காச்மீரதேசத்து ஆர்யன்
கிருஷ்ணகிரி அருதிலுள்ள துக்கோஜினஹள்ளியிலுள்ள கல்வெட்டு ஒன்று காச்மீர தேசத்தைச் சேர்ந்த ஆத்ரேய கோத்ரனும் திருவேகம்பமுடையார் மகனுமான பூவாண்டையானான அரசகளாதிச்ச பிரமராயன் சிங்கபெருமானுக்கு நந்தவனப்பேறாக நிலக்கொடை அளித்த தகவலைத் தருகிறது.
பூவாண்டையான் என்ற பெயரும் திருவேகம்பமுடையான் என்ற தந்தை பெயரும் அவர்கள் பலதலைமுறைகளுக்கு முன்னமேயே தமிழகத்தில் குடியிருந்தமையைக் குறிப்பிடுகிறதே. ப்ரஹ்மராயன் என்று அரசதிகாரியாக விளங்கியமையும் பெறப்படுகிறது.
Comments
Post a Comment