தமிழகக் கல்வெட்டில் தற்கொலைகள்

 


 


கல்வெட்டில் அரிய தகவல்கள்......

 

இன்று நாம் பழைமையான திருக்கோயில்களை அழித்து விட்டு புதிதாக கட்டும்போது 

முகநூலில் பதிவு போட்டுட்டுவிட்டு நமது வேலை பார்க்க சென்று விடுகிறோம் 

 

ஆனால் அக்காலத்தில் மக்கள் வழிபாடு இன்றி கிடக்கும் கோவிலின் தோற்றத்தை பார்த்து மணம் பொருக்கமால் 

 

கோபுரத்தில் ஏறி மீண்டும் கோவிலில் வழிபாடு நடைபெற தனது உயிரை தியாகம் செய்து உள்ளார்கள் 

 

திருச்சி மாவட்டம் அன்பிலில் திருவான் கொடையார் கோவிலுக்கு நிலம் ஒன்று ஊருக்குப் பொதுவாக இருந்தது. ஊர்ப் பொது நிதியிலிருந்து வரி செலுத்தினர். ஆனால் காலப்போக்கில் இந் நிலத்தை ஊர் மகாசபையினர் தம் பெயரில் எடுத்துக் கொண்டனர். இதனைப் பழுதயாண்டார் என்பவர் எதிர்த்தார். தன் உயிரைக் கோவில் கோபுர மேறிக்கீழே விழுந்து நீத்தார்.

 

இதன் பின் ஊர் மகாசபையாரும் ஊர் முதலியும், ஊர் மக்களும் ஒன்றுகூடி ஆய்வு செய்து கோவில் அதிகாரியின் கணக்குப்படி நிலத்தை மகாசபையாரிடமிருந்து எழுதி வாங்கி மீட்டு ஊர்ப் பொதுவில் சேர்த்தனர். (புலவர் ஆ. சிவசுப்பிரமணியன் 2007 பக் 21)

 

கோவில் நிலத்தைப் பாதுகாக்க உயிர்விட்ட பழுதையாண்டாருக்கு திருவான் தொடையார் கோவிலில் சிலை உருவாக்கி இந்நாயனாருக்கு அமுது படிக்கு மூலதனமாக அரைவேலி நிலத்தை வற நீக்கி வழங்கினார்.

 

 மூன்றாம் இராஜேந்திரனின் நான்காம் ஆண்டு ஆட்சியில் கி.பி.1249- இது நிகழ்ந்தது.

விஜய நகரப் பேரரசின் காலத்தில் ஸ்ரீரங்கம் பகுதி உள்ளிட்ட மண்டலத்தை ஆண்டு வந்தவன் வைத்தியநாத காளிங்கராயன் (கி.பி. 1471- 1485) என்ற கோனேரி ராயன் ஆவான்.

 

இவனுடைய ஆட்சிக்காலத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் புரவரி, காணிக்கை வரி, பட்டுவரி, பரிவட்டவரி, போன்ற வரிகளை விதித்தும் ஸ்ரீரங்கம் கோவிலின் ஸ்ரீ பண்டாரம் என்னும் கருவூலத்தில் சேர்த்து வைக்கப்பட்ட உயர்ந்த அணி களையும் பொன் நாணயங்களையும் கவர்ந்தும் சென்றான். 

 

மக்களின் எழுச்சியையும் கண்டனங்களையும் கோனேரி ராயன் செவி மடுக்கவே இல்லை. அரச பயங்கரவாதமான கோனேரி ராயனை எதிர்த்துப் போராடி மக்கள் முழக்க மிட்டனர்.

 

இதனைப் பொறுக்கமாட்டாமலும் ஊரறிய இதனைக் கண்டிக்கவும் விரும்பிய அரங்கனின் பக்தரானவரும் ஏகாங்கியுமான அழகிய மண வாளதாசர் என்பவர் இரண்டு ஜீயர்களுடன் வெள்ளைக் கோபுரம் என்னும் கிழக்குக் கோபுரம் மீது ஏறிக் கீழே விழுந்து உயிர் நீத்தனர்.

 

ஸ்ரீரங்கநாத சுவாமிக்குப் படித்தரம் ஒன்றும் நடத்தாமல்

 

மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் பொறுக்க

 

மாட்டாதேயிந்த திருக்கோபுரத்திலேறி விழுந்து இறந்த

 

காலமெடுத்த அழகிய மணவாளதாசன் ஸ்ரீகாரியம்

 

#பெரியாழ்வார்.

 

கோனேரி ராயன் காலத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் எதுவும் சரிவர நடைபெறவில்லை. வைணவ சம்பிரதாயங்கள் மீறப்பட்டன. கோவிலே களை யிழந்து போனது போல் உணர்ந்தனர்.

 

இதனால் அரங்கன் பக்தர்கள் மிகவும் அவதி யுற்றனர். இதைப் பலமுறை கோனேரி ராயன் கவனத்திற்குக் கொண்டு சென்றும் கூட ஸ்ரீரங்கநாத சுவாமிக்குப் படித்தரம் ஒன்றும் நடக்காமல் அநியாயம் நேர்ந்துவந்தது.

 

இதனால் இவ்வூரைச் சார்ந்த ஸ்ரீ காரியம் அப்பாவையங்கார் என்பவர் தெற்குக் கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிர் நீத்தார். தெற்குக் கோபுரவாசலின் கீழ்ப்புற நிலையில் அப்பாவையங்கார் உருவச்சிலையும் கல்வெட்டும் உள்ளன. இக்கல்வெட்டில்,

 

சுபமஸ்து சௌமிய வருஷம் தை மாதம் நாலாந்தேதி

 

வெள்ளிக் கிழமை நாளன்று ஸ்ரீரங்க நாத சுவாமிக்கு

 

படித்தரம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம்

 

பண்ணுகையில் குடுக்கமாட்டாதே இந்தத் திருக்கோ

 

புரத்தில் ஏறி விழுந்து இறந்த ஸ்ரீகாரியம் அப்பா

 

வையங்கார் இவருக்கு சுவாமி யெக்காளங்கள்

 

திருத்தேர் புறப்பாட்டு முதலான அதியவரிசைபிரசாதித்

 

தருளி பிரம்மமேத சமஸ்காரம் பண்ணிவித்தருளி

 

முழுப்படித்தரம் கொண்டருளினார். யிப்படி நடந்த

 

இந்த முழுப் படித்தரத்துக்கு விரோதம் பண்ணினவன்

 

ரெங்கத்துரோகியாய்ப் போகக் கடவன்

 

கி.பி. 1793-இல் மதுரை சொக்கநாதர் கோவிலை ஆக்கிரமிப்புச் செய்த ஆங்கிலப் படைப்பிரிவு திருப்பரங்குன்றத்திலும் ஊடுருவியது. கர்னல் பேயர்டு என்பவன் தலைமையிலான ஆங்கிலப் படை காயம்பட்ட வீரர்களைக் கோவிலின் உள்ளே படுக்க வைத்தது. ஒரு மருத்துவமனைபோலக் கோவிலை மாற்றி வைத்தது.

 

#தென் கொங்கு சதா சிவம்

 

இது மக்களிடையே அதிருப்தியைக் கிளப் பியது. பக்தர்கள் கோவிலுக்குள் செல்லவோ, வழிபடவோ இயலாத நிலை உருவாகி நின்றது. மக்கள் ஆவேசமாகப் போராடினர். இந்த நிகழ்ச்சிகளைத் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிகோவில் உள் கோபுரத்தில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுச் செய்திகள் காட்சியாகப் படம் பிடித்துக்காட்டுகின்ற.

 

வெள்ளைக்காரர் பாளையம் வந்து இறங்கிச்

 

சொக்க நாதர் கோவிலும் இடிச்சு பழனியாண்டவன்

 

கோவிலையும் இடித்து ஊரையும் ஒப்புக் கொண்டு

 

ஆஸ்தான மண்டபம் கைக் கொண்டு அட்சகோபுர

 

வாசல் கதவையும் வெட்டி கலியாண மண்டபத்துக்கு

 

வருகிற பக்குவத்தில் திருவிழாவும் நின்று தலமும்

 

ஊரம் தெய்வேந்திரபட்டர், குட்டிபட்டி பட்டர்

 

சிதம்பரம் பிள்ளை, விழுப்பாத ரய்யர் ஆறுகரைப்

 

பேர் உள்ளிட்டாரும் கூடி வயிராவி முத்துக் கருப்பன்

 

மகன் குட்டி வயிராவியை கோபுரத்திலேறி விழச்

 

சொல்லி அவன் விழுந்து பாளையம் வாங்கிப் போன

 

படியினாலே அவனுக்கு ரத்தகாணிக்கைப் பட்டயம்

 

எழுதிக் கொடுத்தோம்...

 

துனை நூல் 

 

கல்வெட்டுக்கலை முனைவர் பொ. இராசேந்திரன் முனைவர் சொ. சாந்தலிங்கம்

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு