மகிபாலகுல கால பேரளம்

 



பீகார், வங்காள மாநில கங்கையாற்றின் தென்கரையில் தக்கணலாடம், உத்தரலாடம் என்ற பகுதிகள் இருந்தன. லாடம் என்றால் தேர் என பொருள். அப்பகுதியின் பேரரசன் "மகிபாலன்", இவனை வெற்றி கொண்டதன் நினைவாய், நாஞ்சில் நாட்டு பெரிய உப்பளம் ஒன்றிற்கு "மகிபாலகுல கால பேரளம்" என்ற ஒரு பெரிய உப்பளத்தை இன்றைய, கன்னியாகுமரி மாவட்ட வடக்குதாமரைக்குளம் பகுதியில் ராஜேந்திரன் ஏற்படுத்தினார். அதேபோல் "மகிபாலகுல கால(மகிபாலன் குலத்திற்கு எமன்) பேரூர்" எனும் சில சோழர்கால ஊர்களும் உண்டு. வங்காளதேசத்தின் அப்பகுதியில் தன்மபாலன், இரணசூரன் எனும் இரு மன்னர்கள், மகிபாலனுக்கு கீழடங்கிய சிற்றரசர்களாய் இருந்தனர். அவர்களை வென்று, பெரும் பராக்கிரமனான மகிபாலனையும் அடக்கி, அங்கிருந்த கங்கை நீரையும், கீழே படத்திலுள்ள சரஸ்வதி சிலையையும் நம் சோழப்படை "அரையன் ராஜராஜன்" எனும் ராஜேந்திரசோழனின் நம்பிக்கைக்குரிய தளபதியின் தலைமையில் கொண்டுவந்தது. இந்த சிலை இன்று நம் கங்கைகொண்ட சோழபுர கோவிலில் உள்ளது.

 

சரஸ்வதிபூஜை நல்வாழ்த்துக்கள்

தடாதகை ((மீனாட்சி ))

#புதுமண்டபம்

#மதுரை

 

  மன்னன் மலையத்வஜ பாண்டியன்-அரசி காஞ்சனமாலா ஆகியோருக்கு சிவனின் அருளால் ஹோம குண்டத்திலிருந்து தோன்றி மகளாக அவதரித்த மீனாட்சி, கடவுளின் அருளால் மூன்று மார்பகங்களுடன் அவதரித்தார். இதன் சிறப்பு என்னவென்றால் தனக்கு தகுந்த வீரம் மிக்க மணாளன்  மணக்க வரும்போது, இந்த மூன்றாவது மார்பகம் மறைந்து விடும்...அது போன்றே சுந்தரேசுவரர் தடை மீறி மீனாட்சியை மணந்த போது மீனாட்சியின் மூன்றாம் மார்பகம் மறைந்தது.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி