிலுக்கு செல்லும் வழியில் வயல்வெளிகளினூடே இரண்டு நடுகற்கள் உள்ளன. அதில் ஒரு நடுகல் இரண்டாக உடைந்த நிலையில் கல்வெட்டுகளை தாங்கியுள்ளது. இதன் காலம் கல்வெட்டின் எழுத்தமைதியை கொண்டு பத்தாம் நூற்றாண்டாக கொள்கின்றனர்.   நடுகல் கல்வெட்டு :     1. ஸ்ரீ அரையரெள் 2 ளி கோய்த்திர 3 னான மதுரா 4 ந்தகப் பள் 5 ளி வேளான் ப 6 ள்ளி நாட்டு நி 7 ரை போகயில்   8. பட்டான்   செய்தி :     பள்ளி நாட்டு ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்து சென்ற போது அரையரெள்ளி கோய்த்திரனான மதுராந்தகப் பள்ளி வேளான் என்ற வீரன் சண்டையிட்டு இறந்துள்ளான். அவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது.     அதனையடுத்த கன்னிமார் கோவிலின் அருகேயுள்ள பாறையில் ...