இந்தியாவின் முதல் அணை ?

                    





   பௌத்த நூல்களான தம்மபாதம் முதலியவை புத்தரின் வாழ்வில் நடந்த ஒரு செய்தியைத் தருகின்றன. கபிலவஸ்துவை ஒட்டி ஓடிய நதி ரோஹிணீ என்பதாகும். இந்த நதியின் குறுக்கே சாக்ய வம்சத்தினரும் கோலிய வம்சத்தினரும் அணையைக் கட்டி நீரைப் பகிர்ந்தார். ஒருமுறை நீரிருப்பு குறைந்ததால் இருநாட்டு உழவர்களும் பேசி முடிவெடுக்க முனைந்தனர். சொல் தடித்து போனானது. போரின் போது புத்தர் வந்தார். நீரைக் காட்டிலும் மனித ரத்தம் விலையுயர்ந்தது என்று கூறி போரை நிறுத்தினார் என்று இந்த நூல்கள் கூறுகின்றன. ஆக புத்தரின் வாழ்நாளில் ரோஹிணியில் அணை கட்டப்பட்டிருந்தது தெளிவாகிறது. பொயுமு ஆறு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் அணை இருந்தமை தெரிகிறது. இந்த ஆறு இன்றும் கபிலவஸ்து வழியாக உத்தரபிரதேசத்திற்கு பாய்கிறது.


 

Top of Form

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

சங்க இலக்கியத்தில் விலங்குகள்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு