ப்ரஸேனஜித்

 

                                                    

        






    பொயுமு ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பதினாறு. ஜனபதங்கள் அதாவது அரசுகள் கோலோச்சின. இவற்றுள் ஒன்று கோஸலம். இதன் அரசனாக ப்ரஸேனஜித் என்பவன் ஆண்டான். இவன் புத்தரின் காலத்தைச் சேர்ந்தவன். இவன் சாக்யர்களிடம் பெண்கேட்க அவர்களோ கொடுக்க விருப்பமின்றி மறுக்கவும் முடியாமல் அரசகுமாரி யின்றி முறையற்று பிறந்த வாஸிக்ஷத்ரியாவை அரசகுமாரி என்று கூறி மணமுடித்துக். இவர்களுக்கு விடூடபன் என்பவன் பிறந்தான். அவன் தனது தாயின் வீட்டிற்குச் சென்றபோது உண்மை தெரிந்தது. உண்மை அறிந்த ப்ரஸேனஜித் இருவரையும் விலக்கி வைத்தான். பிறகு புத்தர் கூறியதால் ஏற்றான்
    இவன் பிம்பிஸாரனுக்கு தன் மகளைக் கொடுத்திருந்தான். விடூடபன் தந்தையை வீழ்த்தத் தருணம் பார்த்திருந்தான். ப்ரஸேனஜித் புத்தரைப் பார்க்க ப்ரயாணம் செய்தபோது அரசைக் கைப்பற்றினான். திரும்பிவந்த ப்ரஸேனஜித் கோட்டைக்கு வெளியே நிற்க வேண்டியதாயிற்று. மருமகனிடம் உதவி கோர ராஜக்ருஹம் சென்றான். இரவு. கடும்பனி. கோட்டைக் கதவுகள் மூடியிருந்தன. காலை சந்திக்கலாம் என்று வெளியே காத்திருந்த ப்ரஸேனஜித் பனியில் காலனைத்தான் சந்தித்தான். இப்படி ஓங்கி வாழ்ந்து ஓய்ந்து இறந்த மன்னனின் வரலாறும் எங்கோ மூலையில் இருக்கிறது.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி