பஞ்ச வ்ருஷ்ணிகள்
மதுராவின் அருகிலுள்ள மோரா என்னுமிடத்தில் கிடைத்த கற்பலகைக் கல்வெட்டு பஞ்ச வ்ருஷ்ணி வீரர்களுக்கு சோண்டாஸன் என்னும் சக அரசனின் காலத்தில் படிமங்கள் எடுப்பிக்கப்பட்டமை குறிப்பிடப்படுகிறது. வாஸுதேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ன அனிருத்த ஸாம்பர்களுக்காக இது எடுக்கப்பெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பொயு 15 ஐச் சேர்ந்த அதாவது முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டின் அருகில் ஒருபடிமத்தின் உடற்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. ஹைதராபாத் அருங்காட்சியகத்தில் நரஸிம்ஹரோடு ஐந்துவீரர்களுமுள்ள கற்பலகை கிடைத்துள்ளது. இது ஐந்தாம் நூற்றாண்டு வரை இந்த வழிபாடு தொடர்ந்து வந்தமையைக் காட்டுகிறது.
Comments
Post a Comment