அவியனூர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அவியனூர் எனும் கிராமத்தில் உள்ள ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சோழர் கால நடுகல் ஒன்றை பார்த்துவிட்டு அவ்வூரில் உள்ள மற்ற கோவில்கள் மற்றும் வரலாற்றில் தடயங்களை பற்றிய தேடலில் மக்கள் அளித்த தகவலின் பேரில் அருகில் உள்ள பெருமாள் கோவில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக அறிந்தோம்.
கல்வெட்டு ஏற்கனவே கல்வெட்டு ஆண்டறிக்கையில்(ARE 92-93) பதிவு செய்யப்பட்டு இருப்பினும் கல்வெட்டின் தோற்றமே எங்களை வியப்புக்குள்ளாக்கியது.
ஒரு பலகை கல்லை வட்ட வடிவமாக சரியான அளவில் சக்கரம் போன்ற அமைப்பில் வெட்டி எடுத்து அதன் இருபுறமும் சமன்படுத்தி அதில் மேற்புறத்தில் பராந்தகன் காலத்திய கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அதன் பக்கவாட்டில் ராஜராஜன் காலத்திய கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
ஒரே கல்லில் அடுத்தடுத்து இரு மன்னர்களின் கல்வெட்டு வெட்டப்படுவது இயல்பு , பல இடங்களில் அப்படியான கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் இந்த இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ள கல்லின் தோற்றமும் இந்த அமைப்பும் பெரும் வியப்புக்குள்ளானது.
மேலும் இவ்வூர் சிவன் கோவிலில் ஒரு ஐந்து அடி உயர கொற்றவையும் சிவன் கோயில் வளாகத்தில் பல்வேறு காலத்தைச் சேர்ந்த துண்டு கல்வெட்டுகளும் கோவில் சுவற்றில் பதியப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டு முதலாம் பாராந்தகனின் 31 வது ஆட்சியாண்டில் அவ்வூர் சபை பெருமக்கள் அவ்வூர் ஜலஸயந தேவர்க்கு அளித்த தானத்தை பற்றி குறப்பிடுகிறது.
கல்வெட்டு வாசகம்
1. ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட
2. கோப்பரகேசரி பம்மர்க்கு யாண்டு ௩௰௧
3. முப்பத்து ஒன்றாவது அவியனூர் ஸபைப்
4. பெருமக்களோம் இவ்வூர் ஜலஸயந
5. தேவர்க்கு பணி செய்கின்ற கணப்பெரு
6. மக்களிடை னாங்கள் கொண்ட பொன் பன்னி..
7. ழ ஓதருபன்னிக்(?) கழஞ்சு பொன்னுஞ் கொன்டு
8. இதேவர் தம் படப்பைவனம் (?) ஒன்றரையும் னாவல்
9. செறுவு இரண்டு செறுவும் மரங்கால்வழி ஒரு செறுவு
10.ம் சன்திகூளி செறுவு ஏழுமாவரையும் நேந்தரப்பள்
11.ளம் இரண்டு செறுவும் ரதங்குளத்து இரண்டு செறுவு
12. ம் ஆக இவ்வனைத்து செறுவும் எற்றைக்கும் இறையிலியா
13 . கப் பணித்துக் குடுத்தோம் மஹாஸபைப் பெருமக்களோ
14 . ம் மற்றுவாதலில் போத(?) இறையு மெச்சோறும் வெட்டி
15 . வேதிநெயும் பூமி தட்டி வனத்து எப்பேர்ப்பட்டதும் கா
16 . ட்டி பெறுத்தாக(?) பணித்தோம் ஸபையோம் இபூமி
17 . தட்டி இறை காட்டென்று பணித்தானையும்
18 . இறை காட்டினானையும் வெவ்வேற்று...
19 . ..நூற்றெட்டு கரணமி....
Comments
Post a Comment