இந்த்ரரதனின் செப்பேடு

 



முதலாம் ராஜேந்த்ரனின் மெய்க்கீர்த்தி

அயர்வண்வில்கீர்த்தி ஆதிநகரகவையில்
சந்திரத் தொல்குலத்து இந்திரரதனை
விளையமர் களத்து கிளையொடும் பிடித்து
பலதன நிறையொடு குலதனக் குவையும்

கொண்டதைக் கூறுகிறது. இந்த இந்த்ரரதனைப் பற்றிய பல்வேறு ஊஹங்கள் உள்ளன. இவன் ஸோமவம்சி என்பது சந்திரத் தொல்குலத்து இந்திரரதனை என்பதால் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த்ரரதனின் செப்பேடு ஒன்று வெளியானது. அவனது ஆறாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இந்தச் செப்பேடு அவனுடைய இளவல்கள் வங்கரதன், சங்கரதன் என்று இருந்தமையைக் கூறுகிறது. மேலும் அவன் வஜ்ரஹஸ்தனிடமிருந்து கலிங்கப் பகுதியைக் கைப்பற்றியமையும் வத்ஸராஜனைத் தோற்கடித்தமையையும் கூறுகிறது. இதன் காப்புச் செய்யுள் அவன் சிவபக்தனாக இலங்கிய தன்மையைக் கூறுகிறது. இதோ காப்புச் செய்யுள்

இந்து³꞉ ஜடாஸு விஶதோ³க்³னிஶிகா² பிஶங்கீ³
லாலாடசக்ஷுஷி க³லே விஷப⁴ஞ்ஜனாப⁴ம்।
ஸத்த்வம்ʼ ரஜஸ்தம இதி த்ரிகு³ணஸ்ய தஸ்ய
ஸ்தா²னக்ரமம்ʼ க³தவதே நம꞉ ஶிவாய॥

ஜடையில் வெண்மையான நிலவு, நெற்றிக்கண்ணில் சிவப்பான நெருப்பு, கழுத்திலோ கரிய நஞ்சு. இப்படி மூன்றிடங்களிலும் முறையே ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று முக்குணங்களைக் காட்டிநிற்கும் சிவபெருமானுக்கு வணக்கம்.

இறுதியில் பஞ்சாக்ஷரியை வைத்து யாத்த செய்யுள் சிறப்புதானே.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி