பேரரசி தண்டிமஹாதேவியின் ஆணை

 



     கலிங்கத்தை ஆண்ட வம்சங்களில் ஒன்று பௌம கர வம்சம். இந்த வம்சத்தின் சிறப்பு அதிக அளவிலான பெண்ணரசியர் கோலோச்சியமை. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தண்டிமஹாதேவியென்பாள் அரசு செலுத்தினாள். அவளுடைய சாந்திக்ராமச் செப்பேடு எழிலான வடமொழிச் செய்யுட்களைக் கொண்டது. அவற்றுள் ஒன்று


தஸ்யா꞉ ப்ரதாப-நத-து³ர்மத³-ஶத்ரு-பூ⁴ப
நேத்ராம்பு³-தௌ⁴த-நவ-யாவக-மண்ட³னானி.
பாதா³ம்பு³ஜ-த்³யுதி꞉ அனந்தரமன்வரஞ்ஜி
மஞ்ஜீர-லக்³ன-குருவிந்த³-த³லோரு-பா⁴ஸா..

அவளுடைய வலிமையால் வணங்கி நின்ற மதம் கொண்ட எதிரி மன்னர்களின் கண்ணீரால் துடைக்கப்பட்ட பாதங்களில் பூசப்பெற்ற புது செம்பஞ்சுக் குழம்பால் பொலிவுற்ற பாதத்தாமரைகள் சிலம்பில் பொருத்தப்பட்ட புஷ்பராகங்களின் ஒளியினால் மேலும் அழகுற்றன. 

இவ்விதம் அவள் அழகையும் வீரத்தையும் விளக்கும் செப்பேடு பரமபட்டாரிகா மஹாராஜாதிராஜபரமேச்வரியான அவள் தானம் வழங்கியதைத் தெரிவிக்கிறது. இது குறிப்பிடும் தாண்டபாசிகன் என்னும் பதவி இன்றைய director general of police என்பதோடு ஒத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலச்சினையில் ஸ்ரீமத்தண்டிமஹாதேவி என்று பொறிக்கப் பெற்றுள்ளது. 
பரமமாஹேச்வரியான இவள் சைவ ஸமயக்தைச் சார்ந்தவள்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி