துருப்பிடிக்காத தூண்
மெஹ்ரோலியில் குதுப்மினாரை ஒட்டி துருப்பிடிக்காத தூண் இருப்பதும் அதில் எழுத்துப் பொறிப்புகள் இருப்பதும் அறிந்திருக்கலாம். அந்த எழுத்துப் பொறிப்புகள் சந்த்ரன் என்னும் மன்னனுடையவை. இவன் இரண்டாம் சந்த்ரகுப்தனாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்தத் தூண் எதற்காக அமைக்கப்பட்டது என்று அந்த எழுத்துப் பொறிப்பே கூறுகிறது.
தேனாயம் ப்ரணிதா⁴ய பூ⁴மிபதினா பா⁴வேன விஷ்ணௌ மதிம்
ப்ராம்ஶுர்விஷ்ணுபதே³ கி³ரௌ ப⁴க³வதோ விஷ்ணோர்த்⁴வஜ꞉ ஸ்தா²பித꞉.
அந்த அரசனால் நன்கு உபாஸிக்கப்பெற்று மனத்தில் திருமாலை நினைந்து விஷ்ணுபதமான மலையில் வ்ஷ்ணுத்வஜமானது ஸ்தாபிக்கப்பெற்றிருக்கிறது. இவ்விதம் அமைந்துள்ளது. ஆக இரும்புத் தூண் கருடத்வஜமேயன்றி வெறும் தூணில்லை என்பது அறியத் தக்கது.
Comments
Post a Comment