எல்லா ஜாதியினரும் திருவிளக்கு
திருக்கடவூர் அம்ருதகடேச்வரர் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்று மூன்றாம் ராஜராஜனின் காலத்தைச் சேர்ந்தது. 1233-ஐச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு கோயிலின் தேவதானமான எருக்காட்டுச்சேரியில் மணற்குன்று கல்லி திருத்தி திருவிக்கு எரிய வருமானம் வருமாறு செய்தளித்தோரின் பட்டியலைத் தருகிறது. பல ஜாதியரும் வர்க்கத்தவரும் கலந்த இப்பட்டியலிலிருந்து சில எடுத்துக்காட்டுக்கள்
1.பெருமானம்பிரான பல்லவராயர் திருவிளக்கு
2. லாடராயர் திருவிளக்கு
3. ப்ராஹ்மணி நமசிவாயத்தம்மை திருவிளக்கு
4. வெள்ளாட்டி உமைநங்கை திருவிளக்கு
6. இடையன் அளநாட்டுக்கோன் திருவிளக்கு
7. நாவிதன் நம்பிக்கடியான் திருவிளக்கு
8. வியாபாரி பரதேசி திருவிளக்கு
9. நம்பிராட்டியார் அவனிமாதேவியார் திருவிளக்கு
10 சிவப்ராஹ்மணர் திருவிளக்கு
இப்படி எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் பேரரசியும் சிற்றரசரும் படைத்தலைவர்களும் விளக்குக்கு தானமிட்டிருந்தாலும் பெயர்களை எழுதுவதில் உயர்வு தாழ்வு ஏதுமில்லை. பேரரசியின் பெயர் ஏறத்தாழ இறுதியில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment