தமிழரின் நீர் மேலாண்மை
தமிழரின் நீர் மேலாண்மை நீரின்றி அமையாது உலகு -- வள்ளுவர் வாக்கு இலக்கியத்தில் நீர் மேலாண்மை * தமிழில் நீரைத் தேக்கும் அமைப்புத் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. * நீரின் போக்கையும் நிலத்தின் தன்மையையும் அறிந்து நம் முன்னோர் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தினர். * இரண்டு பக்கப் பாறைகளை இணைத்து எட்டாம் நாள் பிறை போன்று குளக்கரை அமைத்தனர் (புறம். 118). * கல்கொண்டு அணை கட்டப்பட்டதை ‘ வருவிசைப் புனல் கற்சிறை போல் ஒருவன் தாங்கிய பெருமையாலும் ’ ( தொல். பொருள். 65) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறிகின்றோம். * அரசன் பெயரில் குளம் இருந்ததைக் “ கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளம் மடைநீர் ” ( நற். 340) என்று நற்றிணை தெரிவிக்கின்றது. * குளங்களுக்குக் காவலர்கள் (மடை வாரியர்கள் , கண்மாய் குடும்பன்) நியமிக்கப்பட்டிருந்தனர் (அகம். 252). * “ நீர் மோதும் மதகுகளை உடைய உறையூர் ” ( அகம். 237) என நீர் வளத்தோடு இணைத்து ஊரைச் சிறப்பிக்கும் முறையைச் சங்க இலக்கியங்களில் காணலாம். ' நீர்கட்டி ' யாக பள்ளர். தமிழரின் பாசன நுட்பங்கள் குறித்து மேலைநாட்டு அறிஞர...




























































































































































































































































































































Comments
Post a Comment