வெண்பாவூர் கல்வெட்டு

 



சுவேத நதியின் வட கரையில் அமைந்த ஊர் வடகரை எனவும், தென்கரையில் அமைந்த ஊர் வெண்பாவூர் எனவும் அழைக்கப்படுகிறது. வெண்பாவூர் பெருமாள் கோயிலை வரதராஜபெருமாள் கோயில் என இப்போது அழைக்கிறார்கள். ஆனால் கல்வெட்டு மலைமண்டல பெருமாள் கோயில் என கூறுகிறது. இந்த கோயிலின் முன்புறம் 5 வரிகளில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதன் வாசகம்

1.ஸ்வஸ்திஸ்ரீ சித்தி

2. ரமேழி மலை மண்டல

3. த் தேசி விண்ணகர்

4. தாயிலு நல்ல பெ

5. ருமாள்.

இது 3 ஆம் இராசராசன் காலத்தில் தாயினும் நல்ல பெருமாள் என்ற வாணகோவரையன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும். 

இல. தியாகராஜன் ஐயா இது பற்றிய விளக்கத்தில்

சோழர் காலத்தில் விவசாய பெருங்குடிகள் ஒன்றிணைந்து சித்திரமேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இவர்கள் பொருள் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டனர். விவசாய வாணிக குழுக்கள் வெம்பார் நகரத்தில் தங்கி வணிகம் செய்தனர் என குறிப்பிடுகிறார்.

இக்கல்வெட்டின் மேற்பகுதியில் 

குத்து விளக்கு,கும்பம்,ஏர்கலப்பை,நகை செய்ய உரசும் கல் அல்லது உடுக்கை, குத்து விளக்கு, வில் போன்ற குறியீடுகள் உள்ளன. 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு