நன்னிலம் கல்வெட்டு

 



நன்னிலம் வட்டம் இஞ்சிக்குடி ஊரில் உள்ள பார்வதீஸ்வரர் கோவிலின் மகாமண்டபம் வலப்புறத் தூணில் இரண்டாம் இராசேந்திர சோழரின் ய ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுள்ளது. அக்கல்வெட்டானது சோழப்படையைச் சேர்ந்த சங்கரன் பெரியானான கலியாணபுரங் கொண்ட சோழ பிரம்மாதிராயனும், அவர் மகன் இராஜாதிராஜனும், அரையன் திருச்சிற்றம்பல முடையனும், சங்கரன் இராமனான  இராஜமஹேந்திரன் ஆகியோர் பேராற்றங்கரையில் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனோடு போரிடும்போது எதிரிப்படையில் உள்ள யானையின் முகத்தில் தங்கள் குதிரையைப் பாய்ச்சி போரிட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது  

"ஆகோமல்

 

 லனோடு பொரு

 

 த பூசலில் ஆனை

 

 முகத்தில் குதி

 

 ரை பாச்சியிட்ட"

 

எதிரே இருப்பது யானையாயினும் குதிரையைக் கொண்டு போரிட்டு இறந்தது வரலாற்றின் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. 

 

தகவல் : Marirajan Rajan 

 

இஞ்சிக்குடி

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு