காஞ்சிபுரத்து சித்திரைத் திருவிழா
காலம்.. கி.பி.986.
காஞ்சிபுரம் அரண்மனையில் உள்ள
சித்திரக்கூடத்தில் அமர்ந்து அரசாணையை வெளியிடுகிறார்
உத்தமச்சோழர்.
கச்சிப்பேடு என்றழைக்கப்படும் காஞ்சி
மாநகரில் எழுந்தருளிய ஊரகத்து தேவர் என்றழைக்கப்படும் உலகளந்தப் பெருமாள் கோவில்.
இக்கோவிலுக்கான நிவந்தங்களின் புதிய ஏற்பாடுகளை இச்செப்பேடு பதிவு செய்கிறது.
நிவந்தங்களின் ஒரு பகுதியாக
இக்கோவிலில் நடந்த சித்திரைத் திருவிழா பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.
சித்திரைத் திருவிழாவானது ஏழு நாட்கள்
நடைபெற்றது. இந்த ஏழு நாட்களுக்கான மொத்தச் செலவுகளையும் நான்குபேர் மட்டுமே
ஏற்றுள்ளனர்.
விழாவிற்கான மொத்தச்செலவு
30 கழஞ்சு பொன்..
வருடம் தோரும் இந்த 30 கழஞ்சு வட்டியாக
வரும்படி செய்யத் தேவையான முதலீடு 200 கழஞ்சு பொன். இந்த 200 கழஞ்சு பொன்னை
நான்குபேர் நிவந்தமாக அளித்தனர்.
கம்புழான் பாடியார் என்பவர் 73 - 1/2 கழஞ்சுபொன்.
அதிமானபாடியார் என்பவர் 73- 1/2 கழஞ்சு பொன்.
கஞ்சகப்பாடியார் என்பவர் 35 கழஞ்சு.
ஏற்றுவழிச்சேரியார் என்பவர் 18 கழஞ்சு.
மொத்தம் 200 கழஞ்சு பொன். இதன்
மூலம் கிடைக்கும் வட்டி 30 கழஞ்சு.. இதைக்கொண்டு வருடாவருடம் சித்திரை திருவிழா
வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது...
தீபத்திற்கு எண்ணை, சுவாமிக்கு மலர்
மாலை.. பூஜை ஏற்பாடுகள்..
சுவாமி ஊர்வலம் வரும் சிவிகை..
இசைக்கலைஞர்களாம் உவச்சர்கள் .. நடனமாடும் தேவரடியார்கள்..
அமுது படையல்..
இந்நிகழ்வுகளுக்கான செலவு 25 கழஞ்சு பொன்.
மீதம் உள்ள 5 கழஞ்சு பொன்
கண்டழிவு செவுக்கு என்கிறது செப்பேடு. அது என்ன கண்டழிவு செலவு..?
எதிர்பாரா செலவு..
தற்போது Miscellaneous என்று சொல்கிறோமே..
இதன் தமிழாக்கம்தான் கண்டழிவு..
இசைக்கலைஞர்களை உவச்சர்கள் என்று
செப்பேடு கூறுகிறது.
என்னென்ன இசைக்கலைஞர்கள் என்ற
விபரத்தையும் இதே செப்பேடு பதிவுசெய்கிறது.
தலைப்பறை, மத்தளி, கறடிகை, தாளம், சேகண்டிகை, காளம், கைமணி...
ஆகிய இசைக்கருவிகளை இசைக்கும்
ஒன்பதுபேர் இருந்துள்ளனர்.
மிகச் சிறப்பாக இச் சித்திரை திருவிழா
நடைபெற்றுள்ளது..
ஏழு நாட்களும் வெகு விமரிசையாக
நடைபெற்றது..
திருவிழாவுக்கான மொத்தசெலவுக்கான
முதலீட்டுத்தொகை
200 கழஞ்சு பொன்.
( அக்காலத்தில் இது மிக மிகப் பெரியதொகை) ..
இந்த 200 கழஞ்சு பொன்னைத் தானமாகக் கொடுத்த
அந்த நால்வர்...
1. கம்புழான் பாடியார்.
2.அதிமானப் பாடியார்.
3.கஞ்சகப்பாடியார்.
4.ஏற்றுவழிச்சேரியார்.
இவர்கள் நால்வரும்
திருவிழாவின்போது விளக்கு பிடித்தும்
கொடி எடுத்தும் வந்தார்கள் என்று செப்பேட்டில் பதிவாகியுள்ளது.
என்னவொறு அர்ப்பணிப்பு...
அன்புடன்
மா.மாரிராஜன்..
Refrence ..
சோழர் செப்பேடுகள்.
முனைவர்
க. சங்கரநாரயணன்.
South indian
inscription
Vol 3. No 128.
புகைப்படம்...
தமிழிணையம் தகவலாற்றுப்படை
இணையப்பக்கம்..
மற்றும்..
வேலுதரன் இணையப்பக்கம்..
இச்செப்பேடு தற்போது சென்னை
அருங்காட்சியகத்தில் உள்ளது.
Comments
Post a Comment