குந்தளத்தில் பெண்ணுரிமை

 



    குந்தளதேசம் என்று வழங்கப்பட்ட இன்றைய கர்ணாடகத்தில் சாளுக்யர்களும் ராஷ்ட்ர கூடர்களும் அரசகுலப் பெண்டிருக்கு வழங்கிய உரிமைகள் அலாதியானது. அவர்கள் போருக்கும் வேட்டைக்கும் நேரில் செல்வர் என்ற ஸாதாரண உரிமை கூட தமிழகத்தில் காண்பதரிது. இதைத்தவிர அவர்கள் ஸ்த்ரீ தனமாக அதாவது சீதனமாக வழங்கிய பகுதிகளுக்கு அவர்களே ஆளுனராக இருந்து ஆண்டனர்.ஆட்சி என்றால் கொடை கொடுப்பது நீதிவழங்குவது மட்டுமல்ல. போரிலும் ஈடுபட்டனர். ராஜாதிராஜனைக் கொன்ற ஆஹவமல்லனின் அத்தையான அக்காயி தேவி தனக்கான நாட்டில் கலஹம் சேரவே கிளர்ந்த சிற்றரசனை அடக்க கோட்டையை முற்றுகையிட்டு போரிட்டாள். போரில் பைரவியைப் போன்றாள் என்று கல்வெட்டு ஒன்று அவளைப் புகழ்கிறது. கன்னரதேவனின் மகள் அக்காயி தமிழகத்தின் சீயமங்கலத்துக்கு ஆளுனராக இலங்கினாள். தமிழகத்தில் சில அரசியர் தென்பட்டாலும் அரசகுலப் பெண்டிர் கோயில் கட்டுவது கொடை கொடுப்பது என்று மட்டுமே இருந்தனர். குந்தளப் பெண்களைப் போல ஆளும் வாய்ப்பு பெற்றாரில்லை. தனியாணை விட்டதெல்லாம் அரிதிலும் அரிதே.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு