தமிழ் வாணியர் இன வரலாறு

 


 




வாணியர் பற்றிய தரவுகளை ஓரிடத்தில் குவித்தல் அல்லது தொகுத்தளித்தல்

2.   தமிழக வாணியர் வேறு வைசியர் வேறு என நிறுவுதல்

3.   சாதிய கொடுமைகளை விவரித்தல்.

4.   வாணியர் வரலாற்றை விளக்குதல்

5.   செட்டியார் எனும் பின்னொட்டினை ஆய்தல்.

6.   கல்வெட்டு செய்திகளில் வாணியர் பற்றி ஆய்தல்

7.   சொற்பிறப்பியல் மூலம் நிறுவுதல்.

8.   செக்கின் வரலாற்றை விவரித்தல்

9.   வாணிய முன்னவர்கள் பற்றி கூறல்

10.  வாணியர்கள் தன் இன வரலாறு அறியும் பொருட்டு மட்டுமே தொகுக்கப்பட்டது

 

1.முன்னுரை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

 

ஒளவையின் முதுமொழியாம் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்கவும் வள்ளுவரின் செய்க பொருளை என்ற கட்டளைக்கிணங்கியும் வாழ்ந்தவர்களே தமிழர்கள். தமிழர்களில் ஆடவர் திரவியம் ஈட்டுவதிலும் பெண்டிர்  அவர்கட்கு இணையான தொழிலில் உதவி புரிந்தும் வந்துள்ளனர்.ஆணும் பெண்ணும் சமமாகவே நடத்தப்பட்டு வந்தனர்.   தொல் பழந்தமிழர் காலமானது லெமூரியா என்றழைக்கப்படும் குமரிக்கண்டத்திலிருந்து தொடங்குகின்றது. இதன் காலம் சுமார் இருபதாயிரம்(20,000) ஆண்டுகளுக்கு முன்பு ஆகும்.

தமிழகம் உலகத்தின் மையப்பகுதியாக இருந்தமையால் கிழக்கு நாடுகளையும்  மேற்கு நாடுகளையும் இணைக்கும் ஒர்  தொழில் இணைப்பு பாலமாகவும் தொழில் முனையமாகவும் தமிழகம் இருந்து வந்துள்ளது. அதனை முசிறி பாப்பிரஸ்(1கி.மு) என்னும் சான்று நிறுவுகின்றது. குமரிக்கண்டமானது தற்போதுள்ள தமிழ்நாட்டிற்க்கு தெற்கே இருந்ததென்றும் அஃது நீரூழி கொண்டதென்றும் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.

    


    "வடிவே லெறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள "

என்ற குறி்ப்பு காணப்படுகிறது.

-சிலம்பு (நாடு காண் காதை)


 

தொல் தமிழர்களின் வரலாற்றை நாம் இலக்கியங்கள் ஊடாகவும் கல்வெட்டுக்கள் ஓலைச் சுவடிகள் போன்ற முதன்மைத்தரவுகள் மூலமும் அறியமுடிகின்றது. தற்போதுள்ள இலக்கிய நூல்களில் இறையனார் அகப்பொருளும், தொல்காப்பியமும் காலத்தினால் முந்தியவை. தொல்காப்பியம், அகம், புறம், ஐம்பெரும் காப்பியங்கள், பதிணென் கீழ்க்கணக்கு போன்ற நூல்கள் தமிழர் வாழ்வியல் மற்றும் வணிகம் பற்றி சான்றுறைகின்றன.

 

2. தமிழரில் வணிக குலங்கள்:

     தமிழரில் இனங்கள் தத்தம் செய்தொழில் கொண்டே வகைப்படுத்தப்பட்டது. எனினும் யாவரும் வேற்றுமை பாராது உயர்வு தாழ்வு நோக்காது வாழ்ந்து வந்தனர். கடைச் சங்க இலக்கியங்கள் சுட்டும் தொழிற்குடிகள் என்பது (80) வகையின. அவற்றில் வணிக தொழிற்குலங்களாவன:

1.      அங்காடிவாணிகர் (நாளங்காடி வணிகர், அல்லங்காடி வணிகர்),

2.      ஆட்டு வாணிகர்,

3.      இலையமுதிடுவார் (இலை வாணியர்),

4.      காழியர் (பிட்டுவாணிகர்),

5.      கூலவாணிகர்,

6.      கூவியர் (அப்ப வாணிகர்),

7.      பரதர் (செட்டிகள்),

8.      பொன்வாணிகர்,

9.      நூழிலார் (செக்கார்)

10.     கொழு வாணிகர்

11.     அறுவை வாணிகர்

12.     நகரத்தார்

13.     பாணித வாணிகர்

14.     உமணர்

 

சூடாமணி நிகண்டு எள்நூஎண் ஆகிய மூன்று பெயர்களை எள்ளுக்குத் தருகின்றது. இங்கு நூழிலார் என்று அழைக்கப்பெறும் இனம் செக்கினை ஆட்டி எள்ளிலிருந்து எண்ணெய் கொணரும் இனமே ஆகும். பின் வரும் பாடல் அதனைத் தெளிவிக்கின்றது.

ள்வாள் வீசிய நூழிலு முளப்படப்புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.                (தொல்காப்பியம். புறத். 17).

நுழு - நூழ் - நூழில் = 1. குழியுள்ள செக்கு (அக. நி.). 2. கொன்று குவிக்கை. ஒள்வாள் வீசிய நூழிலும்” (தொல். புறத். 17).

நூழிலர் = செக்கார், வாணியர்.

நூழிலாட்டு = செக்காட்டுவதுபோற் கொன்று குவிக்கை.

சங்க காலத்தில் செக்கு தொழில் இருந்தமையை இப்பாடல் மூலம் நிறுவலாம்.

 

3.பழந்தமிழர் வணிகம்:

வாணிகமே ஒரு நாட்டின் செல்வ வளத்தைக்கணிக்கும் அளவு கோளாகும்.பழந் தமிழர்களின் வாணிகம் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தென்னிந்தியர் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தனர் என்று தாலமி, பிளிநி போன்ற அயல் நாட்டார் எழுதிவைத்த குறிப்புகளைக் கொண்டும் புதைபொருள் ஆராய்ச்சி கொண்டும் அறிஞர் கூறுகின்றனர். கி.மு.10ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து கப்பல்கள் மூலமாக மயில் தோகை, யானைத்தந்தம்,மணப்பொருள்கள் முதலியன ஏற்றுமதியாகின.

எருதுகள் பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. பொனீசியருடைய (Phoenicia) கப்பல்களில் சேரநாட்டு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பு பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அரிசி, மயில், சந்தனம் முதலியன அனுப்பப்பட்டன. தமிழகத்திலிருந்து ரோமப் பேரரசுக்கு இரும்பு,விலங்குகளின் தோல்கள், ஆட்டுமயிர், நெய் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன. சேரநாட்டிலிருந்து யானைத் தந்தம், ஆமை ஓடுகள்அனுப்பப்பட்டன. மதுரை, உறையூர் இவற்றிலிருந்து முத்துக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. சான்றாக


 

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்,

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப்பிறந்த ஆரமும் அகிலும்,

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும்,

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்.... (பட்டினப்பாலை, 185-193)

பாண்டியர் துறைமுகங்ளிலிருந்து  நெல், அரிசி, உப்பு, அவிழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு, எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி, மஞ்சள், பாக்கு, மிளகு, சுக்கு, தேன், சந்தனம், அகில், பன்னீர், கற்பூரம், சாந்து, புனுகு, கஸ்தூரி, சவ்வாது, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை, பட்டு, நூல், கொடி, கணபம், இரும்பு, செம்பு, வெண்கலம், குதிரை, யானை, ஒட்டகம், சவுரி மயிர், முத்து, சிப்பி, மணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது

 

4.பழந்தமிழர் வணிக குழுக்கள்:

     துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் பல வணிகக் குழுக்கள் இருந்தன. அவை,

1.  மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் - காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்தச் செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.

2.   நகரத்தார் -முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார்  என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது..

3.   மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள் - இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தைக் கவனிப்பவர்கள்.

4. நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார் - இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ்பெற்றவை. சாயல்குடியில் இக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏறிவீரப்பட்டினம் உள்ளதை அடுத்து இவர்களின் வணிகச்சிறப்பை அறியலாம்.

5.  தென்னிலங்கை வளஞ்சியர் - இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.

6.      சோனகரர் - இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்.

7.     அஞ்சுவண்ணம் - இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.

 

5.வணிகர்களுக்கு செட்டியார்எனும் பின்னொட்டு இடக் காரணம்:

 செட்டியார் என்பது சாதிப்பெயர் அல்ல அது வணிகம் செய்வோர்க்கான பொதுப்பெயராகும். பெரும்பொருளீட்டி நாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப் பண்டை யரசர்கள் அளித்த பட்டம் எட்டி என்பது

"எட்டி குமரன் இருந்தோன் தன்னை" (மணிமே.4.58).

எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். எட்டு -எட்டி = உயர்ந்தோன்.

பரம + எட்டி = பரமேட்டி(எல்லார்க்கும் மேலாக வுயர்ந்த இறைவன்) - மரூஉப்புணர்ச்சி.

எட்டி - செட்டி.

வடநாட்டு மொழிகளில் எகரக் குறிலின்மையால், செட்டி என்பது சேட்டி -சேட்எனத் திரிந்தது. பல்வேறு வாணிக வகுப்பார், செட்டி என்பதைப் பட்டமாக மட்டுமன்றிக் குலப்பெயராகவுங் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக

வாணியச் செட்டி.:

தொழில் - செக்காட்டி எண்ணெய் விற்றல்.

பிரிவு - காமாட்சியம்மா, விசலாட்சியம்மா, அச்சுத் தாலி, தொப்பைத் தாலி என நான்கு.

நாட்டுக் கோட்டைச் செட்டி

தொழில் - வட்டிக்குப் பணம் கொடுத்தல்.

பிரிவு - ஒன்பது கோவில்கள்.

காசுக்காரச் செட்டி.

தொழில் - பொன்மணி வாணிகம், காசுமாற்று.

கரையான் செட்டி-(பட்டணவன், பரவன்)

தொழில் - கடல் வாணிகமும் மீன் வாணிகமும்

                               (நன்றி: பாவாணர் தமிழர் வரலாறு பாகம் -2,பக்கம் 112)

செட்டி அல்லது செட்டியார் என்பது சாதிப்பெயர் அல்ல என்று 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகின்றது.

இப்பர்பரதர்வைசியர்கவிப்பர்,

எட்டியர்இளங்கோக்கள்,.ஏர்த்தொழிலாளர், பசுக்காவலர்

ஒப்பில்நாயகர், வினைஞர்,வணிகர் என்று

அத்தகு சிரேட்டிகள் செட்டிகள் பெயரே.

என சேந்தன் திவாகரம், செட்டியார் இனப் பிரிவுகளை அறுதியிட்டு கூறுகின்றது.

 

6.தமிழ்நாட்டில் இன்று உள்ள செட்டியார் வகைகள்:

1.   அகரம் வெள்ளாஞ் செட்டியார், 

2.   ஆயிர வைசியர்,

3.   செட்டு அல்லது செட்டி, 

4.   தேவாங்கர்,

5.   கற்பூர செட்டியார்,

6.   காசுக்கார செட்டியார், 

7.   பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தமச் செட்டியார், 

8.   சாதுச் செட்டி, 

9.   தெலுங்குச் செட்டி, 

10.  இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டியார், 

11.  சுந்தரம் செட்டி, 

12.  வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட),

13.  வெள்ளாஞ்செட்டியார், 

14.  வயநாடு செட்டி, 

15.  கொங்குச் செட்டியார்,

16.  குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட), 

17.  குறு உறனி செட்டி, 

18.  மவுண்டாடன் செட்டி, 

19.  சோழிய செட்டி, 

20.  தெலுங்குப் பட்டி செட்டி, 

21.  அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்), 

22.  ஆரிய வைசியச் செட்டியார் (கோமுட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,)

23.  பலிஜா செட்டியார், 

24.  பேரி செட்டியார், 

25.  சோழபுரம் செட்டியார், 

26.  காயல் செட்டி, 

27.  கொங்குச் செட்டியார்,

28.  கோட்டைப்புரச் செட்டியார், கோட்டைப்புர வைசியச் செட்டியார்,

29.  மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்), 

30.  நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்), 

31.  சைவச் செட்டியார் , 

32.  திருவெள்ளறைச் செட்டியார் என இன்னும் பல செட்டியார் வகைகள் உள.

கி.பி 11 ஆம் நூற்றாண்டு வரை தமிழக வணிக குழுக்களே தமிழகத்தில் இருந்தன. கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முதல் கி.பி 18 நூற்றாண்டு வரை பல வட நாட்டு (தமிழகம் அல்லாத) வணிக குழுக்கள் பிற்காலத்தில் தமிழகத்தில் சோழ மண்டலத்தில் வந்து தங்கி தங்கள் இன குழுக்களை விரிவுபடுத்திக்கொண்ட வரலாறும் உண்டு. அதை சேதுபதி மன்னர் செப்பேடு விளக்குகின்றது. தமிழக செட்டியார்கள் செய்த தொழிலையே அவர்களும் செய்யத்தொடங்கினர். அவ்வாறு தங்கி தொழில் புரிந்த இன குழுக்கள் தங்களையும் செட்டியார்கள் என்றே அழைத்துக்கொண்டனர். அதற்க்கும் சில கதைகள் கூறப்பட்டன.

மேலும் வாணிபத்தோடு தொடர்பு இல்லாத சில இனங்களும் தம் இனப்பெயரின் பின்னொட்டாக செட்டியார் என்ற சொல்லை தகுதி கருதி பயன்படுத்தி வருகின்றனர்.கி.பி 7ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்துமதம் தன்னை வலுப்படுத்திக்கொண்டது. கி.பி13 நூற்றாண்டுகளில் இந்து மத வல்லாதிக்கத்தால் நாலு வர்ண கோட்பாட்டின் அடிப்படையில் வைசியராக இருந்தாலும் பல செட்டியார் சாதிகள் கீழ் சாதிகளாகவே கருதப்பட்டனர். செட்டியார் இனம் பல பிளவுகளை சந்தித்தது. அதன் மூலம் பல புதிய செட்டியார் இனங்கள் தோன்றின.

தமிழகத்தில் இருந்த வாணியர்களில் ஒரு பிரிவு பூணூல் அணிந்தும் மற்றொரு பிரிவு பூணூல் அணியாமலும் இருந்ததற்கான காரணத்தை சிந்திக்க?

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்  செட்டியார்கள் தாங்கள் யார்க்கும் கீழானவர்கள் இல்லை என்பதை ஆங்கிலேய நீதிமன்றத்தில் வழக்காடி நிலைநாட்டினர். ஆயினும் மனு தர்ம சாஸ்த்திரத்தை காரணம் காட்டி கீழானவர்களாகவே நடத்தப்பட்டனர். 

 

7.வைசியன்-வைசிகன் வேறுபாடு:

தமிழக வணிகர்கள் தங்களை வைசியர் என்று அழைத்துக்கொள்ளவில்லை, மாறாக, ஆரிய வணிகர்களே தங்களை வைசியர் என அழைத்துக் கொண்டனர். சிலர் வேறுபாடு அறியாது வணிக வைசியன் என்றும் வணிக வைசிகன் என்றும் கூறுகின்றனர்  இப்பிழையை சில ஓலைச்சுவடிகளிலும் காணலாம்.

வைசிகன்: என்றால் வேசி

           வைசியன்: என்றால் வணிகன்

 

வைசிகன் என்னும் சொல் வணிகரைக் குறிக்காது வேசி என்னும் பொருளிலே பயில்கின்றது இது ஆய்விற்குரியது. வைசிகன் என்னும் சொல் தமிழில் எங்குமே பயிலக் காணோம். ஆனால் வைசியன் என்னும் சொல்லோ எழுத்திலும்பேச்சிலும் தனித்தும்ஆரிய வைசியர். தன வைசியர். கோ வைசியர் எனச் சொற்றொடராகவும் பரவலாகப் பயிலக் காண்கிறோம். பால வைசியன் என்றே பாடங்கொண்டு கூறுவதாவது: "வைசியன் என்னும் பெயர் வீசுதல் என்னும் தொழிற்சொல் அடிப்படையாகப் பிறந்த வடசொல்லாகும். விசுவோன்-விற்போன்பல்பண்டம் பகர்ந்து வீசும்'(பட்டி) என்பதனான் அறிக. விசுவோன் வைசியன் என வடமொழியாக ஆக்கம் பெற்றதென்க. இதற்கொத்த மேலையாரியச் சொற்கள் இன்மையும் காண்க. வைசிகன் என்பது பிழையான பாடம்."(பதிப்பு 89 பக்.216) இச் சொற்பிறப்பைப் பற்றிய ஆய்வு இங்கு மிக இன்றியமையாதது அன்றாயினும் வணிகன் என்பதற்கு வைசியன் என்பதே வழக்கிலுள்ள சொல்வைசியர்கள் வைசிய புராணத்தை போற்றி பயின்றனர்.

ஆதாரம்: (Vaisika - relating to or tracting of prostitution; associating with courtezans; versed in the art of courtezans.n.harlotry, the arts of horiots - Sanskrit-English Dictionary, Monier Williams Page 1026, Vaisik -(ki ) practised by harlots; vaisiki kolam - m.k 1.4. arts practised by harkots; vaisikaha-- a person who associates with harlots, a kind of hero in erotic works, vaisikam - harlotry arts of harlots - SANSKRIT - ENGLISH DICTIONARY.P.K.Gode and C.G.KARVEPt III Page 1505) 

 

8.தமிழக செட்டியார்கள் வளர்த்த சமய நெறி: ஆசீவகம்

ஆசீவகத்தை இந்துமதம் தனதாக்கிக் கொண்டபோது அது சைவம் என அழைக்கப்பட்டது தமிழகத்தில் உள்ள செட்டியார்கள் பலர் அன்றும் இன்றும் சைவ நெறியினையே போற்றி வாழ்ந்து வந்துள்ளனர். தமிழக செட்டியார்களின் வரலாறு கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தொடங்குகின்றது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் முழுக்க பரவியிருந்த மதம் ஆசீவகம் ஆகும். ஆசிவக சித்தர்களே அமணர்கள் என்றழைக்கப்பட்டனர். பின்நாளில் ஜைன(Jains) மதமும், புத்த மதமும் வேறூன்றத் தொடங்கிய பின் ஆசிவகம் தன் செல்வாக்கை இழக்கத் தொடங்கியது.


சாவகர் அருகர் சமணர் ஆகும்;

ஆசீ வகரும் அத்தவத் தோரே

   - திவாகர நிகண்டு

ஆசீவகம் தமிழகத்தில் கி.மு 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 14ஆம் நூற்றாண்டு வரை பரவி இருந்தது. அமணர்களுக்கும் ஜைனர்களுக்கும் நுண்ணிய வேறுபாடு அறியாத மக்கள் அமணர்களையும் சமணர் என்றே அழைக்கத் தொடங்கினர். வணிகர்கள் சாவக, அருக (ஜைனர்கள்), ஆசீவக நெறிகளைப் போற்றி வளர்த்த்மையை சிலப்பதிகாரம் மூலம் அறியலாம்.

ஆசீவகர்களூக்கு கி.பி 1ஆம் நூற்றாண்டில் வணிக செட்டியார்கள் பலர் கற்படுகைகளை அமைத்துத்தந்தனர். (.கா) அழகர் மலையில் உள்ள 13 கற்படுகைகள் வணிகர் ஈந்தவையாகும்.இதை பின் வரும் பாடம் மூலம் அறியலாம். அவற்றுள் சில..

கல்வெட்டுப் பாடம் (தமிழி எழுத்துக்கள்)

1. மதிரய் பொன் கொல்வன் அதன் அதன் - பொருண்மை: மதுரையைச் சேர்ந்த பொற்கொல்வன் ஆதன் ஆதன் என்பவர் படுக்கை அமைத்து கொடுத்துள்ளார்.

2.   மத்திரைகே உபு வணிகன் வியகன் - பொருண்மை: மதுரையைச் சேர்ந்த உப்பு வணிகன் வியகன் என்பவர் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.

3.   பாணித வணிகன் நெடுமலன் - பொருண்மை: சர்க்கரை வணிகன் நெடுமலன் என்பவர் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.

4. கொழு வணிகன் எளசந்தன் - பொருண்மை: கொழு வணிகன் எளசந்தன் என்பவர் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.

5. வெண்பளி இ அறுவை வணிகன் எள அ அடன் - பொருண்மை:  வெண்பளி என்ற ஊரைச் சேர்ந்த துணி வணிகன் எளஅ அட்டன் என்பவர் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளார்


 

 

பின்னர் கி.மு.5 நூற்றாண்டில் களப்பிரர்கள் ஆட்சியில் ஆரிய பிராமணர்களுக்கு குடியானவர்களின் நிலங்களினை பிரம்மதேயம் என்ற பெயரில் தாரைவார்த்தனர். இந்து மதம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது கி.பி 7ஆம் நூற்றாண்டில்  எண்ணாயிரம் ஆசீவக தவத்தோர் எனப்பட்ட சமணர்கள் சம்பந்தரால், நின்ற சீர் நெடுமாற பாண்டியன் கழுவேற்றினான்.


 

மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்

துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்

முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்

கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க

-பெரியபுராணம்

ஆசிவகம், புத்தம், அருகம்(ஜைனம்), வழக்கொழிக்கப்பட்டு இந்து மதம் புகுத்தப்பட்டது. ஆசீவக முதன்மைத் தெய்வங்கள் இந்துக்களின் முதன்மைத் தெய்வமாக மாற்றப்பட்டனர். முதன்மைச் சித்தர்கள் நாட்டார் வழக்காற்றியல் தெய்வங்களாக மாற்றப்பட்டனர். அதனை மறைக்க பல கதைகளும் புனையப்பட்டன.  

ஆசீவக முதன்மைத் தெய்வங்களாவன,

சிவன்,(முதல் சித்தர் முதல் சங்கம்) முருகன்,(இரண்டாம் சித்தர், இரண்டாம் சங்கம்) மாயோன்(அரசர் காலந்தெரியை உருவாகியவர்), இராவண்ணன், இந்திர சித்தன், இவர்கள் பஞ்சமுனிகள் எனப்பட்டனர் பின்னாளில் அவர்கள் பெயர் மாற்றப்பட்டு வாழ்முனிசெம்முனிகருமுனிமுத்துமுனிவேதமுனிபூமுனி அழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் எழுவர்களாக மற்றப்பட்டனர். இன்றும் ஊர்ப்புற பச்சையம்மன் கோவில்களில் இவர்களைக் காணலாம்.


 

முதன்மைச் சித்தர்கள்

அறப்பெயர் சாத்தன், மற்கலி, பக்குடுக்கை நன்கனியார், அய்யனார் உடனுறை பூரண புட்கலை, சின்னையன், தர்ம சாஸ்தா எனப்படும் ஐயப்பன் ஆகியோர் ஆவர். வாணியர் சமுதாயத்தினர் அதிகமாக குல தெய்வமாக அய்யனார் (சாஸ்தா) வை கொண்டு இருப்பதன் காரணம் ஆசீவகம் தான்.

நகரத்தார் சாத்தன் என்னும் பெயரை இன்றளவும் தம் குழந்தைக்களுக்கு சூட்டி மகிழ்கின்றனர். சாத்தன் என்னும் சொல் வ்ணிகரையே குறிக்கும் என பாவாணர் கூறியுள்ளார். நாட்டின் பல இடங்களுக்கும் தத்தம் காவற்படையுடன் சென்று பொருளீட்டிய வணிகக் கூட்டங்களுக்கு சாத்து என்று பெயர். சார்த்து  சாத்து : சார்தல்  சேர்தல் என்பது பொருளாம்”. வணிகக் சாத்துக்களின் காவல் தெய்வத்திற்கு சாத்தன் என்று பெயர். அவரே ஐயனார். அதனாலேயே அக்காலத்தில் வணிகர்கள் சாத்துக்கள், சாத்துவன், சாதுவன் என்று அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் உள்ளூர் வணிகர்கள் பெரும்பாலும் குதிரைகளில் சென்றே வாணிகம் செய்தனர். அதனாலேயே ஐயனாருக்கு குதிரை வாகனமாகியது. சாத்தன் என்னும் பெயர் வடமொழியில் சாஸ்தா எனத் திரியும்.


 

முருக வழிபாட்டை இன்றளவும் போற்றி வளர்ப்பவர்கள் நகரத்தார் ஆவர். நகரத்தாரின் பிள்ளையார்பட்டி (ஆசீவக குறியீடு யானையாம்) இன்றளவும் ஆசீவக நெறிக்கு சான்று. வ்ணிகர்கள் திரை செல்லும்போது ஆசீவகர் ஒருவரை உடன் அழைத்து செல்லும் பழக்கமும் உண்டு.

வாணியர்கள் கோவில்களில் உள்ள நந்தா விளக்கு எரிக்க ஆட்டிய எண்ணெயை வழங்கியுள்ளனர். தஞ்சை வல்லம் கல்வெட்டு அதற்கு சான்றுபகருகின்றது. திருவிளங்க நகரத்தார் என்று அழைக்கப்படும் வாணியர்களால் கொழும்புவில் கிபி.1783 இல் சிவன் கோவில் (தீவு சிவன் கோவில்) கட்டப்பட்டது. இவ்வாறாக செட்டியார்கள் பலர் கோவில்களுக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்துள்ளனர்.

(ஆசீவகத்தை முழுமையாக அறிய முனைவர் க.நெடுஞ்செழியனின் ஆசீவகமும் ஐயனாரும் என்ற நூலை நோக்குக)

 

9.வாணியரின் சுருக்க இன வரைவு

எள்ளினைச் செக்கில் ஆட்டி எண்ணெய் கொணரும் இனமே வாணியர் இனம் எனப்பட்டது. இஃது சங்கரப்பாடியார் என அழைக்கப்பட்டு வாணியர் என்றே நிலைபெற்றது. எள்ளிலிருந்து எண்ணெயை பிரித்தெடுத்த காலமே வாணிய இனத்தின் தோற்றமாக் கருத முடியும். அதற்கு சரியான சான்றுகள் இல்லாததால் அதை நிறுவ இயலவில்லை. செக்கு என்னும் சொல் சக்கு-எனப்படும் சக்கரத்தின் மூல வேர்ச்சொல்லிருந்து உருவானதாகும். தமிழகமே அதன் தாயகமாகும் என உறுதியாக கூறலாம்.

தமிழ்நாட்டு செக்கு இயந்திரம் சக்கரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.  தொடக்க காலத்தில் எள் வித்திலிருந்தே நெய்யானது பிரித்தெடுக்கப்பட்டது. எனவே அது எள்நெய், எள்+நெய் எண்ணெய் என அழைக்கப்பட்டது. எண்ணெய்க்கு தைலம் என்ற மற்றொரு வடமொழி பெயரும் உண்டு. நல்லெண்ணெய் தில தைலம் என வட மொழியில் அழைக்கப்பட்டது.

இருந்தையிலம்பன்ன கண்ணார்க்கல்லால் வெண்ணெயில் லிலொளித்

இருந்தையிலங்கையரங்கர்க்கன் பாகியிருக்கிலரே.

                                                                                                             (திருவரங்கத்தந்தாதி)

திலம்-எள்ளு

தைலம்-நெய்

தென்னக எள் கருப்பு நிறத்திலும் அயலக எள் மங்கிய வெள்ளை நிறத்திலும் காணப்பட்டது. தென்னிந்தியாவில் கி.பி.முதல் நூற்றாண்டிலேயே தேங்காய் பயன்பாட்டிலிருந்தது.  இங்கிருந்து தேங்காய் ரோம் நாட்டிற்குச் சென்றது பற்றிய குறிப்பு உண்டு.  தமிழகத்தில் தேங்காயை அரைத்து எண்ணெய் எடுக்கும் இயந்திரம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கின்றது. 


 

 சான்றாக தாராசுரம் கோவிலில் எண்ணெய் ஆட்டும் செக்கின் சிற்பம் உண்டு.  செக்கை இரண்டு காளைகள் ஓட்டுவது போலவும் செக்கின் பின்னால் செக்காட்டுபவனும் உதவியாளாக ஒரு பெண்ணும் நிற்பது போலவும் சிற்பம் எழுதப்பட்டுள்ளது.

 ஆரம்ப காலங்களில் சமையலுக்கும்  கோவிலுக்கும் வீட்டுக்கும் விளக்கெரிக்கவும் நெய் தான் பயன் படுத்தப்பட்டு வந்தது. பின்னால் தான் தாவர வித்துக்களில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. தொடக்கக்காலத்தில் எள்ளிலிருந்து தான் எண்ணெய் பிழியப்பட்டது. எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எள் நெய் எண்ணெய் ஆனது. பிறகு தான் தேங்காய் நெத்துஆமணக்கு விதை கடலை வித்து போன்றவற்றிலிருந்தும் எடுக்கப்பட்டது. அவற்றையும் தேங்காய் எண்ணெய்ஆமணக்கு எண்ணெய்,  கடலை எண்ணெய் என்றுதான் குறிப்பிட்டனர். எள் நெய் ஆகிய எண்ணெய் நல்லெண்ணெய் என்று அதாவது முதல் எண்ணெய் என்று சிறப்பாக அழைக்கப்பட்டது. இவ்வாறு எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் பிழிந்து எடுக்க செக்கு என்கிற ஒரு கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது.

 

10.அயலக எண்ணெய் வரலாறு:

கி.மு.2500 ஆண்டு வாக்கில் ஆலிவ் எண்ணெய் பிழிந்த்தெடுக்கும் பழக்கம் மத்திய தரைகடல் பகுதியில் நிலவியது. சமையலுக்கும் விளக்கெரிக்கவும்  மருத்துவத்திற்கும் பயன்படுத்தினர். அயலக ஆலிவ் செக்கு தமிழக செக்கு வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டது.

 

 

குமரிக்கண்ட எச்சங்களான ரீயூனியனிலும், சிசிலி தீவில் பழந்தமிழரின் கல் செக்கும் மரச்செக்கும், இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. அவர்கள் எண்ணெய் ஆட்டும் முறையும் பழந்தமிழரை ஒட்டியே உள்ளது

சிசிலி அரசு செக்கினை பணத்தாளில் அச்சிட்டு பெருமை சேர்த்துள்ளது.சிசிலியில் தெங்கம் ஆட்டுவதே முதன்மைத் தொழில். ஒரு வாரம் வெய்யிலில் காய்ந்த தேங்காயுடன் ஓம வள்ளி இலை,வெட்டிவேர், எழுமிச்சை சாறு, சேர்த்தாட்டி எண்ணெய் பிழியப்படுகின்றது. தமிழகத்தின் செக்கு வடிவமே சிசிலியின் செக்கு வடிவம் ஆகும்.     

 

11.அயோத்தி தாசர் கூற்று:

எள் என்னும் தானியத்திலிருந்து நெய் என்னும் எண்ணெய் கிடைக்கும் என்பதை கண்டுபிடித்த நாளைக் கொண்டாடும் விதமாக உருவான பண்டிகையே தீபாவளி பண்டிகை என்றார்மலாடபுரம் என்னும் ஊரில் புத்த(சமணர்) தன்மத்தைத் தழுவிநின்ற சங்கத்தார் பேராமணக்கு சித்தாமணக்கென்னும் வித்துக்களிலிருந்து நெய்யெடுத்து தீபச்சுடர் ஏற்றிய நாளை கார்த்திகை தீபம்(கார்த்துல தீபம்: கார்=இருட்டுதுல= விலக்குதீபம்=ஒளி) என்று கொண்டாடியதுவே கார்த்திகை தீபம் என்றானது என்றார்.

                                                                                 (நன்றி:கீற்று)

12.எள் நெய் பிரித்த முறை:

இது எள்ளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எள்ளுடன் கருப்பட்டி சேர்த்து கல் மற்றும் மரத்திலான செக்குகளில் ஆட்டி எண்ணெய் பிழிவது தான் வாணியர் மரபில் இருந்து வந்த முறை. எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிது சிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும். இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்லெண்ணெய்க்கு ஒரு அபாரமான மணமும்குணமும் இருப்பது இயற்கையே. இப்படி மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுப்பதே வழக்கம்.                                                                                                                                                                                                                                                        (நன்றி: வெல்உவன்)

13.வாணியரும் சொற்பொருளும்:

     வாணியர் என்ற சொல் வடித்தல் அல்லது வாணிகம் என்ற சொல்லின் திரிபே ஆகும். வாணிகம் என்ற சொல் தொழிலினையும் வாணியர் என்ற சொல் செக்காளர்களையும் குறிக்கும். இவ்வினம் குறித்து பயிலும் பல சொற்கள் பின் வருமாறு:

1.   ஆடவர்- வாணியர், வாணியன், செக்காரர், செக்கார் செக்கான் செக்காளன்

2.   பெண்டிர்- வாணியச்சி வாணிச்சி, செக்காரி செக்காத்தி

3.   செக்கு-எண்ணெய் ஆட்டும் கருவி

4.   செக்கடி-எண்ணெய் ஆட்டும் இடம்

5.   செக்கடித்தல்-செக்கில் எள்முதலிய வித்துக்களை ஆட்டுதல்     

6.   செக்கடிக்கருப்பன்செக்கடியில் இருக்கும் சிறுதெய்வம்

7.   செக்கடி முண்டன்  செக்காட்ட உதவி செய்யும் வலிமையான ஆண் ஏவலாள்

8.   செக்காடுதல் செக்கில் அரைபடுதல்

9.   செக்காயம்-எண்ணெய் ஆட்டுதலுக்காக அரசர்களால் விதிக்கப்பட்ட தொழில் வரி.

10.  செக்கான்  எண்ணெய் ஆட்டுபவர், எண்ணெய் விற்பவர் இருவரையும் குறிக்கும்.

11.  செக்கு மன்றாடி  ஒரு வகை செக்கு வரி

12.  செக்கு முட்டை-செக்காடுவோரிடத்திருந்து கிராமச் சுவான்தார்கள் எண்ணெய் நிரம்பிய முட்டையை ரூபமாகப்பெறும் ஒருவகை வருமானம்.

13.  செக்கு மேடு- எண்ணெயாடும் செக்குள்ள மேட்டிடம்

14.  செக்குரல்- செக்கின் உரல் அல்லது அடிப்பகுதி

15.  செக்குலக்கை- செக்கின் உலக்கை, செக்குரலில் எள் முதலியவற்றை ஆட்டும் பருத்த மரத்துண்டு, உயரமான பருத்த கட்டுடல் மனிதன்.

16.  செக்கு வகை- செக்கின் வகை (கல்செக்கு, மரசெக்கு)

17.  செக்குவாணிகர்-எண்ணெய் விற்க்கும் சாதியினர்

18.  வாணிச்சி மேனி-மாணிக்கம்

19.  வாணிச்சியம்-வணிகம்.

20.வாணியதாதன்கம்பர் காலத்தில் அவர்க்கு எதிரியாயிருந்தவராகவும் செக்கார் குலத்தவராகவும் சொல்லப்படும் ஒரு புலவர்.

 தத்தம் இடத்திற்கேட்ப இன்னும் பல சொற்கள் பயின்று வருகின்றன.                                                                                (நன்றி:குளோஸ்ப்)

14.சக்கரம், சங்கரப்பாடியார், வாணியர், சொற்பிறப்பியல்:

1.சக்கரம்-சக்கு+ஆரம்(ஆர்+அம்)

= சள்-சகு-சக்கு-சக்கரம்

·         சக்கு-கண் கருவிழியை ஒட்டிய வடிவத்தைக் கொண்டது, மையப்புள்ளி உடையது

·         ஆர்- பல, பலர்பால் விகுதி

·         ஆரம்-ஒரு வட்டத்தின் மையப்புள்ளியில்வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோட்டின் சரிபாதி

   கண்கருவிழி போன்ற மையப்பகுதியிலிருந்து பல ஆரங்கள் சேர்க்கப்பட்ட பொருளே  சக்கரம்

2.சங்கரப்பாடியார்-சக்கு+ஆர(ம்)+பாடி+ஆர்

=சக்கு-சக்கர்-செக்கர்-செக்கார்

=சக்கு-சக்கரம்-சங்கரம்-சங்கரப்பாடியார் =சக்கு-சங்கு+சங்கரம்-(கருதுகோள்)

=சக்கு-சக்கரம்-செக்கரம்-செக்கு

·      சக்கு-கண் அல்லது சக்கரம் சுழலக்கூடியது

·       ஆரம்-வட்ட்த்தின் மையப்புள்ளீயிலிருந்து வட்டத்திற்க்கு வரையப்படும் பட்டை.

·        பாடி-கிராமம், பாடுதல், பாடிக்கொண்டே தொழில்செய்வோர்,

·        ஆர்-பலர் பால் விகுதி

சக்கரம் போன்று சுழலக்கூடிய செக்கினைக் கொண்டு தொழில் செய்வோர் சங்கரப்பாடியார் 

 

3.வாணியர்-வாணி+இய+அர்

=வடி-வணி-வணிக(ர்)-வாணிகர்-வாணியர்

=வடி-வணி-வணிகம்-வாணிகம்

·         வடி-வடித்தல், உருவாக்குதல்,வடிவு  வடித்தெடுக்கை. (வடியுறு தீந்தேறல்(பு.வெ.1, 19)

·         இய-வியங்கோள் வினைமுற்று விகுதி

·         அர்-பலர்பால் விகுதி

·         வடித்தல்-சிற்பம் வடித்தல், ஒரு பொருளை உருவாக்குதல் வடித்தல் எனப்பட்டது.

எண்ணெய் வடித்தெடுக்கும் தொழில் செய்தமையால் வாணியர் எனப்பட்டனர். வாணியர்கள் எண்ணெய் வடிக்கும் தொழில் செய்தனர் என்று சேது மன்னர் செப்பேடு சான்றுரைக்கின்றது.

வைதீக(ஆரியஅந்தணர்) திணிப்பின் காரணமாய் தமிழகம் ஆரியத்தை கைக்கொண்டொழுக வாணியர்கள் ஆரியர்களால் வாணியின் (சரசுவதியின்) புதல்வர்கள் என வழங்கலாயினர். வாணியின் புதல்வர்கள் என்றழைக்கப்பட்டாலும், ஆரிய பிராமணர்களால் கிழானவர்களாகவே நடத்தப்பட்டனர்.

வேதம், கல்வி அருள்பவள் வாணி என்றல்லவா மறைகள் கூறுகின்றன. அந்தணர்கள் ஓதும் வேதமும் வாணி மற்றும் வாணியின் கணவர் பிரம்மனால் உருவாக்கப்பட்டதுதானே.! நான் மறைக்கும் கட்வுள் பிரம்மன் தானே. அவர்களின் புதல்வர்களை பின்னர் ஏன் கீழாக நடத்தப்படவேண்டும்? சிந்திக்க

வைதீகர் செய்த புரட்டுக்கள்- வைதீகர் அடக்குமுறை என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.  

 

14.வாணியர்:

வாணியர் என்னும் பிரிவானது செட்டி என்னும் இனத்திலிருந்து பிரிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், நகரத்தார்கள் வணிகர் என்னும் செட்டி பிரிவிலிருந்தே பிரிந்ததாக கூறப்படுகின்றது. செட்டி என்ற சொல் வணிகரையே குறிக்கும். ஆனால் வாணியருக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே நகரத்தார் கூறுகின்றனர்.

கண்ணகி வழி வந்தவர்கள் என்று இம்மூன்று இனங்கள் மட்டுமே உரிமை கொண்டாடுகின்றனர். இம்மூவர் கூறும் காரணமும் ஒரே பொருளில் வெவ்வேறு கதைகளில் மையம் கொள்கின்றனர். இம்மூன்று பிரிவுகளிலிருந்தும் பின்னாளில் பல பிரிவுகள் கிளைத்தன. இம்மூவினங்களும் செட்டி என்னும் பிரிவிலிருந்து கிளைத்ததாகவே கூறலாம். .கா வாணியரில் கிளைத்த ஒரு பிரிவு இலை வாணியர் என அழைக்கப்பட்டது.

வைசிய புராணக்கதை, கோவலன் கதை, கண்ணகி கதை, சிலப்பதிக்காரம், புகழேந்திப் புலவரின் கோவிலன் கதை, வாய்மொழிக்கதைகள் மூலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இவ்வினங்கள் பிரிந்ததை ஊகிக்கலாம். மேலும் சங்ககாலத்திலேயே கண்ணகி கதை நடந்துவிட்டதை உறுதிசெய்யலாம்

வாணியருக்குள் நான்கு பெரும் பிரிவுகள் காணப்பட்டன அவை காமாட்சியம்மா, விசலாட்சியம்மா, அச்சுத் தாலி, தொப்பைத் தாலி. காமாட்சியம்மா, விசலாட்சியம்மா என்ற பிரிவு கடவுளரை வைத்தும், கழுத்திரு எனப்படும் தாலியினைக்கொண்டு  அச்சுத் தாலி, தொப்பைத் தாலி என் நான்கு வகையாக பிரித்தனர்.

கல்செக்கு, இரட்டை மாடு, உணவுக்கு பயன்படும் எண்ணெய்கள்  ஆட்டுவது உயர்ந்த தகுதியாக கணக்கிடப்பட்டது. மரச்செக்கு, ஒற்றை மாடு, மருத்துவ எண்ணெய்கள்  ஆட்டுவது குறைந்த  தகுதியாக கணக்கிடப்பட்டது.

 

15.செக்கு:

அன்றைய செக்கு இருவகைப்படும் ஒன்று கல் செக்கு மற்றொன்று மர செக்கு ஆகும்.

கல்செக்கு:

கல் செக்கில் உரலின் உயரம் தோராயமாக 3 அடியிலிருந்து 4 அடி வரை காணப்படும். செக்குலக்கை கல்லிலோ மரத்திலோ செய்யப்பட்டதாய் இருக்கும், உலக்கை அடி பருத்தும் நுனி சிறுத்தும் காணப்படும். கல் செக்கு உரல், கருங்கல்லில் செய்யப்பட்டிருக்கும். உலக்கை கல்லினாலோ அல்லது மரத்தினாலோ செய்யப்பட்டிருக்கும். உலக்கை செய்ய பெரும்பாலும் பாலை அல்லது வாகை மரங்களே பயன்படுத்தப்பட்டன. செக்கின் விட்டம் 4 அடிவரை உண்டு.


 

மரசெக்கு:

மரச்செக்கானது முழுவதும் மரத்தாலானது. மரச்செக்கில் உரல் புளியமரத்தினால் செய்யப்பட்டிருக்கும் இவை பெரும்பாலும் 3 அடி உயரங்கொண்டவை. உலக்கையும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். உலக்கை செய்ய பெரும்பாலும் பாலை அல்லது வாகை மரங்களே பயன்படுத்தப்பட்டன.இதன் விட்டம் 3 அடி வரை இருக்கும். சால்மரமும், பலா மரமும், வேம்பும் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டன.


 

எருது அல்லது செக்குமாடு:

எருதினை துணையாகக் கொண்டே செக்கு ஆட்டப்பட்டது. உலக்கையில் இருந்துவரும் ஆரப்பட்டையின் மூலம் எருது இணைக்கப்பட்டிருக்கும். ஆரப்பட்டை மரத்தாலானது. வாணியர்கள் தத்தம் பொருளாதார வசதிக்கேற்ப ஒற்றை மாடு கொண்டும் இரட்டை மாடு கொண்டும் செக்கு ஆட்டப்பட்டது. ஒற்றை மாடு கொண்டவர் வளத்தில் பின் தங்கியவராகவும் இரட்டை மாடு கொண்டவர் வளம் மிக்கோராகவும் கருதப்பட்டனர். செக்கு வரலாற்றில் அக்காலத்தில் தமிழகத்தில் மட்டுமே ஒரே நேரதில் 30 முதல் 45 கிலோ வரை எண்ணெய் ஆட்டப்பட்டது. அந்நேரத்தில் வட இந்தியாவில் 8 முதல் 13 கிலோ வரை மட்டுமே உயர்ந்த பட்சமாக ஆட்டப்பட்டது. (நன்றி: ஆச்சார்யா)        

16.எண்ணெய் வித்துக்கள்:

பின் வரும் எண்ணெய் வித்துக்களிருந்து சமையல் எண்ணெய்களும் மருத்துவ எண்ணெய்களும் அதன் பிண்ணாக்குகளும்(கழிவுகள்) பெறப்பட்டன. செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்த பின்பு கிடைக்கும் மீதமுள்ள பொருளே பிண்ணாக்கு எனப்பட்டது. பிண்ணாக்கு செக்காட்டும் எருதுகளுக்கும் பசுமாட்டிற்க்கும் உணவாகவும் தீவனமாகவும் வழங்கப்பட்டது. 

 

எள்                                             -           நல்லெண்ணை,         எள்ளு பிண்ணாக்கு

கடலை                                     -           கடலை எண்ணெய்,  கடலை பிண்ணாக்கு

தேங்காய்                                -         தேங்காயெண்ணை,  தேங்காய் பிண்ணாக்கு

வேப்பங்கொட்டை               -         வேப்பெண்ணை,      வேப்பம்பிண்ணாக்கு

ஆமணக்கு                               –          விளக்கெண்ணை

இலுப்பை                   -     இலுப்பெண்ணெய்

புன்னை                  -     புங்க எண்ணெய், புண்ணாக்கு

 

எள்ளு பிண்ணாக்கு கடலை பிண்ணாக்கு தேங்காய் பிண்ணாக்கு, ஆட்டி எடுத்த சில நிமிடங்களில் பிண்ணாக்கு வெப்பமுடன் காணப்படும் அதனோடு வெல்லம் சேர்த்து இனிப்பு பண்டமாக குழந்தைகளுக்கு கொடுக்கும் வழக்கமும் உண்டு.  ஆமணக்கு எண்ணெய் விளக்கெரிக்கவும் மருத்துவத்திற்க்கும் பயன்பட்டது. ஆமணக்கு கழிவுகளும் இலுப்பை கழிவுகழும் கழிவுகளே, அவை உரமாக பயன்பட்டன. இலுப்பை மருத்துவத்திற்க்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது.    

 

17.அற்றைய செக்கு தொழில்:

 விளக்கெரிக்க அன்றைய காலங்களில் நெய் தான் பயன்படுத்தப்பட்டது.எண்ணெய் தொழில் நுட்பம் கண்டறியப்பட்ட பின் நல்லெண்ணய் பயன்படுத்தப்பட்டது.செக்கானது வாணியர்களால் பரவலாக்கப்பட்டபின், செக்கினை ஆட்டுவதற்க்கு கூலியாக பிண்ணாக்கே பெறப்பட்டது. பிண்ணாக்கு பண்டமாற்றம் செய்யப்பட்டது. செக்கினை ஆட்டுவதற்க்கு வாணியர்கள், செக்கு மன்றாடி, அல்லது செக்கிறை என ஒரு வகை வரியினையும், செக்காயம் என மற்றொறு வரியினையும் அரசுக்கு செலுத்தியுள்ளனர். நில சுவான்ந்தார் வீட்டிற்க்கு முட்டை (குடுவை போன்ற) அளவுள்ள (100மி.லி) எண்ணெயயை விளக்கெரிக்கவும் சமையலுக்கும் தினமும் வழங்கியுள்ளனர், இலவசமாக வழங்கப்பட்ட இது பின்னாளில் இது வரிமுறையாகவே கருதி செக்கு முட்டை வரியாகவே பெறப்பட்டது. அரசர்கள், பொன் மற்றும் தன வணிகர்கள் குறிப்பிட்ட அளவு பொன்னை வாணியர்களுக்கு வழங்கி கோயில்களுக்கு தினமும் நந்தா விளக்கெரிக்க எண்ணெய் தானம் செய்வர்.   


  

சில அரசர்கள் கோவிலுக்கு எண்ணெய் விளக்கு எரிக்க செக்கு செய்து கொடுத்தனர். சில செல்வ சீமான்கள் இறந்த தன் மக்களின் நினைவைப் போற்றும் விதமாக கோவிலுக்கு விளக்கெரிக்க செக்கினை செய்து தானமாக வழங்கியுள்ளனர். மேலும் அமணர்களின் மருத்துவத்திற்க்கு செக்கினை தானமாய் வழங்கியுள்ளனர் வாணியர்கள் தங்கியிருந்த பகுதிக்கு அம்மக்களின் குடிப்பெயராலேயே ஊர்ப் பெயரும் வீதிப் பெயரும் வழங்கப்பட்டு வந்த சான்றுகள் இன்றும் உள்ளன. (.கா) வாணியம்பாடி, வாணியர் வீதி. வாணியர்கள் இணைந்து பல கோவில்களும் கட்டியுள்ளனர். குளங்களும் வெட்டியுள்ளனர். 

இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் வாணியர் வாழ்வியல் சான்றுகளில் தரப்பட்டுள்ளன.      

 

18.அற்றைய வாணியர் வாழ்வியல்:

      செட்டியார்களில் மொத்தம் 126 வகை துணைப்பிரிவுகள் இருந்தன.(ஸ்டூவர்ட்;1891) வாணியர்கள், வாணியச் செட்டியார்கள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டாலும் வாணியர் என்பதே சாதியின் பெயராகும். வாணியர் என்பது செக்காளர்களை மட்டும் குறிக்கும். அக்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணம் செய்விக்கப்பட்டது.

பெண்களும் ஆண்களுக்கு இணையாக செக்காட்டினர். இரட்டை காளை கொண்டு செக்கு ஆட்டியவர்கள் உயர்ந்தோராக கருதப்பட்டனர். துணி வெளுப்பவர்க்கும், நாவிதர்க்கும் கூலியாக எண்ணெய் வழங்கப்பட்டு வந்ததாக ஜெனிசிஸ் தனது ஆய்வேட்டில் கூறுகின்றார். வெளியூர்க்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய்க்கு உள்ளுரில் வரிகட்டும் வழக்கம் இருந்தது  திருமணத்தன்று செக்காடுவது நிறுத்தப்படும்.

 சமூகத்தில் எவரேனும் இறந்துவிட்டால் செக்காடுவது அன்று முழுவதும் நிறுத்தப்படும் வாணியரில் இறந்தோர் எரியூட்டப்பட்டனர். கணவர் இறந்த பின் மறுமணம் புரிவதை பெண்கள் தவிர்த்தனர்.  செக்காட்ட எண்ணெய் வித்துக்கள் அருகில் உள்ள ஊர்களில்  சென்று வாங்கி வருவர். அவ்வாறாக பெறப்படும் வித்துக்கு இணையான பொருளையோ, எண்ணெயையோ கொடுத்து வித்துக்களை வாங்கி வருவர். பிற்காலத்தில் 1950க்கு பிறகு இயந்திர செக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. கல், மரச் செக்கு தொழிலும் நலிவடையத் தொடங்கின.

வாணியர்கள் அசைவ உணவுகளும் சைவ உணவுகளும் சாப்பிட்டனர், எருதுகளை தெய்வமாகவும் வணங்கினர்.  ஆண்கள் மேலாடை அணியாது வேட்டியை மட்டும் உடுத்தினர். பெண்டிர் கச்சை அணியாது கொசுவம் வைத்து கண்டாங்கி சேலை அணிவதே வழக்கமாக கொண்டிருந்தனர். பருவம் வந்த பெண்கள் தாவணி அணியும் பழக்கம் இருந்தது கச்சை அணியவும் அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் திருமணத்தன்று கூரைச் சேலை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பாட்டிகள் ஆச்சி என்று அழைக்கப்பட்டனர், ஆச்சிகளுக்கு தொங்கட்டம்  அல்லது பாம்படம் என்னும் அதிக எடையுள்ள தங்க காதணியை அணிந்து காது வடிக்கும் அல்லது காது வளர்க்கும் பழக்கமும் இருந்தது.18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூணூல் அணியும் பழக்கமும் வளர்ந்தது.  


 

 

19.வாணியர் வாழ்வியல் சான்றுகள்:

வாணியர் வாழ்வியல் சான்றுகளாக கல்வெட்டுக்களும் செப்பேடுகளும், தமிழ் இலக்கியங்களும் திகழ்கின்றன, அவற்றில் சிலவற்றை கீழே காண்போம்.

1.       மாமல்லபுரம் கல்வெட்டு- மேற்கு நோக்கித் திகழும் சிவாலயத்தின் வெளிப்புறம் தெற்கு மற்றும் வடக்கு தரைதளத்தில் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவைதாம் இக்கோயிலின் வரலாற்றை மேலும் தெளிவு படுத்துகின்றன. இக்கோயிலினை மாமன்னன் ராஜராஜசோழன் ‘‘ஜலசயனம்’’ என்ற பொதுப்பெயரால் குறிப்பிட்டிருப்பதோடு அதில் திகழும் கிழக்கு நோக்கிய சிவாலயத்தை ‘‘க்ஷத்திரிய சிம்ம பல்லவ ஈஸ்வரகிருஹம்’’ என்றும்மேற்கு நோக்கிய சிவாலயத்தை, ‘‘ராஜசிம்ம பல்லவ ஈஸ்வர கிருஹம்’’ என்றும்நடுவில் திகழும் விஷ்ணு ஆலயத்தை பள்ளிகொண்டருளிய தேவர் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆமூர் கோட்டத்து ஆமூர் நாட்டு நகரம் (வணிக மையம்) ஆன மாமல்லபுரத்து ஊர் நிர்வாக அமைப்பான நகரத்தாரும்பேரிளமையார் எனப்பெறும் உழுகுடி வேளாண் மக்களும் இணைந்து இக்கோயில்களுக்கு அளித்த பொற்கொடை பற்றி ஒரு சாஸனம் எடுத்துரைக்கின்றது. மற்றொரு கல்வெட்டோ ராஜராஜசோழனின் அதிகாரியான புதுக்குடியான் ஏகதீரன் ஐம்பதின்மன் என்பான் மாமல்லபுரத்து நிலங்களை நூறு பங்குகள் உள்ள நான்கு பிரிவுகளாகப் பகுத்து அவற்றில் 25 பங்குகளை அவ்வூரில் உள்ள கடும்பிடுகுச்சேரி என்ற பகுதியைச் சார்ந்த சங்கரம்பாடியார் (எண்ணெய் வாணியர்) வசமும்மற்ற 75 பங்குகளை மற்ற அனைத்துக் குடியினருக்கும் கொடுத்ததை விவரிக்கின்றது.

 

2.       தஞ்சைக் கல்வெட்டு- தஞ்சாவூரில் சோழர்காலத்தில் இருந்த வணிக குறிப்பு கல்வெட்டுகளில் சங்கரபாடியார்(வாணியர்களை) பற்றி குறிப்பிட்டு உள்ளனர் தஞ்சை சோழ மன்னர்கள் இதை ஏறத்தாழ கி.பி.​ 850 ஆண்டுகளில் விஜயாலயச் சோழன் கைப்பற்றி சோழ அரசை நிறுவினான்.​ அது முதல் ராஜராஜன் காலம் வரை தஞ்சாவூர் சோழப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது.​ ​ ​ தஞ்சாவூர் அரசியல் தலைநகரமாக மட்டுமன்றி மிகப் பெரிய உள்நாட்டு வணிக நகரமாகவும்,​​ வளஞ்சியர்,​​ திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பன்னாட்டு வணிகக் குழுக்களும் வந்து தங்கி வணிகம் செய்த சர்வதேச வணிக நகரமாகவும் விளங்கியது என்பதை முதலாம் ஆதித்த சோழன் காலத்திலிருந்து இரண்டாம் ராஜாதி ராஜன் காலம் வரை எழுதப் பெற்ற கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.​ ​​ முதலாம் ஆதித்தன் காலத்தில் மடிகை என்பது வணிகர்கள் பல வகை சரக்குகளை ஓரிடத்தில் சேமித்து வைத்து வியாபாரம் செய்யும் பண்டகச் சாலை அல்லது கிடங்கைக் குறிக்கும்.​ இந்தச் சொல்லே பிற்காலத்தில் மளிகை என மருவி பலசரக்குக் கடையை குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.​ ​  திருச்சி வட்டம்,​​ திருச்செந்துறையில் உள்ள ராஜசேகரி வர்மன் என்ற பட்டம் கொண்ட சோழ மன்னரின் 12,​ 20-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் தஞ்சாவூர் மடிகை மாணிக்க வாணியன் கருநாடக புழலயச் செட்டி என்பவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.இவையே தஞ்சாவூரில் வணிகர் பற்றிக் கூறும் தொன்மையான கல்வெட்டுகள் ஆகும்.​ முதலாம் ஆதித்தனின் காலத்திலிருந்தே தஞ்சாவூர் பிற நாட்டு வணிகர்கள் வந்து வணிகம் செய்யும் நகரமாக வளர்ச்சி பெற்றிருந்தது என அறிய முடிகிறது.​ ​முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தஞ்சை வீரசோழப் பெருந்தெரு என்ற வணிகர்கள் வாழ்ந்த தெருக்கள் என முதலாம் பராந்தகனின் கல்வெட்டு கூறுகிறது.​ இதேபோல,​​ தஞ்சாவூரில் அப்போது வழங்கப்பட்ட கண்டருள் கண்டப் பெருந்தெரு என்பதும் ஒன்று.​ இங்கு சங்கரப்பாடியார்கள் என்ற எண்ணெய் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டவர்கள் வாழ்ந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. கங்கை கொண்டசோழபுரத்தில் பூமிக்கடியில் கிடைத்த முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டில் தஞ்சாவூரில் இருந்த இருமடி சோழப் பெருந்தெருவில் வளஞ்சியார் ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவினர் வந்து குடியேறியது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.​ வளஞ்சியார் என்பவர்கள் இலங்கையைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு வணிகக் குழுவினர் ஆவர்.சுந்தர சோழன் காலத்தில் ​(கிபி 957-974) தஞ்சாவூரில் பெரிய அங்காடி என்ற வணிக வளாகம் இருந்தது என அறிகின்றோம்.​ ​இதேபோல,​​ தஞ்சாவூரில் உள்ளாலை சாலியத் தெரு என்ற தெருவில் பட்டு நெசவு மற்றும் துணி வியாபாரத்தில் ஈடுபட்ட வணிகர்கள் வாழ்ந்ததையும்,​​ அது தஞ்சாவூர் நகரின் உள்பகுதியில் இருந்தது எனவும் அறிகிறோம். சோழர் காலத்தில் தஞ்சாவூர் மிகப் பெரிய வணிக நகரமாக விளங்கியது.​ இங்கு பல மடிகைகள்,​​ அங்காடிகள்,​​ பேரங்காடிகள்,​​ பெருந்தெருக்கள் முதலியன இருந்தன. சங்கரபாடியார்,​​ சாலியர்,​​ வளஞ்சியார்,​​ திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய வணிகர்கள் இங்கு தங்கி வணிகம் செய்தனர்.​ இந்த வணிக நகரம் உள்ளாலை,​​ புறம்படி என்னும் இரு பகுதிகளைக் கொண்டிருந்தது.தலைநகர மாற்றத்தைத் தொடர்ந்து இங்கு வாழ்ந்த வணிகர்கள் கங்கை கொண்ட சோழபுரத்துக்குச் சென்று குடியேறினர்.​ அதன் பின்னர்,​​ 159 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ஊர் வணிக நகரமாகப் புத்துயிர் பெற்று,​​ பாண்டியரின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து ஒரு வணிக நகரமாக விளங்கியது என அறிகின்றோம்.

 

3.       வாணியம்பாடி- பதிமூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் சங்கரபாடியார் என்று வாணியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் கல்செக்கு வைத்து எண்ணெய் எடுத்தவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் ஆவர். கல் செக்கு உரிமம் வழங்குவது அரசாங்க அதிகாரிகளின் உரிமைஅனுமதி இருந்தால் மட்டுமே கல் செக்குகளை வைத்து இயக்க முடியும். பொருளாதாரத்தில் குறைந்தவர்கள் மரசெக்குகளை வைத்து எண்ணெய் எடுக்கும் தொழிலை செய்து வந்தனர். இதற்கு செக்கின் முலம் ஈட்டப்பட்ட வரியே செக்கிறை ஆகும். வாணியர்கள் எண்ணெய் ஆட்டும் தொழிலின் அடிப்படையில் பிரிந்து இருந்தனர் அவர்களில் எண்ணெய் ஆட்டும் பொருளைக் கொண்டே பிரித்தனர். தேங்காய் எண்ணெய்எள் எண்ணெய்கடலை எண்ணை என எண்ணெய் எடுப்பவர்கள் ஆயினும் மூல பொருட்களை வைத்து சமுக பாகுபாடு பார்த்தனர். வேப்பெண்ணெய் வாணியன்இலுப்பெண்ணெய் வாணியன்பின்னங்கெண்ணெய் வாணியன் எனவும் மூலபெருட்களுக்கு ஏற்ப சமுதாய மதிப்புகளை வைத்து இருந்தனர்.

 

4.       சேலம்- சேலம் மாவட்டம்வாழப்பாடி வட்டம் புழுதிகுட்டை அருகே வெள்ளிக்கவுண்டனூர் என்ற இடத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தரையிலிருந்து கல்செக்கானது 40 செ.மீ உயரமுடையது. இதன் வெளிவிட்டம் 57 செ.மீ. உள் விட்டம் 45 செ.மீ அளவுடையதாகவும் இருக்கிறது. செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீவிட்டம் 20 செ.மீ ஆகும். உள்விட்டம் உள்ள பகுதியில் இரண்டு வரிகளில் 12 வார்த்தைகளில் கல்வெட்டானது அமைந்துள்ளது. எழுத்தின் வடிவத்தைக் கொண்டு இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம். ‘ஸ்ரீ விளக்கமாறனேன் எனக் கல்வெட்டு தொடங்குகிறது. விளக்கமாறன் என்பவன் தன் மகன் மூக்கன் என்பவன் இறந்துவிட்டதால் அவன் நினைவாக செய்து கொடுத்த கல்செக்கு இதுவாகும். இங்கு வந்து வணங்கி பூஜை செய்பவர்களுக்கு பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்றைத் தரும்படி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு வாசகம் ஸ்ரீ விளக்கமாறனேன் என் மகன் மூக்கனைச்சாத்தி இட்ட செக்கு. பூசித்தனாற்ர்க்கு பிழி பிண்ணாக்கு மூன்று” என்று வெட்டப்பட்டிருக்கின்றது.

 

5.       உத்திரமேரூர்-உத்தரமேரூரில் தொன்மைவாய்ந்த குளம் சீரமைப்பின்போதுகம்ப வர்ம பல்லவ கால கல்வெட்டு கண்டறியப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம்உத்தரமேரூர் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகள் தொன்மைவாய்ந்த குளம் உள்ளது.  குளத்தில் பழங்கால கல்வெட்டு இருந்தது தெரியவந்தது. குளத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுபல்லவ மன்னர்வர்மர் காலத்தைச் சேர்ந்தது. இதில்மன்னன் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக இயங்கி மக்களுக்கு பணியாற்றி வந்தது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகநீர் நிலைகள் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளன. அவை மக்களுக்கும்விலங்கினங்களுக்கும்விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளில்உத்தரமேரூர் முன்மாதிரி பகுதியாக திகழ்ந்துள்ளது. அதன்படிஉத்தரமேரூர் பார்ப்பனர் குளத்தில் படித்துறை அமைத்துவிலங்கினங்கள் குளத்தில் இறங்கி நீர் பருகிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டில்பல்லவ வம்சத்தின் செம்மாந்த பணிகள் குறித்து வாசகங்கள் மூலம் அறியப்படுகிறது. அதன்படிகல்வெட்டானது கி.பி. 894 காலத்தைச் சேர்ந்தது. கம்ப வர்மன் எனும் பல்லவ மன்னனின் காலமாக அறியப்படுகிறது. இதில்சங்கரபாடியார் என்றழைக்கப்படும் எண்ணை வணிக சமூகத்தினர் அந்த காலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அக்குளத்தின் அருகே கோயில் ஒன்றினை கட்டியுள்ளனர் எனும் சான்று கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிஇக்குளத்துக்கு அருகே நந்தி சிலை உள்ளது கோயில் இருந்ததற்கு ஆதாரமாக உள்ளது. அக்கல்வெட்டு எழுத்துகளின் படிசங்கரபாடியார் சந்ததியினரான “பெரும் தச்சர்” இவ்வெழுத்துகளை பொறித்துள்ளனர் எனவும்கம்ப வர்ம பல்லவ மன்னனின் 26-ஆவது ஆண்டு ஆட்சிக் காலத்தில் இது நடைபெற்றுள்ளது என கல்வெட்டு எழுத்துகள் தெரிவிக்கின்றன.

 

6.       சேலம்ஆத்தூர் அருகேஆறகளூரில்13ம் நூற்றாண்டை சேர்ந்த வணிக கல்வெட்டு மற்றும் வணிகக் குழு கரண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் மொத்தம், 16 வரிகள் உள்ளன. ‘ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும் புரவாரியாருக்கு’ எனகல்வெட்டு துவங்குகிறது. களப்பாளராயர் என்பவர் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன்நிலங்களை நிர்வகிக்கும் முக்கிய அதிகாரியாக இருந்தார். இவரது உத்தரவுப்படிகல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. புரவாரியார் என்பவர் வரிக் கணக்கை சரி பார்க்கும் அலுவலர் ஆவார். களப்பாளராயரின் ஆணையை புரவாரியார் நிறைவேற்றி உள்ளார். ஆறகளூரில் வாழ்ந்த வணிகர்கள்அரசுக்கு செலுத்த வேண்டியை வரியை செலுத்த தேவையில்லை எனவும்அந்தப் பணத்தை, ‘உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனார்’ கோவிலுக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜைதிருப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்றுகல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டின் கடைசியில், ‘தன்ம தாவளம்’ என்ற சொல்மிகப் பெரிய வணிக நகரை குறிக்கிறது. 12ம் நூற்றாண்டில் மகதைப் பெருவழி என்ற வணிக வழிப் பாதை ஒன்று இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாகஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் ஒரு மைல் கல் இருந்தது. அதில் ‘ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்’ என்று குறிப்பிடப்பட்டுகீழ் பகுதியில் ஒரே அளவிலான, 16 குழிகள் உள்ளன. இவைஆறகளூர் – காஞ்சிபுரம் இடையேயான தூரத்தை குறிக்கிறது. இந்த மைல்கல்சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது.

 


 

7.       வணிகக்குழு கரண்டிகாமநாதீஸ்வரர் கோவிலையொட்டி உள்ள தேசாதி பட்டணம் செட்டியார் என்ற குடும்பத்தினர் வசித்து வருவதும்இவர்களது மடத்தில், 15ம் நூற்றாண்டின் சங்கிலியால் இணைக்கப்பட்ட வணிகக் குழு கரண்டி கண்டறியப்பட்டது. இக்குடும்பத்தினர் வழக்குகளை விசாரிக்கும் போதுஇந்த கரண்டியை ஒரு மேடையில் வைத்துதீர்ப்பு சொல்லும் வழக்கம் இருந்ததால்இன்றளவும் புனிதமானதாக கருதுகின்றனர். இந்த கரண்டியின் முனையில் வட்ட வடிவமான குழியும்பெரிய அளவில் சூரியன்சிவலிங்கம்சிறிய அளவில் விநாயகர் உருவம் உள்ளது. இரண்டு கரங்களிலும் அமிர்த கலசம் இருக்கிறது. கைப்பிடி பகுதியில் ஒன்பது பகுதிகளாக பிரித்துஒவ்வொரு பகுதியிலும் எடை கல்தச்சரின் கருவிஇரும்பு வேலைக்கான கருவிகள் உள்ளிட்ட வணிக குழு சின்னங்கள் உள்ளன. கடல் வணிகம்எண்ணெய் வணிகம்இசை கருவிகள்தராசு போன்றவை காட்டப்பட்டுள்ளன. முதல் பிரிவில் மூன்று ஆண்கள் நிற்பது போல் உள்ளதால்இவர்கள் வணிக குழு தலைவராக இருக்கக் கூடும். இந்த சான்றுகள் மூலம்ஆறகளூர் வணிக நகரமாக இருந்தது உறுதியாகிறது. 12ம் நூற்றாண்டில்பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னன் ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளார்.

 

8.       வேட்டவலம்வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் சோழர்கால செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது 11ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பெரிய ஏரிக்கரையில் மண்ணில் புதைந்திருந்த கல் செக்கை தோண்டி எடுத்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த கல் செக்கை சுற்றி கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. சோழர்  காலம் 11ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. கூரியூரை சேர்ந்த பெருவன் என்ற சினபகையின் மகன் சேந்தன் என்பவர் இந்த செக்கை செய்து கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செக்கில் எடுக்கப்படும் எண்ணெய்யில் ஒரு ஆழாக்கு தினமும் மகாதேவர் என்ற இறைவனுக்கு வழங்க முறை செய்யப்பட்டுள்ளது. மேலும்இறைவனுக்கு நாள்தோறும் வழங்கப்படும் எண்ணெய்தர்மத்தை காப்பவர்களின் கால்தூசிஎன் முடிமேல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவம் குழுவினர் கூறுகையில், `இந்த செக்கு கல்வெட்டு  இவ்வூரில் கிடைத்தது அரிய கல்வெட்டு. இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் மகாதேவர் என்பது சிவனைக் குறிக்கின்றது. மேலும்செல்லங்குப்பத்தில் அழிந்துபோன சிவன் கோயில் ஒன்று உள்ளதாக கூறினர்.

 

9.       திண்டுக்கல்மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தரேவு அருகே வடமேற்கில் 5 கி.மீ தொலைவில் ஓவா மலை உள்ளது. இங்கு கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று செக்கு உரலில் இருப்பதை கண்டறிந்தனர். இந்த செக்கு உரல் கல்வெட்டில் வட்டெழுத்துகள் தமிழ் மொழியாக மாறிய நிலையில் எழுத்து பொறிப்புகள் காணப்படுகிறது. இது குறித்து ஆய்வாளர் சாந்தலிங்கம் தெரிவிக்கையில்ஓவா மலையில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கி.பி. 910-ம் நூற்றாண்டைச் சேரந்த எண்ணை செக்கு உரலில் வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது அறியப்பட்டுள்ளது. இதனை வெண்பி நாட்டின் குறண்டி எனும் ஊரைச் சேர்ந்த சோமன் அருளன் உருவாக்கியதாக வெட்டப்பட்டுள்ளது. குறண்டி என்பது மதுரை- அருப்புக்கோட்டை ரோட்டில் ஆவியூருக்கு அருகில் இருக்கும் ஊராகும். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க பராந்கபர்வதம் என்னும் மலையில் ஸ்ரீவல்லம் பெரும்பள்ளிதிருக்காட்டாம்பள்ளி என்ற பெயர்களில் சமணப்பள்ளி செயல்பட்டுள்ளது. பாண்டியர் காலத்தில் மாராயன் என்பது அரசு நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கும் பட்டமாகும். அந்த வகையில் இந்த கல்வெட்டில் மாராயன் என்ற அதிகாரிக்கு இந்த செக்கு மூலமாக எண்ணை வழங்க வேண்டாம் என்று யாரேனும் சொன்னால் அவர்கள் பாவத்திற்கு உட்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டதற்கான எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைப்பகுதியில் மக்கள் அரசு நிர்வாகத்துடன் வாழ்ந்துள்ளதையும்அரசு அதிகாரிகளுக்கு கொடைகள் வழங்கப்பட்டதையும் அறிய முடிகிறது. பாதுகாப்பு இல்லாத இந்த வட்டெழுத்து கல்வெட்டை தொல்லியல் துறையினர் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

 


 

10.   மதுரை- மேலூர் வட்டத்திலுள்ள கச்சிராயப்பன்பட்டியில் வட்டெழுத்துப் பொறித்த கி.பி.10 ஆம் நூற்றாண்டு கல்செக்கு ஒன்று கிடைத்துள்ளது. வழுதிவளநாட்டிலுள்ள மிழலூரினைச் சார்ந்த அப்பனூழன் என்பவன் பொற்கொடிவீரர்  என்ற வீரர் குழுவின் பெயரால் இச்செக்கினைச் செய்வித்ததாக அதிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. வழுதிவளநாடு என்பது திருவைகுண்டம் வட்டச்தைச் சார்ந்த பழமையான உள்நாட்டுப்பிரிவாகும். இந்நாட்டில் இருந்த அப்பனூழன் பாண்டியநாட்டின் வடபகுதிக்கு வந்து இச்செக்கினை செய்துவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டிநாட்டில் வீரக்கொடியார் பெயரில் வீரர் குழுவினர் இருந்திருக்கின்றனர். எனவே படைப்பிரிவில் கொடிவீரர் பிரிவு ஒன்று இருந்தமை இதன் மூலம் தெளிவாகிறது.

 

11.   மதுரைகீழவளவிலுள்ள சமணப்பள்ளியில் சிரீகட்டிகாளந்அரட்டி உரலில்என்று பொறிக்கப்பட்ட கி.பி.9-10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. இவை சமண முனிவர்கள் மருந்தினை இடிப்பதற்காகப் பயன்படுத்தியுள்ளார்கள்.


 

 

12.   தஞ்சை- வல்லத்தில் உள்ள ஸ்ரீமாதவ யோக நரசிம்மர் கோயிலின் கிழக்குச் சுவரில் ஒரு ஜாலம் உள்ளது. ஜாலம் என்பது கல்லில் வடிக்கப் பெற்ற ஜன்னலாகும். இதனைக் கற்சாளரம் என்றும் கூறுவர். அந்த ஜன்னலின் வெளிப்புறம் துளைகளுக்கு இடையே கல் பகுதியில் ஒரு தமிழ் கல்வெட்டு காணப்பெறுகின்றது. வல்லத்தில் இருந்த அகளங்கப் பெருந்தெருவில் செக்கில் எண்ணெய் எடுக்கும் வாணியர்கள் மிகுதியாக வாழ்ந்துள்ளனர். அவர்களை அக்கல்வெட்டுவாணிய நகரத்தார் எனக் குறிப்பிடுகின்றது. திருவெள்ளறை என்ற ஊரினனாகிய ஆழ்வான் பிள்ளை என்பார் தன் பெயரில் திருமால் முன்பு ஒரு விளக்கு எரிய வைக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட ஒரு தொகையினை அகளங்கப் பெருந்தெரு வணிகர்களிடம் அளித்தார். அத்தொகையினை ஊர்ச் செலவுகளுக்காக ஒரு முதலீடு என்ற வகையில் பெற்றுக் கொண்டு அதற்கு வட்டியாக ஒரு நாளைக்குரிய எண்ணெயை அவ்வூரில் கோயில்களுக்கென நாள்தோறும் அளக்கப்பட்டு வாணியர்களால் அளிக்கப் பெறும் விளக்குகளுக்குரிய எண்ணெயைப் பெற்றுக் கொள்ளும் அலுவலர்களிடம் செக்கிலிருந்து எடுத்து அளிப்போம்’ என அகளங்கப் பெருந்தெரு வாணியர்கள் ஒரு ஒப்பந்த சாசனம் எழுதினர்.

 

13.   சேதுபதி மன்னர் செப்பேடு- செட்டி என்ற பிரிவுகளில் மூன்று வகையான மக்கட்பிரிவினர் அடங்குவர். முதலாமவர் இந்த சேது சீமையின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆயிர வைசியர் என்ற தொகுதியினர். இவர்கள் அனைவரும் உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதே பிரிவைச் சேர்ந்த ஒரு சிறு தொகுதி திருமலை ரெகுநாத சேதுபதி காலத்தில் மதுரையில் இருந்து வந்து இராமநாதபுரம் கோட்டையின் கிழக்கே லட்சுமிபுரத்திற்கு மேற்கே குடியேறினர். இவர்கள் நாளடைவில் மதுரைச் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இவர்கள் பொதுவாக வாணிபத்தில் ஈடுபட்டு இருந்தனர்இவர்களில்பதினெட்டாம் நூற்றாண்டில்முத்து சாத்தகுட்டி செட்டி மகன் முத்து கூரி செட்டி என்ற சிவனெறிச் செல்வரையும் சோழ சீமையுடன் தானிய வியாபாரத்தில் ஈடு பட்ட சிவந்தி செட்டி என்ற பெருமகனையும் பற்றிய செய்தி செப்பேடுகளில் இருந்து தெரிய வருகிறது. இவர்களைப் போன்று சோழவள நாட்டில் இருந்து குடியேறி தெலுங்கு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட வணிகர்களும் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இவர்கள் இராமநாதபுரம் கோட்டையிலும்இராமேசுவரம் நகரிலும் மட்டும் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்னொரு வகுப்பினர் செக்குகள் அமைத்து எண்ணெய் வடித்துஎண்ணெய் விற்று வந்தனர். இவர்கள் பிற்கால சோழ பாண்டியர் கல்வெட்டுக்களில் சங்கரப்பாடியர்மாயிலட்டிசோதி நகரத்தார் என்ற சமூகத்தினராகக் குறிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் ஏனைய செட்டிகளினின்றும் வேறானவர் களாக இருந்த பொழுதிலும் உலக வழக்கில் இவர்களும் செட்டிகள் என்றே வழங்கப்பட்டனர். திருக்கோயில்களில் நந்தா விளக்கு எரியச் செய்வதற்கும்சனிக்கிழமைகளில் தெய்வத்திரு மேனிகளுக்கு எண்ணெய்க்காப்பிடுவதற்கு எண்ணெய்வழங்கும் பொறுப்பினை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் மரத்தினாலும்கல்லினாலும் ஆன செக்குகளை அமைத்திருந்தனர். கேரள சிங்கவள நாட்டில் (இன்றைய காரைக்குடிப் பகுதியில்) மிகுதியாக இத்தகைய செக்குகள் அமைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அந்த பகுதி செக்கு ஆலை என்றும் செக்காலைக் கோட்டை என்றும் வழக்குப்பெற்றுள்ளது. இத்தகைய செக்குகளுக்கு சேது நாட்டில் செக்கு இறை என்ற வரிப்பாடு இருந்து வந்தது. சிரேட்டி என்ற வடசொல் செட்டி என வழக்குப் பெற்றாலும் அந்த சொல் குறிப்பிடுகின்ற வணிகர் என்ற பொருளில் பல செட்டி வகுப்பினர் இருந்தாலும்எண்ணெய் வணிகம் செய்கின்ற இந்த வணிக மக்கள் வானியர் என்றும்வாணிகச் செட்டி என்றும் வழங்கப்பட்டனர். இவர்களைத் தவிரஇன்னொரு செட்டி வகையினரும் சேதுபதி சீமை குடிமக்களாக இருந்தனர். அவர்கள் தான் நாட்டுக் கோட்டையார் நகரத்தார்’ எனப்படும் செட்டி மக்கள். இவர்களைப் பற்றிய இந்தச் செய்திகள் செப்பேடுகளில் காணப்படவில்லை.                                                                                                                               (நன்றி: கமால், வாணியர் டிவி)

20.கல்வெட்டுச் செய்திகளிலிருந்து நாம் அறிவது:

மேல் குறிப்பிட்ட அத்தனைக் கல்வெட்டுகளும் மிக முக்கியமான செய்திகளை எடுத்துரைகின்றன.

1.   இலங்கையைச் சேர்ந்த வளஞ்சியர்,​​ திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பன்னாட்டு வணிகக் குழுக்களும் வந்து தங்கி வணிகம் செய்தனர்.

2.   மடிகை சொல்லே பிற்காலத்தில் மளிகை என மருவி பலசரக்குக் கடையை குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.​

3.   சங்கரபாடியார் என்று வாணியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

4.   கல்செக்கு வைத்து எண்ணெய் எடுத்தவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் ஆவர்.

5.   கல் செக்கு உரிமம் வழங்குவது அரசாங்க அதிகாரிகளின் உரிமைஅனுமதி இருந்தால் மட்டுமே கல் செக்குகளை வைத்து இயக்க முடியும்.

6.   பொருளாதாரத்தில் குறைந்தவர்கள் மரசெக்குகளை வைத்து எண்ணெய் எடுக்கும் தொழிலை செய்து வந்தனர்.

7.   செக்கின் முலம் ஈட்டப்பட்ட வரியே செக்கிறை ஆகும்.

8. வாணியர்கள் எண்ணெய் ஆட்டும் தொழிலின் அடிப்படையில் பிரிந்து இருந்தனர் அவர்களில் எண்ணெய் ஆட்டும் பொருளைக் கொண்டே பிரித்தனர். தேங்காய் எண்ணெய்எள் எண்ணெய்கடலை எண்ணை என எண்ணெய் எடுப்பவர்கள் ஆயினும் மூல பொருட்களை வைத்து சமுக பாகுபாடு பார்த்தனர். வேப்பெண்ணெய் வாணியன்இலுப்பெண்ணெய் வாணியன்பின்னங்கெண்ணெய் வாணியன் எனவும் மூலபெருட்களுக்கு ஏற்ப சமுதாய மதிப்புகளை வைத்து இருந்தனர்.

9.   இறந்தவர்கள் நினைவாகவும், கோவிலுக்கு விளக்கெரிக்கவும் செக்குகள் தானமாக செய்து தரப்பட்டன.

10.  சமணப் பள்ளிகளுக்கும் செக்குகள் செய்து தரப்பட்டுள்ளன.

11.  வாணியர்கள், வாணிய நகரத்தார் என்றும் அழைக்கப்பட்டனர்.

12. இலங்கையிலும் பல பல முற்கால கல்வெட்டுகளில் வாணியர்கள் வாணிய நகரத்தார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்..

13. கேரள சிங்க வள நாட்டில் (இன்றைய காரைக்குடிப் பகுதியில்) மிகுதியாக இத்தகைய செக்குகள் அமைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அந்த பகுதி செக்கு ஆலை என்றும் செக்காலைக் கோட்டை என்றும் வழக்குப்பெற்றுள்ளது. இதன் மூலம் நகரத்தார் என்னும் நாட்டுகோட்டை செட்டியார்களுக்கும் வாணியச் செட்டியார்களும் தொடர்பு இருந்தது புலனாகின்றது.

14.  செக்குகளுக்கு சேது நாட்டில் செக்கு இறை என்ற வரிப்பாடு இருந்து வந்தது.

 

21.வைதீகர் அடக்குமுறைகளும் கட்டுக்கதைகளும்:

(என் குறிப்புப்படி இவைகள் கட்டுக் கதைகளே தமிழரால் உருவாக்கப்பட்டதன்று இன்னும் பல கதைகள் உண்டு)

கதை 1:

வாணியர்கள் பிரம்மனால் படைக்கபட்டு வாணிதேவியாம் சரஸ்வதியால் வளர்க்கபட்ட வக்குவ மகரிசிக்கும் வக்குவ தேவிக்கும் புத்திரகாமஷ்டி யாகத்தில் 1000 செந்தாமரை இதழ்களை தூவியதும் ஆயிரம் குழந்தைகள் உருவானார்கள் வாணி தேவியால் வளர்கபட்டதால் இவர்களுக்கு வாணியர்கள் என பெயர் சூட்டி பூலோகத்தில் ஏற்படும் இரவு இருளை நீக்கி ஒளியை தர பிரம்மனால் படைக்கபட்டு குபேரனுடைய 1000 பெண்களை அவர்களுக்கு மணம் முடித்து பூலோகத்திற்கு அனுப்ப பட்டனர். இதே கதையை ஆயிரம் வைசியர் பிரிவும் கூறுகின்றது.

கதை 2:
 படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவன் அவையில் பிராமணர்சத்ரியர்வைசியர்கள் குடியிருந்தனர். பிரம்மதேவன் அவர்களைக்கண்டு தத்தம் கோத்தரங்களைப் பற்றித் தெரிவிக்குமாறு ஆணையிட்டார். பிராமணர்களின் சங்கத்தை சார்ந்த பிரதிநிதியாகக் துர்வாச முனிவர் எழுந்து கூறினார். பிரம்மதேவனே ! எங்களில் 107 கோத்திரங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சிறப்பாகக் கருதப்படுவது 18 மட்டுமேயாகும். சத்ரியர்கள் சங்கத்தைச் சார்ந்த தனஞ்செயன் என்னும் மன்னன் எழுந்து பகர்ந்தான். பகவானே ! எங்களில் கோத்திரங்கள் உள்ளன. அவை ஏழும் சிறப்புடையது. வைசியர்களின் சங்கத்தைச் சேர்ந்த சமாதி எனும் வைசிய முனிவர் தெரிவித்தார். உலகங்களையயல்லாம் படைத்த உத்தமோத்மரே! எங்கள் வைசிய குலத்தில் 714 கோத்திரங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் வாழும் வைஸ்ய குல மக்களை பிரம்மன் அகமகிழ புகழ்ந்தான். பிராமணர்களின் கோத்திரங்களை ஆங்கீரச முனிவரும்சத்ரியர்களின் கோத்திரங்களை வசிஷ்ட முனியும் வைசியர்களின் கோத்திரங்களை அபரார்க்க மகாமுனியும் நிச்சயம் செய்து நடைமுறை படுத்தினார்கள். இம்மூன்று முனிவர்களும் பிரம்ம தேவனின் மானச புதல்வர்கள். பிரம்மதேவனின் விருப்பப்படி இம் மூவரும் மூன்று வர்ணத்தாருக்கும் ஜாதகம் எழுதி பெயர் சூட்டி கோத்திரங்கள் வகுத்தளித்து வழிகாட்டினார்கள்வைசியர்கள் பிரம்ம தேவனின் தொடையினின்று உண்டானார்கள் என்று புராண வரலாறும் பண்டைய நூல்களும் சாஸ்திரங்களும் இயம்புகின்றன 

22.கீழானவர்களாக நடத்தக் காரணம்:

மனு தர்ம சாத்திரம் இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள்சம்பிரதாயங்கள்அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு மனு எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் இந்நூலை திருலோக சீதாராம் என்பவர் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார். மனு தர்ம சாத்திரம்  9 வது பிரிவில் வைசியர் ஆடவர் & பெண்டிர் அறம்:-திருமணம்,மகப்பேறு,பாகப்பிரிவினை,கவறாடல் முதலிய குற்றங்களுக்கு தண்டனைகள் மற்றும் வைசியர்களின் கடமைகள் பற்றி விவரிக்கிறது.அவற்றில் சில

வைசியருக்கு:

1.   பிரம்மாவானவர் உலக விருத்தியின் பொருட்டு, தன்னுடைய முகத்திலிருந்து பிராமணரையும், தோளிலிருந்து க்ஷத்திரியரையும், தொடையிலிருந்து வைசியரையும், பாதத்திலிருந்து சூத்திரரையும் படைத்தார்.” - அத்தியாம் 1, ஸ்லோகம் 31

 

2.   வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (8 : 417)

 

3.   பிராமணனுக்குப் பஞ்சு நூலும் சத்ரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணுால் தரிக்க வேண்டியது. (அத்2. சு.44).

 

4.   சூத்திரன் இறந்துபோனால் ஊருக்குத் தெற்குப் பக்கத்திலும்வைசியன் இறந்துபோனால் மேற்குப் பக்கத்திலும். சத்திரியன் இறந்து போனால் வடக்குப்பக்கத்திலும்பிராமணன் இறந்துபோனால் கிழக்குப் பக்கத்திலும் எடுத்துக்கொண்டு போக வேண்டியது. ( அத் 5. சு.92)

 

5.   ஆடு மாடு மேய்த்தல்கொடையளித்தல்யாகம் செய்தல்வாணிபம் செய்தல்வட்டிக்கு கடன் தருதல்நிலத்தை பயிர் செய்தல்’ ஆகியவை வைசியனுக்கு உரிய .தொழிலாகக் கூறுகிறது. (அத் 1 - ஸ்லோகம் 90)

 

6. பிராமணர்களின் நிறம் வெள்ளை நிறமாகவும்சத்திரியர்கள் சிவப்பு நிறமாகவும்வைசியர்கள் மஞ்சள் நிறமாகவும்சூத்திரர் கருப்பு நிறமாகவும் என தனித்தனியே பிரித்துக் காட்டியதே மனுவின் சிறப்பு.

 

7.   ஒரு சூத்திரன்ஒரு தலைமுறைகளில் தொடர்ந்து பார்ப்பான் சாதியில் திருமணம் செய்து கொண்டால் அந்த சூத்திரனும் பார்ப்பான் ஆகின்றான் என்கிறது மனு (அத்10 .64-67).  வைசிய தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர் - வைசியர்.

 

8.   அதிக பசு முதலியவற்றால் செல்வமுடையவனாயும் யாகம் செய்யாதவனாயும் சோமபானம் பண்ணாதவனாயும் இருக்கிற வைசியன் வீட்டிலிருந்து கேட்டுக் கொடாவிடில் வலிமை செய்தாவதுகளவு செய்தாவது அந்த யாகத்திற்கு வேண்டிய திரவியத்தை யாகம் செய்வோன் கொண்டு வரலாம். (இதில் யாகம் செய்யாதவன் என்றால் யாகம் விரும்பா நீசன். சோமபானம் பண்ணாதவன் என்றால் மது அருந்தாதவன். அதாவது எவ்விதத் தீயொழுக்கம் இல்லாத வைசியன் வீட்டில் பார்ப்பனன் கொள்ளை அடிக்கலாம் என்பதாகும் (அத்11:1).

 

9.   வைசியர்இராட்சத குணம் மற்றும் தாமச குணம் மிக்கவர்கள்,. சாத்வீக குணமற்றவர்குறைவான இராட்சத குணம்அதிகமான தாமச குணமும் கொண்டவர்கள்.

 

கீழானவராக கருத முக்கிய காரணம்:

1.  எள் விஷ்ணுவின் வியர்வையில் உண்டானது அதை ஆட்டுவது பாவம் அப்பாவம் கொடியது. .

2.       நல்ல காரியத்துக்கு போகும்போது வாணியனை காணக்கூடாது.

3.       எள் செடியின் பூவினை அணிவதும் இதுபோலவே பாவமான செயலாகும்

 

மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என்பதை  சதபத பிராமணத்திலும்ஜெராஸ்ட்ரிய மத வேத நூலான ஜெண்ட் அவஸ்தாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேத கால நதிகளான சரசுவதி மற்றும் திருட்டாதுவதி நதிக்கரை பகுதிகளான பிரம்மவர்த்த பகுதிகளான இன்றைய வடக்கு இராசபுதனம் மற்றும் தெற்கு அரியானா பெருமழையால் அழிந்த பின்பு ஆரியர்கள்,விந்தியமலைக்கு வடக்கு பகுதிகளில் தற்கால நேபாளம்உத்தர பிரதேசம்,பிகார்,மத்திய பிரதேசம்,வங்காளம்குசராத் மற்றும் கிழக்கு இராசபுதனம் ஆகிய பகுதிகளில் குடியேறினர்.

 அப்பகுதி பின்பு ஆரிய வர்த்தம் எனற பெயரால் அழைக்கப்பெற்றது.அப்போது மற்ற முனிவர்கள் சுவாயம்பு மனுவையும் அணுகி இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமூக வாழ்க்கை நெறி முறைகளை எவ்வாறு மக்கள் வகுத்து கொண்டு வாழ்வது என்று கேட்டதற்குமாமுனி மனு வகுத்து கொடுத்ததே மனுஸ்மிருதி என்று நம்பப்படுகிறது.மனிதர்களால் உருவாக்கப்பட்டு காலத்திற்கேற்ப மாறுவது  ‘ஸ்மிருதி’ . அந்தந்த கால கட்டத்திற்கும்,  மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப,  பல்வேறு ஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மனு ஸ்மிருதி கிருதாயுகத்திற்கானது . மேலும்இந்த மனு ஸ்மிருதி இந்த கலியுகத்திற்கு பொருந்தாது. இது அந்த காலகட்டமக்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.

குறிப்பு:

1.       வாணியர்கள் வேறு, ஆரிய வைசியர்கள் வேறு.

2.      ஆரியவர்த்தத்தில் இருந்த வணிகர்களே வைசியர்கள் எனப்பட்டனர். விந்தியமலைக்கு வடக்கு பகுதிகளில் நேபாளம்உத்தரபிரதேசம்,பிகார்,மத்திய பிரதேசம்,வங்காளம்குசராத் மற்றும் கிழக்கு இராசபுதனத்தில் ஆரியர்கள் குடியேறினர்.

3.   வாணியர்கள் பூர்வீக தமிழ் மக்கள் என்பதை இதன் மூலமும் திருச்செந்தூர் ஆலய நுழைவுப் போராட்டம் மூலம்  உறுதிசெய்யலாம்.

4.       மனு ஸ்மிருதி கிருதாயுகத்திற்கானது . மேலும்இந்த மனு ஸ்மிருதி இந்த கலியுகத்திற்கு பொருந்தாது என்று அறிந்த பிறகும் ஏன் தமிழக மக்கள் மீது  வலிந்து திணிக்கப்பட்டது?  

 

       வாணியர்களுக்கு கோவிலில் நுழையத்தடை:

திருச்செந்தூரிலுள்ள  வாணியர்கள் தமது வகுப்பினருக்குப் பிரதிநிதிகள் என்ற ஹோதாவில் சுப்பிரமணிய சுவாமி தேவஸ் தானத்தின் தர்மகர்த்தாக்களையும், ஸ்தலத்தார் என்று சொல்லப்படும் சில உரிமையாளரையும் பிரதிவாதிகளாக்கி, அந்த ஆலயத்தில் மற்ற மேல்ஜாதி இந்துக்கள் போகும் இடம் வரையில் போய் தரிசனம் செய்ய தமக்கு உரிமை உண்டென்று வழக்கு தொடர்ந்தார்கள்.

முதலில் இது தூத்துக்குடி சப்-கோர்ட்டில் நடந்தது. பிரதிவாதிகள் பின் வருமாறு தாவாச் செய்தார்கள். வெளிப் பிரகாரத்தில்கூட இந்த வகுப்பினர் வருவதற்கு உரிமை கிடையாது. 1877இல் அதைப் பற்றி வியாஜ்ஜியம் நடந்திருக்கிறது. வாணியர்களுக்கு இந்தக் கோயிலில் பிரவேச உரிமை இல்லையென்று அப்போது தீர்ப்பு கூறப்பட்டு இருப்பதால், இப்போது கொண்டுவரப்படும் வழக்கு முன் வழக்கால் பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் விவாதித்தார்கள்.

வாணியர்கள் வைசியர்கள்’’ என்று ருசுவாகா விட்டாலும் அவர்கள் சூத்திரர்களுக்கு குறைவானவர்கள் அல்ல. முன் வியாஜ்யம் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியமல்ல. ஆகையால் இப்போது வரும் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியத்தை முன் தீர்ப்பு பாதிக்காது என்று சப்-கோர்ட்டு கருதியது. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்று தீர்ப்புக் கூறப்பட்டது. இதன் மீது ஹைக்கோர்ட்டில் தர்மகர்த் தாக்களும், ஸ்தலத்தாரும் அப்பீல் செய்தனர். முன் தீர்ப்பினால் பாதகம் தான் என்று சொல்லி, அய்க்கோர்ட்டு வாணியர்களுக்கு விரோதமாகத் தீர்ப்புக் கொடுத்தது.

முன் வழக்கால் பாதகம் ஏற்பட்டதா என்பதைப் பற்றி வாணியர்கள் பிரிவி கவுன்சிலில் அப்பீல் செய்தார்கள். பாதகம் இல்லையென்று பிரிவி கவுன்சில் சொல்லிவிட்டதோடு, இந்த வழக்கின் உள் விஷயங்களையும் கவனித்து தீர்ப்புக் கூறும்படி உத்திரவிட்டது. கடைசியாக இப்பொழுது அய்க்கோர்ட்டில் வழக்கு வந்தது. வாணியர்கள் எக்காலமும் பிரவேச உரிமையை அனுபவிக்க வில்லை என்பதை ருசுச் செய்வது பிரதிவாதிகள் பொறுப்பு; ஏனென்றால் வாணியர்கள் வைசியர்களைவிட தாழ்ந்த படியில் இருப்பவர்களல்ல. பிரதிவாதிகள் முன் அனுஷ்டானத்தை ருசுச் செய்யவில்லை.

1862-க்கு முன் வாணியர்களுக்கு பிரவேச உரிமை இருக்கவில்லையென்று ருசுவாகவில்லை. ஆகையால், அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதாவது சப்-கோர்ட்டின் தீர்ப்பு உறுதி. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்பதே இப்போது ஏற்பட்டுள்ள தீர்ப்பு.

 இந்த வழக்கில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.எல். வெங்கடராமையர், வி.சம்பந்தம் செட்டி ஆகியோர் வாணியர்கட்சிக்கும், டி.ஆர்.வெங்கடராமையர், கே.எஸ்.சங்கரைய்யர், டி.நல்லசிவம்பிள்ளை தர்மகர்த்தாக்களுக்காகவும் ஆஜரானார்கள்.   

                                                       நன்றி: குடிஅரசு, 24.03.1935   

24.பூநூல் அணியத் தடை:

      நகரத்தார்கள்நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்ஒவ்வொரு ஜாதியினரும் வைதீகரோடு போட்டி போடவேண்டும் என்று வெள்ளைக்காரர்கள் காலத்தி லேயே பிரிவியூ கவுன்சில் வரை வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.வாணியச் செட்டியாரில் ஒரு சாரார்களுக்குப் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு இருக்கிறது. அதே போன்று நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று சொல்லக் கூடியவர்கள் என்ன சொன்னார்கள் என்றால்நாங்கள் தன வைசியர்கள்நாங்கள் சூத்திரர்கள் அல்லஎங்களுக்குக் கோவிலில் தனி இடம் கொடுக்கவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால்அவர்கள் என்ன சொன்னாலும்நீங்கள் சூத்திரர்கள்தான் என்று ஆதாரம்இந்து லா (Hindu Law) சாஸ்திரம்மனுதர்மத்தை எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லிபிரிவியூ கவுன்சிலில் தீர்ப்பு எழுதி வைத்திருக்கிறார்கள். வன்னியர்கள்மற்றவர்கள் ஜாதியைப் பிரித்த பிறகுவன்னியகுல சத்திரியர்கள் என்று சொன்னவுடன்எங்களுக்குப் பூணூல் போடும் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இல்லைஇல்லை எல்லோரும் சூத்திரர்கள் தான் என்றார்கள். அதைவிட மிக முக்கியமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு - அங்கீகரிக்கப்பட்டது

சாஸ்திர ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்னவென்றால்பிராமணன்சத்திரியன்வைசியன்சூத்திரன் என்பதில்தென்னாட்டில் சத்திரியனும் இல்லைவைசியனும் இல்லை. வடநாட்டில் மட்டும்தான் நான்கு பிரிவுகள் உண்டு.

                                                                       (நன்றி: விடுதலை-2018)

 

 25.அற்றை வாணிய முன்னவர்கள்:

அன்பிற்பிரியாள்:

மருதவாணிபன் என்னும் பெருவணிகன் காவிரிபூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு பிள்ளைப்பேறு இல்லை.ஆகையால் அவன் சான்றோருக்கும், ஏழைகளுக்கும் தானங்கள் பல செய்து வந்தான்.அதனைக் கண்ட பார்வதி தேவி சிவனிடம் உங்களையே அனுதினமும் நினைத்துக்கொண்டிருக்கும் மருதவாணிபருக்கு புத்திரபாக்கியம் கிடைக்க அருள் செய்யுமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் இவருக்கு புத்திரபாக்கியம் இல்லை என்று கூறினார். அதற்கு பார்வதிதேவியோ நம் ஆலயத்திற்கு எண்ணெய் தரும் வாணியர்களாகிய இவர்களுக்கு புத்திரபாக்கியம் தராவிட்டால் உலகம் நம்மை பலிக்கும் என்றாள். உடனே ஈசனும் சரி நீயே இவர்களுக்கு குழந்தையாக பிறந்து என்னை வந்து அடைவாயாக! என்று அருளினார்.

இதன் பயனாக பார்வதிதேவியின் அம்சத்துடன் மருதவாணிபருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்கு அன்புபிரியாள் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அக்குழந்தையும் அழகான பெண்ணாக வளர்ந்து பருவமடைந்தாள். அந்நாட்டு சோழஅரசன் நகர்வலம் வந்த போது அவள் அழகில் மயங்கி அவளை மணம் செய்ய எண்ணினான். இதற்கிடையே இறைவனே தொண்டைநாட்டு வாணிகன் வேடத்தில் வந்து அன்புபிரியாள் அம்மையை தானே திருமணம் செய்ய எண்ணுவதாய் கூறினான். மருதவாணிபரும் சரி என்று ஒப்புக் கொண்டார்.திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணநாளும் நிச்சயம் செய்யப் பட்டது.

இவ்விஷயம் சோழமன்னனுக்கு தெரிந்தது.உடனே அவன் தன் ஆட்களை அனுப்பி மருதவாணிபரிடம் பெண் கேட்டான். ஆனால் மருதவாணிபரோ நாங்கள் செத்தாலும் சாவோமே தவிர மாற்று இனத்தவருக்கு பெண் கொடுக்க மாட்டோம் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். இதனை கேட்ட அரசன் கடுங்கோபமுற்றான். உடனே அரசன் தன் வேலையாட்களை அனுப்பி மருதவாணிபர் வீட்டை அலங்கரிக்க சொல்லி நாளை காலை எனக்கும் அன்புபிரியாளுக்கும் திருமணம் நடக்கும் என்று கூறினான்.

இதை கண்ட மருதவாணிபரோ பதறிப்போனார். வேறொருவருக்கு பெண் தருவதாய் நாம் கொடுத்த வாக்கு என்னாவது என்று எண்ணினார். சொன்ன சொல் தவறாத வாணியர் குலத்தில் பிறந்து விட்டு அரசனுக்கு எப்படி பெண் கொடுப்பேன் என்று பதறினார். அன்றிரவே அவர் அரசன் திருமணத்திற்காக கட்டியிருந்த மணப்பந்தலில் ஒரு நாயைக்கட்டி விட்டு தன் மகளுடனும் தன் உறவினர்களுடனும் தன் மகளுக்கு நிச்சயித்த மருமகன் ஊருக்கு சென்றார். அப்போது அவர்கள் செல்லும் வழியில் ஈசன் மணமகன் வேடத்தில் வந்தார். உடனே அவர்கள் இப்போதே திருமணத்தை நடத்தி விடலாம் என்று எண்ணி திருமணத்தை முடித்து விட்டனர். அனைவரும் கிளம்பும் போது காவிரிஆறு குறுக்கிட்டது. அனைவரும் ஒரு ஓடத்தில் ஏறி அக்கரையை அடைந்தனர். அப்போது அன்புபிரியாளையும் மருமகனையும் காணாது தவித்த மருதவாணிபர் ஆற்றில் குதித்து உயிரை விட முடிவுசெய்தார். அப்போது மருதவாணிபா யாமே உமது மகளை ஆட்கொண்டோம் எம்மை காண நீ திருவிடைமருதூர் வருவாயாக! என்ற அசரீரி குரல் கேட்டது. திருவிடைமருதூரை அடைந்த மருதவாணிபரும் உறவினர்களும் அன்புபிரியாள்அம்மையும். ஈசனும் மணக்கோலத்தில் இருப்பதை கண்டனர். ஈசன் தான் அன்புபிரியாளை மணந்த முறையை கூறி மறைந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் அரசனோ மணப்பந்தலில் நாயைக் கண்டு கடுங்கோபம் கொண்டான். அங்கிருந்த வாணியர் குலத்தவர்களை அடித்து சித்திரவதை செய்தான். இதைக் கண்டு பயந்த வணிகர்கள் அரசனிடம் அவர்களை நாங்கள் பிடித்து தருகிறோம் என்று கூறி செல்வாக்குடன் வாழ்ந்தனர்.

பல ஆண்டுகளுக்கு பின் அவர்கள் திருவிடைமருதூர் ஆலயத்தில் அன்புபிரியாள் அம்மை திருமண உற்சவத்தை தாங்களே நடத்த தகுதியானவர்கள் என்று அரசனிடம் சென்று முறையிட்டனர். மருதவாணிபனின் உறவினர்களும் தங்களுக்கு தான் உரிமை இருப்பதாய் கூறினார்கள். அரசனும் இருபிரிவினரும் திருவிடைமருதூர் சென்று அன்புபிரியாளம்மை முன் சென்று கூப்பிடுங்கள்.யார் அழைத்தால் வருகிறாளோ அவர்களே உரிமை உடையவர்கள் என்று கூறினான்.

அதன்படி இருசாராரும் கோவிலுக்கு சென்று அழைத்தனர்.மருதவாணிபர் உறவினர்கள் அழைத்த போது என்ன அப்பா என்ன அம்மா என்று குரல் வந்தது.உடனே அரசன் திருக்கல்யாண உற்சவம் நடத்த நீங்கள் தான் உரிமை உடையவர்கள் என்று சாசனம் வழங்கி சிறப்பித்தான். இப்போதும் 4 ஆம் நாள் மாப்பிள்ளை அழைப்பு மண்டகப்படி  வாணியர் சமுதாயத்தவரால் நடத்தப்படுகிறது.

 

கலிய நாயனார்

சென்னையில் உள்ள திருவெற்றியூரிலே செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர் கலிய நாயனார். இவருடைய காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். அப்போது செக்கு தொழிலே இவரது பிரதான தொழிலாக இருந்தது.


 

செக்குநிறை யெள்ளாட்டிப் பதமறிந்து திலதயிலம்

பக்கமெழ மிகவுழன்றும் பாண்டியல்வரு மெருதுய்த்தும்

தக்கதொழில் பெறுங்கூலி தாங்கொண்டு தாழாமை

மிக்கதிரு விளக்கிட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்.

                                               -கலியநாயனார்

திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் ஆயிர கணக்கில் விளக்கேற்றும் சிவ தொண்டினை இவர் செய்து வந்தார். எண்ணெய்க்கே தன் சொத்து முழுவதையும் செலவிட்டார். ஒரு கட்டத்தில் இவரது செல்வங்கள் யாவும் கரைந்து போனது. ஆனாலும் சிவனுக்கு விளக்கேற்றும் தொண்டினை இவர் விடுவதாக இல்லை. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போக என்ன செய்வதென்று தவித்த இவர்தான் தங்கி இருந்த வீட்டை விற்றார்அதன் மூலம் வந்த வருவாயை கொண்டு விளக்கேற்றும் பணியை தொடர்ந்து செய்தார்.

இப்போது விற்பதற்கு ஏதும் இல்லைவிளக்கேற்ற எண்ணெய் வாங்கவும் பணம் இல்லை. இதனால் தவித்து போன அவர்தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு தான் விளக்கேற்றும் படம்பக்கநாதர் திருக்கோவிலிற்கு சென்றார். அங்கு இறைவனை மனதார வணிங்கிவிட்டுஇறைவா நான் உனக்காக செய்யும் இந்த விளக்கேற்றும் திருப்பணி நின்றுவிட்டால் நான் என் உயிரையே மாய்த்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்று கூறினார். இவ்வடியேன் ஏற்றும் அகல் விளக்குகளில் எண்ணெய் குறைந்து விளக்குகள் நில்லுமாயின் நான் என் ரத்தத்தை கொண்டு விளக்கேற்றவும் தயங்க மாட்டேன் என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

சொன்னதோடு நின்றுவிடாமல் அதை மெய்ப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினார். நீண்ட தொரு அரிவாளை எடுத்து அதன் மூலம் தன் குழுந்தை அறுத்து உதிரத்தை விளக்கில் கொட்ட முயற்சித்தார். அப்போது அங்கு எழுந்தருளிய சிவபெருமான் அவரின் கரத்தை பிடித்து தடுத்தாட்கொண்டார்.

 

கோவலன் கண்ணகி:  முற்பிறவி

முத்துச்செட்டி என்பவன் பிள்ளைவரம் வேண்டி நந்தவனம் அமைக்கிறார். அதில் காமதேனு என்னும் பசு கயிலாயத்திலிருந்து நூலேணி வழியாக இறங்கி வந்து நாள் தோறும் மேய்ந்து செல்கிறது. கன்றின் விருப்பத்தை ஏற்று ஒரு நாள் அதனையும் அழைத்துவரபட்டிமாடு மேய்கிறதென்று முத்துச்செட்டி வீசிய கல்லில் அடிபட்டு இறக்கிறது. ‘பதினாறு வயதளவும் அன்புடன் வளர்த்த என் மகவைக் கொன்ற உனக்குப் பிறக்கும் மைந்தனும் அதே வயதில் இறக்கக்கடவான்’ என்று சாபமிட்டு பசு கயிலாயம் செல்கிறது.

இரண்டு மனைவியுடன் வாழ்ந்து வந்த மணியரசன் என்னும் வணிகன் தம்முடைய சொத்தை இரண்டு பாகமாக்கி முதல்தார மக்கள் மூவருக்கு ஒருபங்கும் இளையதார மகனுக்கு ஒரு பங்கும் அளிக்கிறான். தம் குல வழக்கப்படி இளையதார மகன் எண்ணெய்க்குடமெடுத்து விற்பனக்கு வருகையில் விற்பனையாயின் காளிகோயிலுக்கு விளக்கேற்றுவதாக வேண்டியதுடன் அதன்படியும் செய்கிறான்.

மதுரையை ஆண்ட பாண்டியர்கள் தமக்குக் குழந்தைப்பேறு இன்மையால் கோபம் கொண்டு காளிகோயில் கதவடைத்ததுடன் மீறி விளக்கேற்றுவோர் தண்டிக்கப்படுவார் என்றும் ஆணை இடுகின்றான். இதனையறியாது விளக்கேற்றிய முத்துச்செட்டியின் இளையதார மகனை மூத்ததார மக்கள் காட்டிகொடுக்கஅரசனின் ஏவலர்கள் அவனைக்காளி கோயிலில் காவு கொடுக்கின்றனர். வெட்டுண்ட வாணியன் தலை காளியின் மடியில் விழுந்து ‘உபகாரம் செய்தேன் அபகாரம் நேர்ந்ததுவே’ என்று வருந்த, ‘மைந்தன் பழிக்கு நாளை மதுரை பழிவாங்கி வைப்பேன்’ என்று காளி சூளுரைக்கிறாள் கணவனின் மறைவால் வாணிச்சியும் இறக்கிறாள்..

வாணியன்வாணிச்சியின் உயிரைசொக்கேசர் சிமிழில் அடைத்துவைக்கிறார். காளி சொக்கேசரிடம் ‘இப்பிறப்பு நீங்கி மறுபிறப்பு யான் பிறந்து வணிக செட்டி கோவலற்கு மனைவியாக வந்து விளக்கவித்த பாண்டியரை வெட்டித்தலை சாய்த்து மணிக்`குடலைத்தான் பிடுங்கி வந்திடுவேன் கோவிலுக்கு’ என்று சூளுரைக்க , காளியின் உயிரையும் சிமிழிதனில் அடைத்து வைக்கிறார்.

பிள்ளை வரம் வேண்டியதனால் முத்துச்செட்டியின் மனைவி வர்ணமாலைக்கு வாணியனும் பாண்டியனின் மனைவிக்கு காளியும் தேவதாசி வயந்தமாலைக்கு வாணிச்சியும் பிறக்கின்றனர்.வலது கால் செஞ்சிலம்பு இடது கை செப்போடு கழுத்திலே பூமாலை’ இவற்றுடன் குழந்தை பிறக்கசோதிடர் கூற்றுப்படி பேழையில் வைத்து ஆற்றில் விடுகின்றனர்.

ஆற்றில் வரும் குழந்தையை ஐந்துதலை நாகம் நாகரத்தினத்தைக்கக்கி வலது கால் சிலம்பில் பதித்து ‘கண்ணகி’ என்று பெயரிட்டு ஆற்றில் விட மாச்சோட்டானும்மாநாய்கனும் எடுக்கஒப்பந்த படி மாநாய்கன் வளர்க்கிறான்.கடையூர் தேவதாசிதமக்குப்பிறந்த பெண் குழந்தைக்குச் சோதிடம் பார்க்கஇவள் ஐந்து வயதில் நாட்டியம் கற்கத் தொடங்கிபத்து வயதில் அம்பலமேறி ஆடி ஆணழகன் ஒருவனை அழைத்து வருவாள்பன்னிருவாண்டுகள் அவனுடன் வாழ்ந்து பதின்மூன்றாம் ஆண்டில் மடிவாள்’ என்று கூறுகின்றான்.

கண்ணகியைக் மணக்க போட்டி நடக்கிறது. முத்துச்செட்டி அப்புச்செட்டிகள் தத்தம் பிள்ளைகளுக்கு மணமுடிக்க விரும்புகின்றனர். தக்கால வழக்குப்படி திருவுளச்சீட்டு போட அது கோவலனுக்கு முடிவாகிறது. திருமணம் நடக்கிறது சதிர்க்கச்சேரி கோவலன் விருப்பத்திற்கேற்ப நடத்த மாதவி வருகிறாள். அவள் எரியும் மாலை கோவலன் கழுத்தில் விழஅமிர்த கடேசுவரர் கோவிலில் பிரியோம் என்று சத்தியம் செய்து கொண்டு கோவலன் மாதவியை அழைத்துக்கொண்டு திருக்கடவூர் செல்கிறான்.

                                                                                                                                    (நன்றி:ஆரையம்பதி)

 

தொன்மை

நச்சினார்க்கினியார் தமது தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் (237) தொன்மை என்பதை 'உரைவிராஅயப் பழமையாகிய கதைப் பொருளாகச் சொல்லப்படுவது' என விளக்கி உதாரணங்களாக பெருந்தேவனார் பாரதம்தகடூர் யாத்திரைசிலப்பதிகாரம் என்ற மூன்றனையும் தருகிறார். எனவே பழமையாகிய கதையை உட்கொண்டே சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது என விளங்குகிறது.

நற்றிணையில் கண்ணகி

மேலும் நற்றிணைப் பாடல் (216) ஒன்று திருமாவுண்ணி என்பவள் தன்மீது அன்பற்றுத் துறந்து தனக்கு அயலான் போலாகிவிட்ட காதலனைப் பற்றிக் கவலை கொண்டு வருந்தினாள் எனவும்பின் தனது ஒருமுலையைத் திருகியெறிந்து வேங்கைமரத்தின் கீழ் நின்றாளெனவும் குறிக்கிறது. நற்றிணையிலும் சிலப்பதிகாரத்திலும் உள்ள இந்தச் செய்திகள் கண்ணகி வரலாறு சங்ககாலத்துக்கு முன் நிகழ்ந்த ஒன்று என்பதை மெய்ப்பிக்கின்றன.

யாப்பருங்கலத்தில் கண்ணகி

யாப்பருங்கல விருத்தியில் (பக் 351) ஒருத்தி தன் கணவன் கொலையுண்டு கிடந்த நிலைகண்டு பாடியதாக ஒரு வெண்பா காணப்படுகிறது. இது பத்தினிச் செய்யுள் என உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனவே சிலப்பதிகாரம் தோன்றியதற்கு முன்பே கண்ணகி வரலாறு தோன்றி வளர்ந்து தமிழகம் முழுதும் பரவியது என அறியலாம்.

வைசிய புராணத்தில் கண்ணகி:

       வைசிய புராணத்தில் 32ஆவது கதையாக கூறப்பட்டிருப்பது மாசாத்துவானின் கதையாகும்.

 

26.கண்ணகி வழிபாடு:

கண்ணகி வழிபாடு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும்,கேரளத்திலும் அதிகமாக உள்ளது.தமிழகத்தை விட இலங்கையில் தான் அதிகமாக கண்ணகி கோயில்கள் காணப்படுகின்றன. கேரளத்தில் கண்ணகி ஆரிய சாயம் பூசப்பட்டு பின் பகவதியாக  அருள்புரிகிறாள்.

மங்கலதேவி கோவில் அல்லது மங்களா தேவி கண்ணகி கோயில்  கேரளத்தின்  இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும்தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கிருந்து ஒரு பக்கம் கிழக்கு மலைத்தொடர்களையும்அதனுடன் தமிழ் நாட்டில் இணைந்திருக்கும் சில கிராமப்பகுதிகளையும் நன்றாக காணலாம்ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாகதேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான்தமிழக பக்தர்கள்கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.

27.இலங்கையில் கண்ணகி:

இலங்கையிலே சிங்கள மக்கள் மத்தியில் பத்தினி தெய்யோ என வணங் கப்பட்டுஇலங்கை மட்டக்களப்பு பிராந்தியத்தில் கண்ணகை அம்மனாக கோவில்கள் கொண்டுள்ளாள். இரண்டாவது நூற்றாண்டில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கஜபாகு[1]என்கிற மன்னனால் கண்ணகி வழிபாடு சிங்கள மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது என சிங்கள வரலாற்று நூல்களில் ஒன்றான இராஜாவளி என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசனை கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்தன் என சிலப்பதிகாரம் சிறப்பித்துக் கூறுகிறது. கஜபாகு மன்னன் வருடந்தோறும் ஆடி மாதத்தில் பத்தினி தெய்வத்திற்கு விழா எடுப்பித்தான். சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும். அதிலிருந்து இந்த விழா எசல பெரஹர என அழைக்கப்பட்டது. ஊர்வலமாக வரும் ஆடித் திருவிழா என தமிழில் கூறலாம். இந்த ஊர்வலத்தில் நாத தெய்யோ(சிவன்/விநாயகர்)விஷ்ணுதெய்யோ (திருமால்)கதிர்காம தெய்யோ (முருகன்)தெய்வங்க-ளும் இடம் பெற்றன. மிக பக்தியுடன் இந்த விழா சுமார் 1800 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சிங்கள மன்னர்கள் காலத்துக்குக் காலம் தலைநகரை மாற்றியபோதுபத்தினி விழாவும் அந்தந்த தலைநகரங்களில் நடைபெற்றது.

பதினெட்டாம் நூற்றாண்டில் சீய நாட்டிலிருந்து (தாய்லாந்து) இலங்கைக்கு வந்த புத்த துறவிகளின் விருப்பப்படி விழாவில் புத்தரின் புனித தந்தம் தாங்கிய பேழையும் எடுத்துச் செல்லப்படலாயிற்று. தற்போது இந்த விழா சிங்கள மன்னர்களின் கடைசி தலைநகரமான கண்டி நகரில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது ஒரு புத்த சமய விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் விழாவில் இரண்டாவது ஊர்வலம் நாத தெய்யோ ஆலயத்திலிருந்தும்மூன்றாவது ஊர்வலம் விஷ்ணு தெய்யோ ஆலயத்திலிருந்தும்நான்காவது ஊர்வலம் கதிர்காம தெய்யோ ஆலயத்திலிருந்தும்ஐந்தாவது ஊர்வலம் பத்தினி தெய்யோ ஆலயத்திலிருந்தும் தொடங்குகின்றன. இப்போது பத்தினி தெய்யோ தொற்று நோய்கள்பஞ்சம்வரட்சி ஆகியவற்றிலிருந்து காக்கும் தெய்வமாக சிங்கள மக்கள் மத்தியில் வருணிக்கப்படுகிறது

கண்ணகி ஆய்வு:

திரு யாணன் ஆய்வுக் கூற்றிலிருந்து சில செய்திகள் மட்டும்,

தமிழகத்தில் அருகிவிட்ட கண்ணகி அம்மன் வழிபாடு இலங்கையில்தான் அதிகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இவ்வழிபாட்டில் தமிழர்களைவிட சிங்களவர்களே அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிங்களவர்களின் முக்கியமான காவல் தெய்வமாக கண்ணகி (பத்தினி தெய்யோ) விளங்குகிறாள். பில்லிசூன்யம்செய்வினை போன்றவற்றை பத்தினியின் உதவியுடனேயே செய்வதால் சிங்கள மாந்திரிகர்களின் குலதெய்வமாக கண்ணகி வீற்றிருக்கிறாள்.

இது குறித்து சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தில் குறிப்பிடப்படுகிறது. இன்றைய கேரள மாநிலம் குமுளிக்கு மேலே அமைந்துள்ளதுமங்கலதேவி கோட்டம். இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவனால எழுப்பப்பட்டது. இமயம் சென்று திரும்ப ஐந்தரை ஆண்டுகள் பயணம் மேற்கொண்ட சேரன் செங்குட்டுவன் வடபுலத்து அரசர்களான கனகவிசயன் ஆகியோரை வெற்றி கொண்டு இமயமலையில் கல்லெடுத்து அதைக் கங்கையில் நீராட்டித் சிற்றரசர்களின் தலைச்சுமையாக இங்குக் கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகி சிலை வடித்துள்ளான். அச்சிலையைகுன்றக் குறவர்கள் சாட்சியாக கண்ணகி விண்ணுலகம் சென்ற அம்மலையின் மீது எழுப்பபட்ட ஆலயத்தில் நிறுவி குடமுழுக்கு செய்துள்ளான். அந்நிகழ்வில் பல அரசர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இருந்து கஜபாகு எனும் மன்னனும் விருந்தினராக கலந்துகொண்டுள்ளான். அன்றைய இரவு விண்ணில் விஸ்வரூப தரிசனம் தந்தாள் கண்ணகி. அதைக் கண்ட சேரன் சிலிர்ப்புற்றான். அருகில் இருந்த கஜபாகு தரிசனத்தைத் தன்னால் காண இயலவில்லையே என ஏங்கி கற்பகிரத்தினுள் சென்று தாயேஅடியேன் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன். நான் உனக்கு இலங்கையிலும் ஆலயம் எழுப்பி வழிபட விரும்புகிறேன். உத்தரவு வேண்டும்’ என கேட்க சிலையில் இருந்து அசரீரியாக சம்மத வாக்கு கிடைத்திருக்கிறது. பெரிதும் மகிழ்வுற்ற மன்னனிடம்சேரன் சந்தனப்பேழையில் வைத்து சிலம்புகள் வழங்கியதாக குறிப்புகள் உள்ளன. இராஜவளி என்ற சிங்கள நூலிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் அங்கணக்கடவை’ எனும் இடமாம். சிங்களநாட்டில் பத்தினி தெய்யோ’ என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும். கண்ணகியை ஒரு குறிப்பிட்ட மொழி இனத்துக்கான தெய்வமாக ஏன் சுருக்க வேண்டும்சிங்களவர் கண்னகியை வழிபடுவதுவரவேற்கதக்கது. தமிழர் சிங்களவர் ஒற்றுமைக்கு ஓரு காரணியாக இது அமைந்திருக்கிறது.

அக்கால அடித்தட்டு மக்கள் அபலைகள். சமூக பலம்பொருள் பலம் இல்லாத சாமானியர்கள். அவர்களே கண்ணகியைத் தங்களில் ஒருத்தியாகப் பார்த்தனர். கணவனோடு பிழைப்பு தேடி இடம்பெயர்ந்த இடத்தில் துயரம் நேர்ந்தபோது ஆவேசம் கொண்ட அவளுக்கு இயற்கை கைகட்டி மண்டியிட்டது! அந்தக் காட்சி சாமானிய ஏழைகளின் வாழ்வில் நம்பிக்கைகொள்ள வைத்தது. நமக்குக் கண்ணகி துணை நிற்பாள் என நெஞ்சுரத்தோடு நடந்தனர். கண்ணகியைப் போல் கறைபடாது வாழ்ந்தவர்கள் வாக்கு பலித்தது. தாங்கள் வயிறு எரிந்து வழங்கும் சாபமும் வஞ்சகர்களைக் கேட்கும் என நம்பினர். அப்படியே நடக்கவும் செய்தது. எதிர்த்து பேச முடியாத அநியாயக்காரர்களை எண்ணி மண் வாரி இறைத்தனர். ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும் என்பதைக் கையில் உண்மையான வாளோடு திரிந்தவர்கள் உணர்ந்து அடங்கினர். ஏழைகளுக்குஅபலைகளுக்குக் கண்ணகி துணையானாள். அவளை நினைத்து நெற்றியில் மஞ்சள் பூசினர். தலையில் வேப்பிலை சூடினர். கண்ணகி துயரம் கொண்ட ஆடிமாதம் விரத மாதம் ஆனது. கண்ணகி வழிபாடு தமிழர்களிடம் அசுர வளர்ச்சிபெற்றது.

பதினெட்டாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த சைவ நெறிப் பற்றாளர் ஆறுமுகநாவலர் மிகக் கடுமையாகக் கண்ணகி வழிபாட்டை எதிர்த்துள்ளார். கண்ணகி ஒரு தமிழச்சி. முதல் புரட்சிப்பெண். தமிழர்களின் அடையாளம் எனப் பலவாறு புகழ வாய்ப்பிருந்தும்அவளை மிகச் சாதாரணமாக சமண மதத்து செட்டிச்சி’ எனக் குறிப்பிட்டார் ஆறுமுக நாவலர். அவளை ஏன் வழிபடுகிறீர்கள்?” எனக் கொச்சையாகக் கேட்டுதன் அசுரச் செல்வாக்கால் ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்துள்ளார். எனினும் இலங்கையில் இன்றும் செல்வாக்கோடு இருக்கிறாள் கண்ணகி என்பது ஓர் ஆறுதல்.

கோவலன் பொட்டல்


 

கோவலன் தலை வெட்டப்பட்ட கல்சேரன் செங்குட்டுவன் ஆட்சியமைந்த கேரளா தேசத்தில் பரவி நின்ற கண்ணகி வழிபாடு பின்னர் வந்த ஆதிசங்கர் தலையீட்டால் பகவதி என பெயர்மாற்றப்பட்டாள். இன்றும் கொடுங்கநல்லூர் பகவதிஅட்டுகல் பகவதி என பல இடங்களில் பகவதியாக மிக செல்வாக்கோடு திகழ்கிறாள்கண்ணகித் தாய். மலைவாழ் மக்களான வேடுவர்கள்அவளை மங்கல தேவி’ என்ற பெயரில் தெய்வமாக வணங்கியுள்ளனர். குறும்பர் பழங்குடியினர் குறும்பா பகவதி என வழிபடுகின்றனர்.

கண்ணகி ஓர் உண்மை நிகழ்வு. அவள் ஒரு வரலாறு. அதற்குச் சான்றுகள் பல உண்டு. சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்லவரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர்களில் ஒருவர்ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.

மதுரையின் கிழக்கு வாயில் வழியே கணவனுடன் நுழைந்த நான்இப்போது அநாதையாக மேற்குத் திசை வழியே செல்கிறேன்” (‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கின்றேன்’) என்று புலம்பிவிட்டுக் கண்ணகி புறப்படுவதையும்கரடுமுரடான பாதையில் மேற்குத்திசை நோக்கி நடந்து நெடுவேள் குன்றம் ஏறிமலர்ந்த ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நிற்பதையும்பதினான்காம் நாளன்று வானஊர்தியில் இந்திரன் உள்ளிட்ட தேவர்களோடுகோவலனும் வந்து கண்ணகியைப் பணிந்து உடன் அழைத்துச் செல்வதையும் எடுத்துரைக்கிறது சிலம்பு.

அப்படி கண்ணகி மலைமேல் ஏறிவேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும்அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் இந்நூற்றாண்டில் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவர் சி.கோவிந்தராசனார்.


 

சிலப்பதிகாரம் குறிப்பிடும் பழைய மதுரை எது என எழுத்தாளர் ஜெயமோகன் தன் பதிவு ஒன்றில் குறிப்பிடுவதுவைகைக்கு மறுபக்கம் உள்ள மணலூர் என்ற கிராமத்தையே. தென்மதுரையைச் சேர்ந்த பழங்காநத்தம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள கோவலன் பொட்டல் வரலாறு தொடர்புடைய ஊர். சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணைப்படி கோவலனின் தலை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டுத்தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 – கிபி 300 இடைப்பட்ட சங்க காலத்தில் சுடுகாடாக இருந்தவை. கோவலன் உடல் அடக்கம் செய்யப்பட்டதின் காரணமாகவே பிற்காலத்தில் கோவலன் பொட்டல் என அழைக்கப்பட்டுள்ளது.

இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980-களில் இங்கு தங்களது ஆராய்ச்சியைத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் அங்கு மூன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும்மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். சிலப்பதிகார நிகழ்வுகள் அனைத்தும் உண்மையே என்பதைக் காலம் சிறிது சிறிதாக உணர்த்தவே செய்கிறது. மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவலன் பொட்டல். மதுரைபுகார் மற்றும் கேரளாவில் உள்ள ஆதித்தமிழர்கள்பழங்குடிகள் பலரிடமும் கண்ணகி வரலாறு குறித்த தகவல்கள் ஏராளம் உள்ளன.

தமிழ் ஆய்வாளர்கள்கண்ணகியின் வாழ்வில் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தது எல்லாம் ஆடி மாதத்து வெள்ளிக்கிழமைகளில்தான் என்று கூறுகிறார்கள். (தமிழறிஞர் மு.வரதராசனார்)அவள் மதுரையை எரித்ததும் ஓர் ஆடி வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று. அதன் பின் கண்ணகிபதினான்கு நாட்கள் நடந்துவந்து சேர்ந்த இடமே இன்றைய மங்கலதேவிக் கோட்டம். அதனால் பிற்காலத்தில் அம்மன் கோயில்கள்வெள்ளிக்கிழமைகளில் முக்கியத்துவம் பெற்றன. வெவ்வேறு பெயர்களில் எழுப்பப்பட்டுள்ள அம்மன் கோயில் பலவும் கண்ணகியின் அமைதி வடிவத்தின் அடையாளமாகவே அமைக்கப்பட்டன.

அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நடைபெறும் விழாக்களில் சிலம்பு ஒரு இசைக்கருவியாக சேர்க்கப்பட்டது. சிலம்பு வழிபாட்டிலும் இடம்பெற்றுள்ளது. கண்ணகி அணிந்த கால் சிலம்பு பொன்னால் ஆனது என்பதால் தமிழ்மரபுப் பெண்கள் இன்றளவும் காலில் பொன்னால் ஆன சிலம்புதண்டைகொலுசு அணிவதில்லை. தமிழர்கள் ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதை இன்றளவும் தவிர்த்தே வருகின்றனர்.


 

அதுமட்டுமல்லாது ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைக்கப்படும் மரபு தோன்றியதற்குக் காரணம்குழந்தை சித்திரை வெயிலில் பிறக்கும் எனக் கூறப்பட்டாலும் கண்ணகி கணவனை இழந்த மாதம் என்பதே பிரதானமாக இருந்து பின்னர் மாற்றி கூறப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறேன்.

கண்ணகி சாபத்தால் பொங்கி எழுந்த இயற்கை தோற்றுவித்த தீயை நாலாப்பக்கமும் எடுத்து வீசியது காற்று. அதனால் இன்றளவும் ஆடி மாதம் வந்தால்காற்று ஆவேசம் கொள்ளுகிறதோஆடிக் காத்துல அம்மியும் அசையும் என்பார்கள்.

கண்ணகி இட்ட சாபத்தை நிறைவேற்ற வந்த தேவதைதீயில் யாரெல்லாம் மாண்டு போக வேண்டும்யாரெல்லாம் தப்பிக்க வேண்டும்?’ என உத்தரவு கேட்டதாம். அப்போது அவள், ‘தீயவரை விடாதே!’ எனக் கண்டிப்பு காட்டிவிட்டுநல்லோரை விட்டுவிடுமாறு வேண்டினாளாம். மதுரை எரியத் தொடங்கியதும் அங்கிருந்த நல்ல சக்திகள் வெளியேறத் தொடங்கின. நிலைமை மோசமாவதை அறிந்த மதுரையின் காவல் தெய்வமான மதுராபதி கையைப்பிசைந்தபடி வந்து கண்ணகி முன் தோன்றுகிறாள். கோவலன் கொலைப்பட்டதற்கான காரணம் அவனது முற்பிறவி வினையே எனக்கூறிபாதி எரிந்த மதுரையில் மிச்சத்தைக் காப்பாற்றுகிறாள்.

இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாகவே அம்மன் ஆலய திருவிழாக்களில் தீக் குழியைக் கடந்து செல்லுதல் (தீமிதித்தல்) ஒரு சடங்காக உருவானது என ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள். இதெல்லாம் இன்றைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்..                                                                                                      நன்றி:யாணன்

ஆற்றுக்கால் பகவதி

நீதி தேவதையான கண்ணகி திருவனந்தபுரம் ஆற்றுக்காலில் பகவதியம்மனாக அருள் பாலிக்கிறாள். இங்கு மாசித்திங்கள் பூரத்தன்று நடக்கும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி பெற்றது. திருவனந்தபுரத்தில் அங்குள்ள ஆட்டுக்கல் பகவதியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவின் நாயகி கண்ணகி. மதுரையை எரித்து விட்டுக் கோபத்துடன் வெறியேறிய கண்ணகி கேரளா சென்று ஆட்டுக் கல்லில் சில காலம் தங்கியதாகச் சொல்கிறது தல வரலாறு. கடுங்கோபத்துடன் இருந்த கண்ணகியைச் சாந்தப் படுத்தவே இந்தப் பொங்கல் விழா.

கேரள நாட்டில் கோடிக் கணக்கான பெண்களின் வழிபாட்டிற்குரிய தெய்வமாக விளங்குகிறாள் கண்ணகி என்பதே மேல் காட்டப்பெற்ற இதழ்கள் சுட்டும் செய்தியாகும். கேரளாவில் பரவலாகக் கண்ணகி வழிபாடு செல்வாக்கு பெற்றுள்ளது. கொடுங்கல்லூர் பகவதி அம்மன் வழிபாடு கண்ணகி வழிபாடாக இருந்து மாறியுள்ளது என்பதை அறிஞர் விளக்குவர் (அ.கா.பெருமாள் & செந்தீ நடராசன் 2015). கொடுங்கல்லூர் பகவதியின் வழிபாட்டுச் சடங்குகள்பழமரபுக் கதைகள்வழிபாட்டுப் பாடல்கள்விழா நிகழ்வுகள் ஆகியவற்றைத் தொகுத்துப் பார்க்கும் போது கண்ணகி வழிபாடு சங்ககாலம் தொடங்கிக் கி.பி.16-ஆம் நூற்றாண்டு வரை தொடர்வதையும் அதன் பின்னர்ப் பகவதி அம்மனாக மாற்றப்பட்டதையும் காணமுடிகிறது. மாறினாலும் பழைய மரபுகள் மறையாமல் இருப்பதையும் அறியமுடிகின்றது.

கேரளத்தில் பரவலாக இருந்த கண்ணகி வழிபாடு பகவதி வழிபாட்டோடு இணைந்ததால் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. என்றாலும் கேரளாவி;ல் நாற்பதிற்கும் மேற்பட்ட கோயில்கள் கண்ணகி வழிபாட்டிற்குரியவையாகத் திகழ்வதைக் காணமுடிகின்றது. இவ்வழிபாட்டின் போது கோடிக்கணக்கான மக்கள் கூடி வழிபாடு நடத்துவதையும் அறியமுடிகின்றது. கோவலன் கொலையுண்ட போது கண்ணகி காளியாக மாறி நீதி கேட்கச் செல்கிறாள்.  இந்நிகழ்ச்சி கேரளத்தில் சாமியாடி செய்யும் ஒரு சடங்காக இடம் பெற்றுள்ளதை அறிய முடிகிறது. சாமியாடி ஒற்றைச் சிலம்பை அணிந்து தலைமயிரை விரித்துப் போட்டு உடம்பில் குருதி வழிய அருள் வாக்கு கூறுவது கண்ணகி தொன்மத்தின் தொடர்ச்சியே என்பர் இந்துசூடன். தொடக்க காலத்தில் கேரளத்தில் சேரன் கண்ணகிக்காக நட்ட மாசதிக்கல் வழிபாட்டின் சடங்குகள் இன்னும் மடியவில்லை என்றும் அவை ஸ்ரீகுரும்பாபத்திரகாளிநல்லம்மாமணியம்மா முதலிய தெய்வங்களை வாழ்த்திப் பாடும் பாடல்களில் கண்ணகி புராணம் உள்ளது. வட கேரளத்தில் உள்ள சீர்மக்காவு கோயில்கள் கண்ணகிக்கு உரியவை என்று வில்லியம் லோகன் கூறுவதை அறிஞர் விளக்கி உள்ளனர். பல்வேறு கண்ணகி கோயில்களில் பாடப்படும் தோற்றம் பாட்டு குறிப்பிடத்தக்கது. இப்பாட்டில் கண்ணகி வரலாறு இடம் பெறக் காணலாம். இதே போலத் தெறிப்பாட்டு என்பதையும் அறிஞர்கள் விளக்கி உள்ளனர். வாணியர்களும் நகரத்தார்களும் சில செட்டியார்களும் கோவலன் கண்ணகியை தம் இன அடையாளமாகவும், இன முன்னவராகவும், தெய்வமாகவும், போற்றி புகழ்ந்து வருகின்றனர் 

 28.தென்னிந்திய வாணிக வைசியர்கள்::

கண்டல்கணிகாதெலிகுலாசெக்காலாசாஹூபணியா (வாணியர் என்ற சொல்லின் திரிபு) என்பது தமிழரல்லாத பிற மொழி பேசும் வாணிக வைசியர்கள் ஆகும். இவர்களது தொழிலும் வணிகமும் செக்காட்டுதலும் ஆகும்.அதை விவரிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. இங்கு நான் குறிப்பிட விரும்பியது தைலகுலகாலன்தெலிங்க குலகாலன், என்றழைக்கப்பட்ட பெருவுடையார் கோவிலை ஈந்த காவேரிக் காவலன்கழனிகளின் நாயகன்நாவாய் முதல்வன்மதிப்புறு ராச ராச சோழர் அவர்களேயாம்.

தைலகுலகாலன்தெலிங்ககுலகாலன் என்ற கீர்த்திப் பட்டங்கள் ராச ராச சோழருக்கு  ஏன் கொடுக்கபட்டன என்று வரலாறு துணைகொண்டு அறிக. மேலும் இன்று தமிழகத்தில் உள்ள செட்டியார்கள் என்ற பத்தியையும் கூர் நோக்க.

 

29.கிருத்துவ சமயத்தில் வாணியர்கள்:

சாதியப் படிநிலைகள் கடுமையான போது கீழ ஆசாரிப்பள்ளத்து வாணியர்கள் பலர் கிருத்துவ மதத்தை தழுவ தள்ளப்பட்டனர். அன்றைய திருநெல்வேலிப் பகுதியில் அதிகமாக வாணியர்கள் வாழ்ந்து வந்தனர்.அதில் கோவிலுக்கு செல்லக்கூட அனுமதியில்லை.ஆனால் கோவிலில் உள்ள அனைத்து விளக்குகள் ஏற்றுவதற்கும் எண்ணெய் மட்டும் பெறப்பட்டது.

சாதிய கொடுமைகள் தாழாமல் மூன்று வாணியர் குடும்பம் மட்டும் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரியில் உள்ள ஆசாரிப்பள்ளத்துக்கு சென்று கிருத்துவ மதத்தை தழுவி தம் குலத்தொழிலான செக்காட்டும் தொழிலையே செய்து வந்தனர். இன்னும் சில ஊர்களில் இது நடந்துள்ளன..

 

30.தமிழ்க் களஞ்சியத்திலிருந்து வாணியர் பற்றி:  (ஆங்கிலேயர் குறிப்புகள்)

மனு எண்ணெய் ஆட்டும் தொழிலைத் தாழ்ந்ததாக வகைப்படுத்தியுள்ளார், இதற்கான காரணம் தெரியவில்லை. எனவே இதனை மேற்கொண்டவர்கள் மதிக்கப்படுதல் இல்லை. திருநெல்வேலியில் இவர்கள் கோயில்களுள் புக அனுமதிக்கப்படுவதில்லை. கோயில்களில் விளக்கேற்றும் பணியினை மேற்கொண்டுள்ள காரணத்தால் மலபாரைச் சேர்ந்த வாணியரான செக்கான்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பூனூல் அணிந்தவர்களாகத் தங்களுக்குச் சமூகத்தில் உயர் தகுதியினைத் தேடிக் கொண்டுள்ளனர். இத்துடன் சிலர் சோதி நகரத்தார்திருவிளக்கு நகரத்தார் எனத் தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ளும் பட்டப்பெயர்களையும் தரித்துக் கொள்கின்றனர். பிராமணர்களைப் புரோகிதர்களாக அமர்த்திக் கொள்ளும் இவர்கள் குழந்தை மணத்தை மேற்கொள்வதோடு விதவைகள் மறுமணத்திற்கும் உடன்படுவதில்லை. இறந்தவர்களை எரிக்கும் இவர்கள் பிராமணர்களைவிடத் தாழ்ந்த சாதியார் இல்லங்களில் உண்பதில்லை. எனினும் வண்ணார் கூட இவர்கள் இல்லங்களில் உண்ண உடன்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. காண்டலர்களிடையே இருப்பதைப்போல இவர்களிடையேயும் ஒற்றைச் செக்கான்இரட்டைச் செக்கான் என்ற இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. முன்னவர் செக்கில் ஒர் எருதையும் பின்னவர் இரண்டு எருதுகளையும் பூட்டி ஒட்டுவர். இவ்விரு பிரிவினருள் ஒற்றைச் செக்கார் வலங்கைப் பிரிவினையும் இரட்டைச் செக்கார் இடங்கைப் பிரிவினையும் சேர்ந்தவர்களாக இருப்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.

வாணுவன் என்ற பெயரை வழக்கமான செட்டி என்ற பட்டப்பெயரோடு வாணியன்கள் குடிக் கொள்கின்றனர். வாணுவன் என்ற இந்தப் பட்டப்பெயர் தங்கள் பரம்பரைத் தொழிலைக் கைவிட்டு தானியம் முதலியவற்றின் வாணிபத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரியதாகும்" எனத் தென்ஆர்க்காடு மாவட்டக் கையேட்டில் திரு பிரான்சிஸ் கூறியுள்ளார். வணிகம் வாணியம் என்ற சொல் வணிகத்தைக் குறிக்கும். இது எண்ணெய் வணிகத்தோடு கூட எண்ணெய் தயாரித்தலையும் குறிக்கும். இவ்விரண்டுமே வாணியர்கள் தொழில் தங்களை வைசியர் எனக் கூறிக் கொள்ளும் இவர்கள் வைசிய புராணத்தைத் தங்கள் புனித நூல் எனக் கூறுவர். சென்ற ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்குள்ளாகத்தான் இவர்கள் பூனூல் அணியத் தொடங்கியிருக்க வேண்டும். வக்குண மகரிசி என்பவ்ர் இயற்றிய யாகத்திற்குப் பின்னரே இவ்வாறு பூனூல் அணியத் தொடங்கினர். காமாட்சியம்மாவிசாலாட்சியம்மாஅச்சுத்தாலிதொப்பதாலி என்ற நான்கு உட்பிரிவுகள் இச் சாதியில் உள்ளன. முதல் இரண்டு பிரிவினரும் தங்கள் பிரிவுக்குரிய பெயரிலான தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். பின் இரு பிரிவினரின் பெயர்களும் அப் பிரிவினைச் சேர்ந்த பெண்கள் அணியும் தாலியின் அமைப்பின் அடிப்படையில் அமைந்ததாகும். பேரி செட்டிகளைப் போன்ற அதே பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள இவர்கள் அவர்களைப் போல இறைச்சி உண்பதனை விலக்குவதில் மிகுந்த நாட்டம் செலுத்துவதில்லை. வாணியருக்கு முறையற்ற உறவின் வழி பிறந்தவர்கள் பிள்ளைக் கூட்டம் எனப்படுகின்றனர். இவர்கள் நெடுங்காலத்திற்கு முன் வாணியன் ஒருவன் வைப்பாட்டிக்குப் பிறந்தவர்களின் வழிவந்தவர்கள். இந்தப் பிரிவினர் வாணியர் இல்லாத பகுதிகளில் காணப்படுவதில்லை. இவர்களுக்கு உணவும் உடையும் தந்து காப்பாற்ற வேண்டியது வாணியர் பொறுப்பாகும். அவ்வாறு வாணியர் கொடுக்க முன் வராதபோது அவர்களுக்குக் கொடிய சாபங்களை இடுவதாகக் கூறி அச்சுறுத்தி அவர்களிடமிருந்து பிச்சை பெற்று வருகின்றனர் என வட ஆர்க்காடு மாவட்டக் கையேட்டில் திரு எச்.எஸ்டுவர்ட் கூறியுள்ளார்.

1891 கணக்கெடுப்பு அறிக்கையில் திரு ஸ்டுவர்ட் மேலும் இவர்களைப் பற்றிக் கூறியுள்ளவை வருமாறு முன்பு செக்கான் என இவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள் மட்டும் வணிகர் எனப் பொருள்படியான வாணியன் என்று அழைக்கப்பட்டது ஏன் எனப் புரியவில்லை. இவர்கள் தங்களுக்குள் 126 உட்பிரிவுகள் இருப்பதாகப் பதிந்து உள்ளனர். அவற்றுள் இலை வாணியன் என்ற பிரிவினைச் சேர்ந்தவர்களே எண்ணிக்கையில் மிகுந்தவர்களாகக் குறிப்பிடத்தக்க பிரிவினராக உள்ளனர். இரண்டெருது என்பது மற்றொரு உட்பிரிவுக்கான பெயர். இது இவர்கள் செக்கில் இரண்டு எருதுகள் பூட்டுபவர்கள் என்பதனைக் குறிக்கும். இவ்வாறு செக்கில் இரண்டு எருதுகள் பூட்டுபவர்கள் ஒர் எருது பூட்டுபவர்களிலும் வேறுபட்டவர்களாகக் கருதப்படுவது இந்தியா முழுவதும் இச் சாதியாரிடையே காணப்படுவதொன்றாகும். மலபாரைச் சேர்ந்த வாணியன்கள் பழக்க வழக்கங்கள் நாயர் பழக்க வழக்கங்களைப் போன்றவை. இவ்விரு பிரிவினரும் பூனூல் அணிவதோ பிராமணர்களைப் புரோகிதர்களாக அமர்த்துவதோ இல்லை. வடமலபாரில் இவர்கள் தொடுவதால் நாயர்கள் தீட்டுப்பட்டவர்களாகின்றனர். தென்மலபாரில் வட்டக்காடன்கள் எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் இவர்கள் தங்களை நாயர் சமூகத்தோடு தகுதியில் சமமானவர்களாக ஆக்கிக் கொண்டுள்ளனர். இவர்களுள் பலர் நாயர் என்பதனையே தங்களுடைய சாதிக்கு உரிய பெயராகப் பதிந்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பாக கணக்கெடுப்பு அறிக்கையில் திரு பிரான்சிஸ் கூறியுள்ளதாவது வட்டக்காடன்கள் எனத் தென் மலபாரில் கூறப்படும் இவர்கள் வட மலபாரில் வாணியர் என அழைக்கப்படுகின்றனர். முன்னவர் பின்னவரைவிடத் தகுதியில் உயர்ந்தவர்கள். நாயர்கள்வாணியன்களும் செக்கான்களும் தொட்டால் தீட்டுக்கு உள்ளாகின்றனர் வட்டக்காடன்கள் தொட்டால் தீட்டுக்கு உள்ளாவதில்லை. செக்கான்களும் வாணியரும் பிராமணர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இவர்கள் பழக்க வழக்கங்கள் நாயர்கள் பழக்க வழக்கங்களை ஒத்தனவாயினும் நாயர்கள் இவர்கள் சாதிப் பெண்களை மணந்து கொள்வதில்லை.

 

1901 கொச்சி மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையில் கொச்சியினைச் சேர்ந்த வாணியரைப் பற்றிக் கூறப்பட்டிருப்பது வருமாறு இவர்கள் பூனூல் அணிகின்றனர். திருமணம்உடைமை உரிமை பேணுதல்சடங்குகள்உடைஅணிகள் முதலியவற்றில் இவர்களிடையேயும் கொங்கணிகளிடையேயும் எத்தகைய வேறுபாடுகளும் இல்லை. இவர்கள் மதுமாமிசத்தை முழுவதுமாக விலக்காத காரணத்தால் கொங்கணிகள் இவர்களைத் தங்கள் இல்லங்களுள் நுழைய அனுமதிப்பதில்லை. மேலும் கொங்கணிகளுக்கு உரிய குளம்கிணறுகளிலிருந்தும் இவர்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். சைவர்களாக இவர்களுக்குப் பண்டிதர்கள் எனப்படும் தனிப் புரோகிதர்கள் உள்ளனர் பிராமணர்களைப் போலவே இவர்களும் சாவுபிறப்பு தொடர்பான தீட்டுக்களைப் பத்து நாள்களுக்கு மேற்கொள்கின்றனர். இவர்களுள் பலரும் சிறு வணிகர்களாகவும் பெட்டிக்கடைக்காரர்களாகவுமே உள்ளனர். ஒரு சிலர் மலையாளம் எழுதப் படிக்கக் கற்றிருந்தாலும் ஆங்கிலக் கல்வியினைப் பொருத்தவாை மிகப் பிற்பட்டவர்களாகவே உள்ளனர். 


"எள்தேங்காய்இலுப்பைபின்னைநிலக்கடலை ஆகியவற்றை வாணியன்கள் ஆட்டுகின்றனர். சாத்திரங்கள் எள்ளினை ஆட்டுவதனையும் நல்லெண்ணையினை விற்பதனையும் பாவமான செயல்கள் எனக் கூறுகின்றன எள் செடியின் பூவினை அணிவதும் இதுபோலவே பாவமான செயலாகும்" என தஞ்சை மாவட்டக் கையேடு கூறுகின்றது. வாணியன் திருமணமாகாதவனாக இறப்பானாகில் வாணிகர்கள் அவன் பிணத்துக்கு எருக்கம் (Calotropis gigantica) செடியோடு மணம் செய்து வைப்பதோடு அவன் பிணத்தை எருக்கம் பூ மாலைகளாலும் அலங்கரிப்பர். .

                                                                                                                                   நன்றி:தமிழ்ப்புலவர் 

 

நன்றி

 

 

 முடிவுரை:

என் வேண்டுகோளே முடிவுரை

1.(விரும்புவோர் மட்டும்) பெயருக்கு பின் செட்டியார் என்று பின்னொட்டு இடாது வாணியர் அல்லது வாணியச்செட்டியார் என்றே இடுங்கள்

2.கண்ணகி திருவிழாவை முன்னெடுங்கள்.   

3.இன வரலாற்றை மறந்த இனம் தம் அடையாளத்தை மறந்த இனமே. நினைவில்கொள்க

4.சுற்றம் அறிந்து ஒழுகுக.

5.சாதி பேதம் பாராட்டுதல் குற்றம்.சாதி, சாதியாகவே இருக்கட்டும் ஏற்றத்தாழ்வு பாராதே.

6.தமிழின வரலாற்றையும், தமிழ் மொழி வரலாற்றையும் உங்கள் இன வரலாற்றையும் என்ன என்பதனை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

7.தமிழனின் ஒவ்வொரு சாதியின் பெயருக்குள்ளும் தான் தன் இன வரலாறு புதைக்கப்பட்டுள்ளது என்பதை மறவாதீர். நினைவில்கொள்க.

8.வரலாற்றை மறந்த இனம் அடிமைப்படும்.

9.ஆண்டானும் இல்லை அடிமையும் இல்லை.

10ஆரிய மாயையில் உழலாதீர், தமிழர்க்கென பண்பும் மாண்பும் உண்டு.

11.தீமையை விடுத்து நல்லனவற்றை தேர்க.

12.தமிழைப் புறந்தள்ளாதீர், புறந்தள்ளுதற்போல் கொடிய நோய் வேறொன்றில்லை. 

13.தமிழை கசடற கற்று பிறர்க்கு உரைக்க.

 

 

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப் பொருள் காண்பதறிவு.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு