நீர் மேலாண்மை

 



 

இடம் : சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி, சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம்,  

 

தற்போது கல்வெட்டு பாதுகாக்கப்படும் இடம் : திருமலை நாயக்கர் மண்டபம், மதுரை

 

காலம்  :  9ம் நூற்றாண்டு 

செய்தி :  வட்டெழுத்து (தமிழ்) கல்வெட்டுச்செய்தி : சாத்தூர் மடைக்கல்வெட்டு இவ்வூரின் பழமையை எடுத்துக்காட்டுகிறது. நின்றசீர் நெடுமாறன் காலத்தில் சாத்தூர் குளத்தில் மடைகள் அமைக்கப்பட்டு நீர் நிருவாகம் முறையாகச் செய்யப்பட்டிருந்தது. அவை காலப்போக்கில் தொடர் பராமரிப்பின்மையால் அழிவுற்றன. இதனைக் கண்ணுற்ற இருப்பைக்குடிக்கிழவன் கி.பி.825-இல் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் காலத்தில் சிதைந்த மடைகளை அகற்றிவிட்டு கல்மடைகளை அமைத்து குளத்தைச் சீர்திருத்தினான். இச்செய்தியினை சடையன்மாறனின் வட்டெழுத்துக் கல்வெட்டுடொன்று தெரிவிக்கின்றது.

 

தகவல்: தமிழக அரசுத்தொல்லியல் துறை

 

படம்: மோ.பிரசன்னா , திருநெல்வேலி தொல்லியல் கழகம்

 

 

குந்தளத்தில் பெண்ணுரிமை

 

குந்தளதேசம் என்று வழங்கப்பட்ட இன்றைய கர்ணாடகத்தில் சாளுக்யர்களும் ராஷ்ட்ர கூடர்களும் அரசகுலப் பெண்டிருக்கு வழங்கிய உரிமைகள் அலாதியானது. அவர்கள் போருக்கும் வேட்டைக்கும் நேரில் செல்வர் என்ற ஸாதாரண உரிமை கூட தமிழகத்தில் காண்பதரிது. இதைத்தவிர அவர்கள் ஸ்த்ரீ தனமாக அதாவது சீதனமாக வழங்கிய பகுதிகளுக்கு அவர்களே ஆளுனராக இருந்து ஆண்டனர்.ஆட்சி என்றால் கொடை கொடுப்பது நீதிவழங்குவது மட்டுமல்ல. போரிலும் ஈடுபட்டனர். ராஜாதிராஜனைக் கொன்ற ஆஹவமல்லனின் அத்தையான அக்காயி தேவி தனக்கான நாட்டில் கலஹம் சேரவே கிளர்ந்த சிற்றரசனை அடக்க கோட்டையை முற்றுகையிட்டு போரிட்டாள். போரில் பைரவியைப் போன்றாள் என்று கல்வெட்டு ஒன்று அவளைப் புகழ்கிறது. கன்னரதேவனின் மகள் அக்காயி தமிழகத்தின் சீயமங்கலத்துக்கு ஆளுனராக இலங்கினாள். தமிழகத்தில் சில அரசியர் தென்பட்டாலும் அரசகுலப் பெண்டிர் கோயில் கட்டுவது கொடை கொடுப்பது என்று மட்டுமே இருந்தனர். குந்தளப் பெண்களைப் போல ஆளும் வாய்ப்பு பெற்றாரில்லை. தனியாணை விட்டதெல்லாம் அரிதிலும் அரிதே.

கௌட தேசமான மேற்கு

 

வங்கத்தைச் சேர்ந்த கங்குலி

------------------------------------------------ 

பிராமணர் சுவாமி தேவருக்கு

------------------------------------------------- 

எதிரிலிச் சோழ சம்புவராயர்

----------------------------------------------- 

கொடுத்த 1,030 ஏக்கர் நிலம்

----------------------------------------------

 

கோப்பரகேசரிவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்திகள் இரண்டாம் ராஜாதிராஜ சோழ தேவரின் 5 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1171), ஈழப்படை என்ற இலங்கைப்படையானது பாண்டிய நாட்டை கைக்கொண்டு, மதுரையில் இருந்த பாண்டிய அரசன் குலசேகரன் அவர்களை துரத்திவிட்டது.

 

பின்பு மகாராஜா இரண்டாம் ராஜாதிராஜ சோழ தேவரின் தளபதிகளுடன் ஈழப்படை சண்டையிட துவங்கியது.  தொண்டி, பாசி ஆகிய இடத்தில் சண்டை நடைப்பெற்று ஈழப்படை வெற்றிப்பெற்றது.

 

சோழ மண்டலத்திலும் மற்ற நாடுகளிலும் உள்ள மக்கள் எல்லாம் பயம்கொண்டார்கள் என்பதை கேட்ட எதிரிலிச் சோழ சம்புவராயர் அவர்கள், எனக்கு இது என்ன தோஷமோ என்று விசாரித்து கேட்டறிய கௌடதேசத்து (மேற்கு வங்கம்) கங்குலி பிராமணர் சுவாமி தேவர் அவர்களின் ஸ்ரீபாதத்தை வணங்கி, இப்படி புகுந்த ஈழப்படை என்பது சாலப் பாவ கர்மாக்கள் என்று சொன்னார்கள்.  

 

ஈழப்படை சோழ நாட்டின் எல்லையிலே புகுந்தால், ஸ்ரீமகாதேவர் கோயிலான சிவன் கோயில்கள் உள்ளிட்ட மற்ற தெய்வங்களின் கோயில்களுக்கும், பிராமணர்களுக்கும், நாட்டிற்கும் தீங்கு உண்டாகும்.  இதற்கு பரிகாரமாக :-

 

''ஜபஹோமார்ச் சநங்களாலெப் படியாலும் ஆபூஷ்ட்ரமதம் பண்ணியருளவேணும்''

 

என்று எதிரிலிச் சோழ சம்புவராயர் அவர்கள் விண்ணப்பம் செய்யசுவாமி தேவர் அவர்கள் பூஜை செய்கிறார்.  ஈழப்படை என்பது சாலப் பாவகர்மாக்களையும் துர்ஜனங்களையும் கொண்டது.  இவர்கள் இராமேஸ்வரத்தில் உள்ள இறைவனின் கோயிலை பூட்டி புஜை நடக்கவிடாமல் செய்து, அக்கோயிலில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்தனர்.  சிவ துரோகிகளான இவர்களை தடுத்தோம், அவர்கள் சண்டையிலே தோல்வியடைந்து ஓடும்படிக்கு செய்தோம்.

 

சிவ துரோகிகளான இலங்கை படையினரை தடுத்து, அவர்கள் சண்டையிலே தோல்வியடைந்து ஓடும்படிக்கும், சோழர் படை அதிர்ஷ்டத்தாலே சண்டையில் வெற்றிப்பெறவேண்டும் என்று கருதி இருபத்தெட்டு நாள் அகோரபூஜை செய்தார் சுவாமி தேவர் அவர்கள்.

 

இந்த பூஜைக்கு பின்பு எதிரிலிச் சோழ சம்புவராயரின் மகன்  பெருமாள் நம்பி பல்லவராயர் அவர்களிடம் இருந்து தூதுவர்கள் சண்டை முடிவுப்பெற்ற செய்தியை சொல்லும் ஓலையை கொண்டுவந்து கொடுத்தார்கள். 

 

அந்த ஓலைச் செய்தியில், ''ஜயதர தண்ட நாயகன்", "லங்காபுரி தண்ட நாயகன்" உள்ளிட்ட இலங்கைப்படை தளபதிகளும் மற்றும் அவர்களின் படைகளும் அடக்கப்பட்டு ஓடிப்போனார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

 

எதிரிலிச் சோழ சம்புவராயர் அவர்கள் அந்த ஓலையைக் கொண்டு சென்று சுவாமி தேவர் அவர்களின் பாதத்திலே வைத்து, தேவராகிய நீங்கள் செய்த பூஜையினாலே அதிர்ஷ்டம் ஏற்பட்டு எங்களுக்கு வெற்றிக் கிடைத்தது என்று சொல்லி, தேவர் அவர்களுக்கு ஸ்ரீபாத காணிக்கையாக நான் தருவேன் என்று சொன்னார். அதற்கு சுவாமி தேவர் அவர்கள் :-

 

''நீர் நமக்கு முன்பேதேநும் குறைவாகச் செய்த துண்டோ''

 

என்று சொல்லிவிட்டுஅவசியமாக எனக்கு ஏதேனும் தர வேண்டும் என்று இருந்தால் ஆர்ப்பாக்கம் என்ற ஊரை தானமாக கொடுத்து அதை உறுதிப்படுத்தும் விதமாக செப்புபட்டையம் வழங்கி கல்வெட்டிலும் பொறிக்கவேண்டும் என்று அன்போடு சொன்னவுடன்,

 

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து மாகாறல் நாட்டு ஆர்ப்பாக்கம் என்ற ஊரில் இருந்த புஞ்சை நஞ்சை விளைநிலம் 167 வேலியும், எரியும், நத்தமும், குளமும், கிணறும், மரமும் மற்றும் அணைத்து வரிகளையும் நீக்கி எந்தவித வரியையும் செலுத்தவேண்டிய தேவையில்லாமல் ஏகபோக உரிமையாக

 

கௌடதேசத்து தக்ஷினராடத்து கங்கோலி ஸார்வண்ண கோத்ர மகா மகேசுவர சுருதில்மிருதி சந்தித கார்கஸ் தந்மாஸ்ரித உமாபதி தேவரான ஞானசிவ தேவர்க்கு நீர்வார்த்து சூரிய சந்திரன் உள்ளவரையும் வழிவழியாக அனுபவிக்கவேண்டும் என்று சொல்லி கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொடுத்தார் சோழ சாம்ராஜ்யத்தின் தலைமைத் தளபதி எதிரிலிச் சோழ சம்புவராயர் அவர்கள்.

 

கௌட தேசமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கங்குலி பிராமணர் சுவாமி தேவர் அவர்களுக்கு, சோழ நாட்டின் தலைமைத் தளபதி எதிரிலிச் சோழ சம்புவராயர் அவர்கள் 167 வேலி நிலத்தை தனமாக கொடுத்தார்கள் என்பதாகும்.  அதாவது 1,030 ஏக்கர் நிலத்தை கங்குலி பிராமணர் சுவாமி தேவருக்கு எதிரிலிச் சோழ சம்புவராயர் அவர்கள் தனமாக கொடுத்தார்கள் என்பதாகும்.

 

 

காஞ்சி தலைவர்களான

 

அனுமக்கொடி வேந்தர்கள்

-------------------------------------------- 

 

காஞ்சி தலைவர்கள் என்ற கச்சியராயர்களான காடவராயர்கள், சோழப் பேரரசு என்ற பெரும் மாளிகையை தாங்கி நின்ற மிக முக்கிய தூண்களாக விளங்கிய அரசமரபினர்கள் ஆவர். இவர்கள் சோழப் பேரரசர்களுக்கு மிக மிக நெருங்கிய உறவினர்கள் ஆவர். 

 

சோழப் பெருவேந்தன் முதலாம் ராஜராஜ சோழனின் முதன்மை பட்டத்தரசி "தந்தி சக்தி விடங்கியாக லோக மாதேவியார்", முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசி "காடவன் மாதேவியார்" ஆகியோர் கச்சியராயர்களான காடவராயர் மரபினில் தோன்றியவர்கள் ஆவர்.  பட்டத்தரசியார் "தியாகவல்லி", மூன்றாம் ராஜேந்திர சோழனின் பட்டத்தரசியார் ஆகியோர் இம்மரபினில் தோன்றியவர்கள் ஆவர்.  

 

பேணுசெந்தமிழில் வாழப் பிறந்த காடவன், தமிழ்நாடு காத்த பெருமான், சகலபுவன சக்கரவர்த்திகள், பல்லவ குல பாரிஜாதன், காடவ குல சூடாமணி, மல்லை வேந்தன், மல்லாபுரி வல்லபன், காஞ்சி நாயகன் என்று போற்றப்பட்ட காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் அவர்கள், சோழப் பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகள் உடையாழ்வார் அவர்களை தில்லை நடராஜர் கோயிலில்  திருமணம் செய்ததை தஞ்சை - கரந்தை கல்வெட்டு தெரிவிக்கிறது என்பதாகும்.  

 

கலைகளை வளர்த்த இவர்கள் ஏழிசை மோகனன், பரதம் வல்லான் என்று போற்றப்பட்டனர்.  உலகப் புகழ்ப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கிழக்கு மற்றும் தெற்கு கோபுரத்தை இவர்கள் அமைத்தனர்.       

 

அனுமக்கொடி வேந்தர்களான இவர்கள் விருதாச்சலம் பரூர் கூற்றத்தை  சோழர் காலத்தில் அரசாட்சி செய்து வந்தனர்.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் இவர்களது தலைமையிடமாகும். 

 

சோழர் அரசாட்சி முடிவுற்றபிறகு இவர்கள் பாண்டியர் மற்றும் சம்புவராயர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்து விருத்தாச்சலம் பரூர் கூற்றத்தை அரசாட்சி செய்துவந்தனர்.  பிறகு விஜயநகர பேரரசிற்கு குறுநிலமன்னர்களாக/பாளையக்காரர்களாக இருந்தனர்.  அதன்பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் விருத்தாச்சலம் முகாசா-பரூர் ஜமீன்களாக இருந்துவந்தனர்.  

 

சோழர் காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெற்ற "இருங்கோளப்பாடி பருவூர் கூற்றத்தை" அரசாட்சி செய்த காஞ்சி தலைவர்களான கச்சியராயர்கள், சோழர்களின் அரசாட்சி முடிவுற்றதும் (கி.பி. 1279), தங்களை "பருவூர் கச்சியராயர்கள்" என்று கல்வெட்டுகளில் குறிப்பிட்டனர்.  விருத்தாசலம் அருகே உள்ள பருவூர், முகாசாபருவூர் என்று வழங்கப்படுகிறது.

 

"பருவூர் உடையார் தேவர் கச்சியராயர் பிள்ளைகளில் காளத்திநாதர்"

(Mara Varman Sri Vallaba Pandiyan, 1313 A.D, Elavanasur), (A.R.E. No.136 of 1906).

 

"இருங்கோளப்பாடி நாட்டுப் பருவூர்க் காணி உடைய தேறையராய...."

(Raja Narayana Sambuvarayar, Tiruvennainallur), (A.R.E. No.457 of 1921).

 

"இருங்கோளப்பாடி நாட்டு பருவூருடையான் தேறையராயன் பொன் வழங்கினான் மகன் கட்டி தேவனான சுந்தரபாண்டிய கச்சியராயன்"

(Mara Varman Sundara Pandiyan, 1360 A.D, Virudhachalam), (A.R.E. No.89 of 1918).

 

"பருவூர் கச்சியராயர் பிள்ளைகளில் காளத்திநாதன்"

(Kampanna Udaiyar, 1372 A.D, Elavanasur, Kallakurichi Taluk), (A.R.E. No.162 of 1906).       

 

"பருவூருடையான் தேறையராயன் வீரசேகர முடையானான கச்சியராயன்" (Kampanna Udaiyar, 1373 A.D, Virudhachalam), (A.R.E. No.90 of 1918).

 

"நயினார் கச்சியராயர்" 

(Bukka-II, 1398 A.D, Virudhachalam), (A.R.E. No.100 of 1934-35).

 

"பெருவுந்திரியனார் கச்சியராயர்"  

(Devarayar-II, 1445 A.D, Virudhachalam), (A.R.E. No.68 of 1918).

 

"தொண்டைமானார் கச்சிராயர் கச்சிராயரும்"

(Sri Virappradapa Vijayaraya Maharayar, 1446 A.D, Elavanasur), (A.R.E. No.161 of 1906), ("வழுதிலம்பட்டுச் சாவடி நாடும் கரணிக்கரும் பரிவாரமும் தொண்டைமானார் கச்சிராயர் கச்சிராயரும் கூடி இருந்து")

 

"கச்சியராயர்"

(Viruppaksha Deva Maharayar, 1485 A.D, Idaiyar, Tirukkoyilur Taluk), (A.R.E. No.291 of 1928-29).  

 

"பிரத்தியக்க்ஷநாத கச்சியராயர்"

(Virudhachalam, 1504 A.D), (A.R.E. No.70 of 1918).

 

"பிரத்தியக்க்ஷநாத கச்சியராயர் மகன் இம்மடி பருவூர் கச்சியராயர்"

(Bhujabaladeva Maharayar, Virudhachalam), (A.R.E. No.275 of 1928-29).

 

"நயினார் கச்சியராயர்"

(Sri Achchutha Deva Maharayar, 1531 A.D, Elavanasur, Kallakurichi Taluk), (A.R.E. No.175 of 1906).

 

"நயினார் கச்சியராயர்"

(Sri Ranga Deva Maharayar 1572 - 1586 A.D, Idaiyar, Tirukkoyilur Taluk), (A.R.E. No.293 of 1928-29).

 

"பருவூர் கச்சிராயனார்"  

(Vaideeswaran Koil copper plate, 1595 A.D)

 

"கச்சி இராயர்" 

(Villavanallur copper plate, 1641 A.D)

 

"முத்துசாமி கச்சிராயர்"

(கி.பி.1715, பெஸ்கி பாதிரியார் பற்றி எழுதப்பெற்ற நூலில் குறிப்பிடப்படுகிறார்).

 

"ஸ்ரீ பொன்னம்பலக் கச்சிராயர்"

(பெஸ்கி பாதிரியார் எழுதிய தேம்பாவணி என்னும் நூல் இவர் தலைமையில் அரங்கேறியது).

      

"பருவூர் ராச ஸ்ரீ பொன்னம்பலக் கச்சிராயர் குமாரர் முத்துக்கிருஷ்ணப்ப கச்சிராயர் தர்மம்" 

(Siva temple, Mugasaparur, 1750 A.D), (கல்வெட்டு காலாண்டிதழ் - 40, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை). 

 

"பருவூர் ராச ஸ்ரீ முத்து கிருஷ்ணப்ப கச்சிராயர் தாயார் பெரியம்மை அம்மாளவர்கள் தருமம்"  (Perumal temple, Mugasapaur, 1750 A.D), (கல்வெட்டு காலாண்டிதழ் - 40, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை).

 

"முகாசாபரூர் பா.வா.ஜா. வீரசேகர முத்துகிருஷ்ண கச்சிராய துரை"

(இவரது மகளை பிச்சாவரம் சோழ அரசர் "மகா ராஜ ராஜ ஸ்ரீ சாமிதுரை சூரப்ப சோழனார்" அவர்கள் 1908 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள்).

 

"வீரசேகர பொன்னம்பலக் கச்சிராயர்"

(கி.பி.1998 இல் காலமான இவருக்கு ஏழு மகன்கள்)

 

"மகா ராஜ ராஜ ஸ்ரீ வீரசேகர பொன்னம்பல பாலதண்டாயுத கச்சிராயர்"  (காலமானார்).

 

இந்த புகழ்மிகு மரபினில் தோன்றிய "மஹா ராஜராஜ ஸ்ரீ வீரசேகர பொன்னம்பல பாலதண்டாயுத கச்சியராயர்" அவர்கள் மறைந்தார். அவருடைய மறைவானது வன்னிய குல க்ஷத்திரிய சமூகத்திற்கு பேரிழப்பாகும்.  சிவலோகப் பதவியடைந்த அவரது ஆன்மா சாந்தியடைய எம்பெருமான் தில்லை ஆடல்வல்லான் அவர்களை பிராத்தனை செய்வோமாக.

 


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி