பொசைடோன் கோயில்

 




கிரேக்க நகர் பெலோபொன்னீஸ் கடற்கரையோரத்தில் கடல் கடவுள் பொசைடோன் கோயில் 


பண்டைய கிரேக்க கடவுளர்கள் ஏராளம் ஏராளம். அதில் முக்கியமான கடவுளர்களில் ஒருவர் கடலை தன் வசப்படுத்தி கட்டுக்குள் வைத்திருக்கும் பொசைடோன். இவர் கையில் சூலம் ஒன்றை வைத்திருப்பார். இன்று இந்தக் கடவுளர்கள்  வழிபாடுகளில் இல்லை. இவர்களது சிலைகள் அருங்காட்சியகங்களிலும் நகர் மையப் பகுதிகளிலும்  காணப்படுகின்றன. 

அண்மையில் ஜெர்மனி மைன்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட அகழாய்வு அறிக்கையின்படி, ஆஸ்திரிய தொல்லியல் நிறுவனம், மைன்ஸ் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் பல்கலைக்கழகம் , கீல் பல்கலைக்கழகம் மற்றும் எலிஸின் பழங்கால எபோரேட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் 2,500 ஆண்டுகள் பழமையான கடலுக்கான கிரேக்க கடவுள் போசைடோனின் ஒரு ஆலயத்தின் கட்டுமான தடயங்களை அகழாய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த அமைப்பு தெற்கு கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் பகுதியின் மேற்கு கடற்கரையில் உள்ள கிளெய்டி பகுதியில் அமைந்துள்ளது. ஆஸ்திரிய தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த பிர்கிட்டா எடர்   “இந்தக் கண்டுபிடிக்கப்படாத புனித தலத்தின் இருப்பிடம்  பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் ஸ்ட்ராபோ தனது எழுத்துக்களில் வழங்கியுள்ள விவரங்களுடன் பொருந்துவதாகக் குறிப்பிடுகின்றார்.  

இந்த அகழாய்வின் போது கூரை ஓடுகளின் துண்டுகள் மற்றும் ஒரு பளிங்கு சடங்கு நீர்ப் படுகையின்  ஒரு பகுதியும் மீட்கப்பட்டன.   பூகம்பங்கள் மற்றும் சுனாமிக போன்ற ஆழிப்பேரலையைத் தடுக்கும் கடவுளாக கிரேக்க கடவுள் பொசைடோன் கருதப்படுகின்றார். இதன் அடிப்படையில் இந்தக் கோயில் இப்பகுதியில் கடலுக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 
 
THANK YOU -சுபா MAM

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி