முதல் வணிக நெடுஞ்சாலை
பாணினியின் வடமொழி இலக்கண நூல் பொயுமு ஐந்தைச் சேர்ந்தது. இந்த நூலின் 5 ஆம் அத்தியாயம் முதல் மாதத்தின் 77 ஆம் நூற்பா உத்தராபதம் என்னும் நெடுஞ்சாலையைக் குறிப்பிடுகிறது. இந்த நெடுஞ்சாலை பாகிஸ்தானிலுள்ள தக்ஷசிலத்திலிருந்து இன்றைய பிஹாரிலுள்ள ராஜகிர் என்று வழங்கப்படும் ராஜக்ருஹம் வரையில் இருந்தது. கௌஸாம்பி, வாரணாஸி வழியாகச் சென்றது. பிறகு மேற்கில் புஷ்கலாவதி வழியாக ஆஃப்கானிஸ்தான் வரையிலும் கிழக்கில் பாடலிபுத்ரம் வரையிலுமாக நீண்டது. பொயுமு ஐந்திற்கும் முற்பட்டதான இந்த நெடுஞ்சாலையே நமது நாட்டின் மிகப்பழம் நெடுஞ்சாலையாகக் கருதப் படுகிறது.
Comments
Post a Comment