சோதிடப்பலன் கல்வெட்டு

 சோதிடப்பலன் பார்ப்பவர்களுக்காக அறிவுரை கல்வெட்டு...




திருச்சி மாவட்டம் திருவெள்ளறை என்னும் ஊரில் பல்லவ மன்னர் தந்திவர்மர் காலத்தில் ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவர் இந்த மாற்பிடுகு பெருங்கிணற்றைத் தோற்றுவித்து ஒரு பாடலையும் கல்வெட்டாக வெட்டிவைத்தார்.

  "கண்டார் காணா உலகத்தில் காதல் செய்து நில்லாதேய்

   பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய்

   தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்

   உண்டேல் உண்டு மிக்கது உலகம் அறிய வைம்மினேய்".
---------------------------
"நேற்று ஒருவனைக் கண்டேன். இன்றோ அவனைக் காணமுடியவில்லை. இறந்துவிட்டான். அத்தகைய நிலையாமையுடைய இவ்வுலகத்தில் அனைத்தின் பாலும் ஆசைகொண்டு நிற்காதீர்கள். அன்றொருநாள் நம்மை இறைவன் படைத்தானே அந்த பிறந்தநாளின் சாதகம், பலன் இவற்றைப் பார்த்துக்கொண்டு மனம் வருத்தப்பட்டு நைந்து போகாதீர்கள். வயது முதிர்ந்து கையில் கோலூன்றி நம் உடல் தளர்ந்து போவதற்கு முன்பே நம்மால் ஈட்டப் பெற்று நமக்குப் பயன்பட்டவை போக மீதம் எஞ்சியிருப்பதை இந்த உலகம் நன்மைபெற ப்ரியமாக மனம் உவந்து அளியுங்கள்" 
என்ற வேண்டுகோளே கல்வெட்டுப் பாடலாக அமைந்துள்ளது. 
-----------------------------
தகவல் (கல்வெட்டறிஞர்.முனைவர் திரு. குடவாயில்‌ பாலசுப்பிரமணியம் அவர்கள்) 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு