இரண்டாம் புலகேசியின் இனிய உபதேசம்
சாளுக்ய
மன்னன் இரண்டாம் புலகேசி இணையற்ற வீரன். ஹர்ஷ வர்த்தன னையும் வென்கண்டவன்.
தமிழகத்திலும் மஹேந்த்ர பல்லவனை வென்று காஞ்சியைத் தாண்டி காவேரி வரைப் போந்தவன்.
அவன் தானமளித்த பின்னர் வழங்கிய செப்பேட்டின் இறுதியில் அவன் கூறுவதைப்
பாருங்கள்..
யதோஸ்மத்³வம்ʼஶ்யைரன்யைர்வ்வாகா³மி-ந்ருʼபதி போ⁴க³பதிபி⁴ர் நலவேணுகத³லீஸாரம்ʼ ஸம்ஸாரமுபலப்⁴ய உத³தி⁴ஜலவீசிசஞ்சலாம்ʼஶ்ச விஷயான்னவனித⁴ரஶிக²ரகடகதடலஸிதஸலிலரயக³த்வரஞ்ச ஜீவிதமவக³ம்ய மஹாபூ⁴த பரமாணுஸ்தா²ஸு ச மஹத்ப²லம்ʼ ஶரச்சந்த்³ரகிரணத⁴வலம்ʼ யஶோ நிரூப்யாஸ்மத்³ தா³யோனுமந்தவ்ய:
பரிபாலயிதவ்யஶ்ச|
நான்
கொடுத்த இந்த தானத்தை என் வம்சத்தில் வந்தவரோ பிறரோ மன்னர்கள் காப்பாற்ற வேண்டும்.
ஏனென்றால் இந்த உலகமோ புல், மூங்கில், வாழை இவற்றைப் போன்று
வலிமையற்றது. உலகத்துப் பொருட்களோ கடலின் அலைகளைப் போல நிலையற்றவை. வாழ்க்கையோ
மலையின் முகட்டுச்சியின் கூர்மையில் சிறிது நேரமே நிற்கும் மழைத்துளியைப் போன்றது.
ஆனால் மஹாபூதங்களிலும் பரமாணுவிலும் கூட பெரும் வலிமையை அளிப்பது சரத் காலத்துச்
சந்திரனையொத்த புகழே. ஆகவே புகழுக்காக என் தானத்தைக் காப்பாற்றுங்கள்.. பிறர் சொத்தை
கவராதீர்கள்..
இது இனிய உபதேசம்தானே..
Comments
Post a Comment