ஓடிசா முழுமையும் அதிகாரம் கொண்ட கங்கைகொண்டசோழன்

 ஓடிசா முழுமையும் அதிகாரம் கொண்ட கங்கைகொண்டசோழன்.









அவரின் அதிகாரத்தை உறுதி படுத்தும் அரச முத்திரை பழங்குடிகள் வாழும் ஒடிசாவின் உட்பகுதியில் கிடைத்திருக்கிறது.

ஒடிசாவின் மேற்குப் பகுதியில்  களகண்டி மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் புத்திகார் (Budhigarh) என்ற இடத்தில் 1999-2000 ஆண்டுவாக்கில் நடந்த ஆகழ்வு ஆய்வுப்பணியில் ஒரு முத்திரைக் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

இது பற்றிய முதல் செய்தியை "A Note on a Seal Matrix from Budhigarh"என்ற கட்டுரை வழி பிரதிப் மோகந்தி, பாபா மிஸ்ரா ஆகியோர் எழுதியக் கட்டுரை வெளிப்படுத்தியது. 

இதன் அடிப்படையில் பேரா.பி.என்.முக்கர்ஜி இதில் உள்ள பெயரை " யஜ்ன-ஸதபைத"( founder/establisher of sacrifice- வடமொழியை தமிழில் தட்டச்சு செய்தது உரியவாறு இல்லாமலிருக்கலாம்) என தவறாகப் படித்துப் பொருளுரைத்து பிராமண தியாகத்தைப் போற்றும் புரவலரின் முத்திரை என கூறி, பிராமணமதம் பழங்குடியினர் பகுதியில் கூட செல்வாக்கிலிருந்ததை இது காட்டுகிறது என்றார்.

இதை அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் மீள் வாசிப்பு செய்து அவர் கூற்றை மறுத்து, நகரி எழுத்துக்களில்  பெயர் பொறிக்கப் பட்ட நாணயத்தை ஒப்பிட்டு, அந்த முத்திரை "கங்கைகொண்ட" எனும் பெயர் உள்ளது என்பதை வெளிப்படுத்தினார். இந்த முடிவுக்கு  நாணயவியல் ஆய்வர் அளக்குடி ஆறுமுக சீத்தாராமனுடன் உரையாடியுள்ளார்.

இது தொடர்பான கட்டுரையை பேரா.ஒய்.சுப்ராயலு அவர்களுக்கான போற்று நூலில் 2001-ல் திரு.ஐராவதம் வெளியிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு