ஜ்ஞான காண்டம்

 



வேதத்திற்கு நான்கு பகுதிகள் உள. ஸம்ஹிதா, ப்ராஹ்மணம், ஆரண்யகம் மற்றும் உபநிஷத். இவற்றில் முதல் மூன்று பகுதிகளும் யாகம் முதலிய கர்மாக்களை விளக்குவதால் அவற்றைக் கர்மகாண்டம் என றும் இறுதிப்பகுதியான உபநிஷத் ஜ்ஞானமாகிய மெய்யியலைக் குறிப்பிடுவதால் ஜ்ஞானகாண்டம் என்றும் வழங்கப்பெறும். உபநிஷத்துக்கள் வேதத்தின் இறுதிப்பகுதியாகையால் வேதாந்தம் என்றும் வழங்கப்பெறும்.

பல்லவமல்லனின் கசாக்குடி செப்பேடு தானம் பெற்ற அந்தணரான.ஜ்யேஷ்டபாத ஸோமயாஜியின் தகுதிகளாகக் குறிப்பிடுவனவற்றில் சில

கல்பவ்யாகரணஜ்யோதிஷஶிக்ஷாச²ந்தோ³விசிதிஷட³ங்க³ஶம்ஸிதஸ்வாத்⁴யாயாத்⁴யயனாய பத³த⁴ர்மவாக்யத⁴ர்மவஸ்துத⁴ர்மவிதே³ ஶ்ருதிஸ்ம்ருதிரஸாயனபானாய கர்மகாண்ட³-ஜ்ஞானகாண்ட³-பண்டி³தாய லோகயுக்திகலாகௌஶலபேஶலாய காவ்யநாடகாக்²யாயிகேதிஹாஸபுராணபரிணதாய கிம் ப³ஹுனா ஸர்வஜ்ஞானவிஜ்ஞானநிஷ்ணாதாய

கல்பம், வ்யாகரணம், ஜ்யோதிஷம், சிக்ஷா, சந்தோவிசிதி ஆகிய ஆறங்கங்களோடு திகழும் வேதத்தின் கரைகண்டவரும் வ்யாகரண சாஸ்த்ரம், மீமாம்ஸா சாஸ்த்ரம், ந்யாய சாஸ்த்ரம் ஆகிவற்றை அறிந்தவரும் , வேதங்கள் ஸ்ம்ருதிகள் ஆகிய ரஸாயனத்தை அருந்தியவரும் கர்மகாண்டம்மற்றும் ஜ்ஞானகாண்டம் ஆகியவற்றில் அறிஞரும் உலகவழக்கு கலைகள் ஆகியவற்றில் தேர்ச்சியினால் மென்மையானவரும் காவ்யம் நாடகம் கதை இதிஹாஸம் புராணம் ஆகியவற்றில் தேர்ந்தவரும் பல சொல்லி என்ன ? எல்லா ஜ்ஞான விஜ்ஞானங்களிலும் அறிஞருமாகியவர்

என்று குறிப்பிடுகிறது. ஆக கர்மகாண்டம் ஜ்ஞானகாண்டம் என்று இருவகை கல்விகளையும் கற்றுத் தேர்ச்சி பெறுதல் ஆயிரத்திருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருக்கிறதெனலாம்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு