ஆனைமங்கலம் நடுகல் கல்வெட்டு
ஆண்டு :-10 ஆம் நூற்றாண்டு (911)
அரசு :-முதலாம் பராந்தக சோழர்
கல்வெட்டு பாடம் :
கோப்பர கே
சரி பன்மக்
கு யாண்டு நா
ன்காவது வே
ட்டுவதி அரை
யர் வாணகோ
வரையர் ஆள
ஆனைமங்கலம்மு டை
ய கள்ளன் தாழ ன் மேல்க் கோவல்
லூர் நாட்டு அளவி
ப்பாடி தொறு மீட்டு ப
ட்டான் மன்றாடி கல்
விளக்கம்: முதற் பராந்தகனின் 4 ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி 911) வேட்டுவதி அரையராக வாணகோவரையர் ஆள ஆனைமங்கலத்தின் காவலனாக தாழன் மேற்கு கோவலூர் நாட்டு அளவிப்பாடி ஊரின் கால்நடைகளை பகைவரிடம் இருந்து மீட்டு வீரச் சாவடைந்தான். அதற்கு அவ்வூரின் இடையன் (மன்றாடி) நினைவுக் கல் நாட்டுவித்தான்.
கல் என்ற திரட்சிக் கருத்து அசையாது, பெயராது காவல் காக்கும் கருத்தை பிறக்குவித்தது கல் > கள் > கட். கள் > கள்ளன் = காவலன். இதுவே பின்னாளில் தொழில் பெயரில் அமைத்த சாதியையும் குறித்து. ஆனால் தவறாக இது களவு செய்பவர், கொள்ளையிடுபவர் என்ற கருத்தால் காவல் தொழிலை மறைத்து விட்டது. "பேறகடை களிலும்" என்ற தொகரப்பள்ளி நடுகல் கல்வெட்டு சொல்லாட்சி இந்த புதிரை விடுவித்தது.
கன்னட வாணர்கள் மெல்ல மெல்ல தமிழ் அரசுகளை கைப்பற்றி ஆளத் தொடங்கியது இக்கல்வெட்டு மூலம் மெய்யாகிறது. இப்படித்தான் மலையமான்கள் ஆட்சியை வாணர் கைப்பற்றினர் போலும்???
கோவில் மற்றும் , ’3ា52២ች ๓ ይችলল সলকনতক Bம கிபி911ம் ஆண்டு முதலாம் பராந்தகன் காலத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட ஆநிரைகளை மீட்க சென்ற ஆனைமங்கலம் உடைய கள்ளன் தாழன் என்பவன் உயிர்நீத்த நடுகல்.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
Comments
Post a Comment